அன்புடையீர்,
அண்மை காலத்தில் முக புத்தகத்திலும், பத்திரிக்கைகளிலும் அதிக அளவில் இடம் பெரும் பெயர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. இவரை மக்கள் மறந்து விடக் கூடாது என்பதற்காக காங்கிரஸ் செயலாளர் ராகுல் காந்தியின் நிகழ்ச்சிகளில் பலவற்றை பத்திரிக்கைகள் சரிவர வெளிப்படுத்துவது கூட கிடையாதாம்.
ஆளும் கட்சியை சார்ந்த ராகுல் காந்திக்கே இந்த நிலை என்றால் தற்போது மூன்றாம் தர குடி மக்களாக நடத்தப்பட்டு வரும் இந்திய முஸ்லீம்களின் எந்தவொரு செய்தியும் மக்கள் மன்றத்திற்கு கொண்டுச் செல்வதென்பது இயலாத காரியம் தான்.
சமீபத்தில் முக புத்தகத்தில் அதிர்ச்சி செய்தி ஒன்றை கண்டேன், “முஸ்லீம் ஏதேனும் காரியமாக அலுவலகங்களுக்கு சென்றால் வேண்டுமென்றே கால தாமதம் செய்யும் படியாக” வாய் மொழி உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டுள்ளதாக அச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. அதில் எந்த அள்வு உண்மை உள்ளதோ தெரியவில்லை. ஆனால் தற்போதைய சூழ்நிலைகளோடு ஒப்பிட்டால் அதில் உண்மை இருக்கலாம் என தான் தோன்றுகிறது.
முஸ்லீமகளுக்கு எதிரான கட்சிகள், இயக்கங்கள் எல்லாம் முஸ்லீமகளை காவு கொடுத்து எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற வேகமாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். ஆனால் இஸ்லாமிய கட்சிகள் அதாவது திமுக வின் முஸ்லீம் அணியான முஸ்லீம் லீக், மமக மற்றும் எஸ் டி பி ஐ போன்ற கட்சிகள் நம் சமூகத்தை பலப்படுத்தும் எந்தவொரு காரியத்தையும் இது வரை செய்ய தொடங்கியதாக தெரியவில்லை. அவர்களின் சிந்தனை எதிர் கட்சிகளை பற்றி தான் தமிழகத்தில் திமுகவின் எதிர் கட்சி அதிமுக, அதிமுகவின் எதிர் கட்சி திமுக, பாமகவின் எதிர் கட்சி என்றால் விடுதலை சிறுத்தைகள்.....இது அரசியல். மமகவின் எதிர் கட்சி எஸ்டிபிஐ, எஸ்டிபிஐ எதிர் கட்சி என்றால் தவ்ஹீத ஜமாத், தவ்ஹீத் ஜமாத்தின் எதிர் கட்சி மமக ..... இது மார்க்கம். அதாவது மார்க்க எதிரிகள்.
ஆக மற்றவர்கள் தானும் தன் சமூகமும் வாழ அரசியல் நடத்துகிறார்கள். நம்மவர்கள் எதற்கு அரசியல் நடத்துகிறார்கள் என்பதை அல்லாஹ் அறிவான்.
கட்சிகாரர்கள் ஒன்றும் செய்யவில்லை என்பதால் நாமும் சும்மா இருந்துவிட்டால் அது தான் நாம் நம் எதிர்கால சந்ததிகளுக்கு தோண்டும் சவ குழியாகும். ஆகையால் நம் எதிர்கால் சந்ததிகளை காப்பற்ற வேண்டுமென்றால் நம்மை காவு வாங்க துடிக்கும் நம் பொது எதிரிக்கு எதிரான புதிய வாக்காளர்களை வாக்களர் பட்டியலில் அதிகப்படியாக சேர்க்க வேண்டும். அது தான் இந்திய தேர்தல் ஆணையமே ஏற்பாடு செய்துள்ளதே என்பதை ஓரம் தள்ளிவிடுங்கள். ஏனென்றால் சில குறிப்பிட்ட தினத்தங்களில் ஒரு மையத்திற்கு சென்று வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்துக் கொள்ளும் பொறுமை நம்மில் பல பேர்களிம் இல்லை. ஆகையால் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் வாழும் இடங்களில் புதிய வாக்காளாராக சேர தகுதியுள்ளவர்களை கண்டறிந்து அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று வாக்களர் சேர்க்கை விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிந்து கொள்ளலாம்.
இவ்வாண்டு பாஜகவின் எதிர் வாக்காளர்கள் அதிகப்படியாக பதிவு செய்துள்ள செய்தியை அவர்களை பலவீனப்படுத்தும்.
மேற்படி வாக்காளர் சேர்க்கைக்கு ஒரு மடிக்கணினி, இணைய தொடர்பு, இணைய கேமிரா இத்தனையும் போதும். சேர வேண்டிய வாக்காளர் தற்சமயம் வெளியூர் சென்றிருந்தால் அவரின் புகைப்படத்தை ஸ்கேன் செய்து பயன்படுத்தலாம்.
மேற்படி பதிவுகளை கீழ்கண்ட இணையதளத்தில் மேற் கொள்ளலாம்.
www.elections.tn.go.in
மேற்படி இணைய பக்கத்தை அடைந்தவுடன் Online Registration Facility என்பதை சொடுக்கி புதிய வாக்காளர் சேர்க்கைக்கு படிவம் 6 ஐ சொடுக்கவும்.
பின்பு உங்கள் மாவட்டம், மற்றும் தொகுதியை தேர்வு செய்து கொண்டு பின்பு மற்ற விபரங்களை நிரப்புங்கள்.
புகைப்படம் 300KB வரை இருக்கலாம் என்றாலும் 25 முதல் 30KB என்ற அளவில் புகைப்படத்தை தயார் செய்து கொள்ளுங்கள்.
எல்லாம் முடிந்தபின் படிவத்தில் குறிப்பிட்டுள்ள இமெயிலுக்கு வந்துள்ள கடிதத்தில் உள்ள முதல் லிங்க் வாயிலாக சம்மதிக்கலாம்.
இரண்டாவது லிங்க் வாயிலாக மேலும் திருத்தம் மேற்கொள்ளலாம்
மூன்றாவது லிங்க் வாயிலாக ரத்து செய்யலாம்.
மேலும் இதே இணையதளத்தில் Search Electoral Roll என்பதை சொடுக்கி மற்ற வாக்காளர் விபரங்களையும் தேடலாம்.
http://www.elections.tn.gov.in/searchid.htm
மோடியின் புராணம் பாடாமல் மேற்கண்ட வாக்காளர் சேர்க்கையை அதிகப்படுத்தி எதிரியை பலவீனப் படுத்துங்கள்.
இப்படிக்கு
எஸ்.டி.முகைதீன். |