நான் சைக்கிள் ஓட்ட படிச்சது நான் எட்டாம் கிளாஸ் படிக்கும்போதுதான். நானெல்லாம் பள்ளிக்கூடத்துல படிக்கும்போது சைக்கிள் என்பது ஒரு அபூர்வமான வாகனம். வியாபாரத்துக்காக, தொலைதூரத்துல வேலைக்குச் செல்றவங்க, வயல்ல விவசாயம் பாக்ககுறவங்க, பள்ளிக்கூடத்துல ஆசிரியரா இருக்குறவங்க இப்படி ஒரு சில பேருக்கிட்டதான் சொந்தமா சைக்கிள் இருக்கும். நம்ம ஊர்ல பல வாடகை சைக்கிள் கடைகள...் இருந்திச்சி. அப்பப்ப செல அவசர வேலைகளுக்கு - தேவைகளுக்காக சைக்கிள் தேவைப்படுறவங்க, இந்த மாதிரி உள்ள வாடகை சைக்கிள் கடையள்ள வாடகைக்கு சைக்கிள் எடுத்துக்கலாம். வாடகை ஒரு மணி நேரத்துக்கு 30 பைசாதான். இதுபோவ ஒருநா வாடகை - அரைநாள் வாடகைக்கெல்லாம் சைக்கிள் கெடைக்கும்.
நான் சைக்கிள் படிச்சது திரவியம் சைக்கிள் கடை சைக்கிள்ளதான். நம்ம ஊர்ல பல பிரபலமான வாடகை சைக்கிள் கடைகள் பல உண்டு. அதுபோல பல திறமையான சைக்கிள் மெக்கானிக்குகளும் உண்டு. நம்ம ஊரு கோவில் வாசல்ல வெங்கடாச்சலம் அண்ணாச்சி ஒரு சைக்கிள் கடை வெச்சிருந்தார். தேவி சைக்கிள் மார்ட். நம்ம ஊரு திருவளுஸ்தீஸ்வரர் பெரியநாயகி அம்மன் திருக்கோவிலுக்குச் சொந்தமான அந்த கடையில் வெளிப்பகுதியில் பத்து முதல் பதினைந்து சைக்கிள் வைத்து வாடகை சைக்கிள் கடை நடத்தி வந்தார். அதைத் தொடர்ந்து அதே பகுதியில் நாகூர் பிச்சை அப்பா ஒரு சைக்கிள் கடை தொறந்தாங்க. பானு சைக்கிள் மார்ட்.
தெற்கு மெயின் ரோட்டில் பழைய போஸ்ட் ஆபிசிற்கு எதித்தாற்போல் இடது புறம் மற்றும் வலதுபுறம் நம்ம ஊரின் இரண்டு பிரபலமான சைக்கிள் கடைகள் ஒன்று கே. எஸ். ஐ சைக்கிள் மார்ட். மற்றொன்று எம். பி. எம். சைக்கிள் மார்ட். இதில் கே.எஸ்,ஐ. சைக்கிள் மார்ட் என்பது வாடகைக்குச் சைக்கிள் கொடுப்பதோடு மட்டுமின்றி, புதிய சைக்கிள்கள் விற்பதும், சைக்கிள்களுக்கு உரிய அனைத்து ஸ்பேர் பார்ட்ஸ் - டயர் - டியூப் - ரிம், செயின், பெடல், சீட், கேரியர், ஸ்டான்ட், பெல், டைனமோ, சிக்னல்லைட் என அனைத்து விதமான ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனை செய்யப்படும் ஒரு கடையாகவும் இருந்தது. தவிர பழைய சைக்கிள்களை ஓவர் ஆயிலிங் செய்து கொடுப்பதும் அங்கு நடக்கும்.
அப்படியே வடக்கே வந்தா, பாலம் முடிவடையும்போது, பாலத்தின் மேல் பக்கம் இப்போது நம்ம ஊர் பஞ்சாயத்து போர்டு சந்தை ஆரம்பிக்கும் இடத்துல ஒரு சைக்கிள் கடை. ஸ்டார் சைக்கிள் மார்ட். (இன்ஷா அல்லாஹ் தொடரும்)
- Mohammed Meera Sahib Sahibபைத்துஸ்ஸலாம் ஏர்வாடி
|