Posted By:peer On 5/24/2013 |
|
am i pregnant or just late quiz am i pregnant or pms quiz கண்டி ஸ்டோருக்கு வடக்கே பாப்புலர் ரைஸ் மில்லுக்கு எதித்தார்போல் ஒரு சைக்கிள் மெக்கானிக் ஷாப் உண்டு. நம்ம ஊரைச் சார்ந்த மீனவ சாச்சா ஒருவர் வைத்திருந்தார். நல்ல கைதேர்ந்த சைக்கிள் மெக்கானிக். எப்போதும் 'மப்'பில்தான் இருப்பார். ஒரு முறை எனது வகுப்புத்தோழன் புதுமனை ஜவஹருக்கும் (மசூர் சலாகுதீன் காக்காவின் தம்பி) அந்த சைக்கிள் மெக்கானிக்கிற்கும் வாய்த்தர்க்கம் ஆ...கி, பின்னர் அடிதடியில் முடிந்தது. மெக்கானிக் நல்ல மப்பில் இருந்ததால், கரும்பு களையால் நல்லா சாத்திவிட்டு, நண்பன் ஜவஹர் அந்த இடத்தை விட்டு சிட்டாய் பறந்தது இன்னும் நினைவில் நிற்கிறது.
வாடகை சைக்கிள்களுக்கு என்று சில பொதுக்குணங்கள் உண்டு. எல்லா வாடகை சைக்கிள்களிலும் பின்புறம் கேரியர் இருக்காது. அப்படி இருந்தால் அது லோடு வண்டி என்ற வரிசையில் வகைப்படுத்தப்படும். உட்காருவதற்கு குஷன் சீட், சிறிய பொருட்கள் வைப்பதற்காக முன் கேரியர், அதிகம் எடை தாங்குவதற்கான ஸ்டீல் பம்பர், டைனமோ, செயின் கவர் போன்றவைகள் வாடகை சைக்கிள்களில் இருப்பதில்லை. பின்புறம் உள்ள மட்கார்டின் வெள்ளைப்பகுதியில் கண்டிப்பாக கடையின் பெயர் எழுதப்பட்டிருக்கும். அத்தோடு சைக்கிளுக்கு நம்பரும். வாடகை சைக்கிள் கடைக்காரர்கள் தங்கள் சைக்கிளை அடையாளம் காண்பது எல்லாம் அதன் எண்களை வைத்துதான். 'பத்தாம் நம்பரை எங்க காணோம்?' 'கள்ளிக்காட்டு நடராஜன் கொண்டு போனாம்ப்பா'. 'ஏழாம் நம்பர் வந்துருச்சா?' 'அது நாள் வடகைக்கு போயிருக்கு' இப்படி சில உரையாடல்களை வாடகை சைக்கிள் கடைகளில் கேட்கலாம். எல்லா வாடகை சைக்கிள் கடைகளிலும் டயருக்கு காற்றடிக்கும் பம்ப் இருக்கும். சில கடைகளில் அவர்களின் சைக்கிள்களுக்கு மாத்திரம் காற்றடிக்க பன்படுத்துவார்கள். வெளியில் இருந்து எவர் வந்தாலும் காற்றடிக்கக் கொடுப்பதில்லை. நாள் வாடகைக்குக் கொடுக்கப்படும் சைக்கிள்கள் கண்டிப்பாக இரவு திரும்பிக் கொடுக்கப்பட வேண்டும். இல்லையெனில் இரவு வாடகை தனியாக கணக்கிடப்படும்.
அடுத்து பெருநாளைக்கு சைக்கிள் எடுப்பதும் - வள்ளியூருக்கு சினிமாவுக்குப் போவதற்கு சைக்கிள் எடுப்பதும் (இன்ஷா அல்லாஹ் தொடரும்)
|