Posted By:ganik70 On 12/25/2013 5:42:12 AM |
|
abortion pill cost Philippines how much is the abortion pill ph picia.it how much is the abortion pill ph
""ஆட்டிறைச்சி மற்றும் பதப்படுத்துவதற்கு தேவையான தொழில் நுட்பங்களை தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் உருவாக்கி வருகிறது,'' என, துணைவேந்தர் பிரபாகரன் கூறினார்.
ஆடுகள் உற்பத்தி குறித்த தேசிய கருத்தரங்கம் துவங்கியது. இதில் பங்கேற்ற தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழக துணை வேந்தர் பிரபாகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வெள்ளாடுகள் இரு கன்றுகளும், செம்மறி ஆடுகள் ஒரு கன்று மட்டுமே ஈன்றெடுக்கும். இந்தியாவில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த, "காரோல்' இன செம்மறி ஆடுகள், இரு கன்றுகளை ஈன்றெடுக்கும் தன்மை கொண்டவை. இவற்றின் மரபணுக்களை எடுத்து, இரு கன்றுகளை ஈன்றெடுக்கும் செம்மறி ஆடு ரகங்களை உற்பத்தி செய்ய, பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி நடந்து வருகிறது. இத்திட்டத்திற்காக மத்திய அரசு, 4 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. காரோல் ரக செம்மறி ஆடுகளிலிருந்து மரபணுகளை கண்டறிந்து, அவற்றை ஆராய்ச்சி கூடத்தில் வளர்த்து, புதிய ரக ஆடுகளை உருவாக்கும் முயற்சி நடந்து வருகிறது. "பியூசென்டிட்டி' என்ற மரபணு ஆராய்ச்சி மூலம், ஆஸ்திரேலியாவில் இரு கன்றுகளை ஈன்றெடுக்கும் புதிய ரக ஆடுகளை உருவாக்கியுள்ளனர்.
தமிழகத்தில், 79 லட்சம் செம்மறி ஆடுகளும், 92 லட்சம் வெள்ளாடுகளும் உள்ளன. உலகளவில், ஆண்டுக்கு, 137 லட்சம் டன் ஆட்டிறைச்சி பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு, 8 லட்சம் டன் இறைச்சி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு, 5 சதவீதம் இறைச்சி ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாம் உற்பத்தி செய்யப்படும் இறைச்சி பெரும்பாலும் உள்ளூர் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. இறைச்சி ஏற்றுமதியை அதிகரிக்க, ஆடுகளை பண்ணைகளில் வளர்க்க வேண்டும். எதிர்காலத்தில் ஆடுகளை இறைச்சிக்காக இனவிருத்தி செய்து, ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகள் அதிகரிக்கும். இறைச்சி உற்பத்தி மற்றும் பதப்படுத்த தேவையான தொழில் நுட்பங்களை, தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் உருவாக்கி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வி .எஸ் .ஆட்டுப்பண்ணை.
கவிந்தப்பாடி, ஈரோடு.
திரு.வெங்கடாசலம்.கைபேசி:9790656467. .
எங்களிடம் உயர்தர கலப்பினஆடுகள் போயர்+சோஜத் கலப்பின மற்றும் சிரோகி, சோஜத்ஆடுகள் கிடைக்கும்.
|