என்ன அழகு எத்தனை அழகு.. ஏர்வாடியின் பேரழகு
நன்குநேரியின் விளிம்போரத்தில் நம்பியாற்றின் கரையோரத்தில் ...
உச்சி பொத்தையின் அடிவாரத்தில் நல்ல வைரமாய் அமைந்திருப்பது ஏர்வாடி
ஊரின் அழகை வர்ணித்தால் எதை சொல்ல... எதை விட..
ஊருக்குள் வருவோரை ஊரின் எல்லையில் வரவேற்கும்
அறிவை கற்றுத் தரும் பள்ளிகூடங்கள் அழகு ஆன்மீகம் கற்று தரும் பள்ளிவாயில்களும் அழகு
ஊரில் வரப்பழகு.. வயலழகு.. வயலில் வளர்ந்து நிற்கும் வாழை மரமழகு..
தெருவழகு.. தெருவில் மறமழகு மரத்தில் பூவழகு
தெருவில் நடந்தால் உறவழகு லே... வாப்பா... எப்ப மா வந்த??? சுகமா இருக்கியா? என்ற உறவின் உபசரிப்பழகு
உறவோடு போடும் சண்டையழகு சண்டைக்கு பின் சமாதானமழகு
ஊரின் உணவலகு உணவின் சுவையழகு
சூழ்ந்திருக்கும் தென்னையழகு தென்னையின் இளநீரழகு
உயர்ந்து நிற்கும் பனையழகு பனையின் பதநீரழகு
ஊரின் "பெருசுகலழகு" பெருசுகளின் பேச்சழகு
ஊரில் நண்பர்கலழகு நண்பர்களை கண்டால் மனம் மகிழ்வதழகு
நம்பி மலையழகு நம்பி மலையில் குளிப்பதழகு
சூழ்த்திருக்கும் பொத்தைகளழகு பொத்தைளுக்கு போட்டியாய் வளர்ந்திருக்கும் நமதூர் வீடுகளழகு
TVS பன்னையழகு பண்ணையில் விழையும் பழமழகு
ஆற்றில் பொத்தை மணலழகு மணலில் கிடந்துரங்கிய அந்த கால சுகமஅழகு
கசத்தில் மீன்பிடித்து சுட்டு தின்ற சுவையழகு மாந்தோப்பில் மாங்காய் திருடி மாட்டிக்கொண்ட பயமழகு
மீன்வாங்க "சம்பை" கடைக்கு சென்றால் "நல்ல பச்ச மீன் வந்திருக்கு துடிப்பான குதிப்பு மீன் வாங்கிட்டு போ "மக்கா" க்ளோரி அன்னமை சாச்சிகளின் அன்பான பேச்சழகு
ஊரில் கசாப்பு கடையழகு கடைக்கு சென்றால் "குருவிக்குஞ்சு" மீரான் மொய்தீன் மாமா "கொன்னச்சி சேமது" காக்காவின் காருண்ணியமிக்க கருணையான கனிவான பேச்சழகு
இரவு 7 மணியளவில் ஏருவாடியின் கடைத்தெருவழகு கடைத் தெருவில் காணும் தெரிந்த முகமழகு நமக்கு தெரியாத முகம்காணும் சுகமழகு
எத்தனை எத்தனை அழகு ஏர்வாடியில் இருந்தாலும் அத்தனைக்கும் அழகு சேர்க்க நான் இல்லையே ஏர்வாடியில்...
யாரிடம் போய் சொல்வேன் 'யா அல்லாஹ்'
- பீர் முஹம்மத், மாத்தளை
|