how long does it take for the abortion pill to work how long does the abortion pill take to work [TAFAREG] பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும்!!
Thanks to : TAFAREG@yahoogroups.com Saturday, May 10, 2014 10:46 PM
பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும்!!
பிள்ளைகள் விரும்பாத படிப்பை திணிக்காதிங்க பெற்றோர்களே !
பிளஸ் 2 படித்து முடித்த பிறகு மேற்படிப்பில் என்ன படிக்கலாம் என்பதே பெரும்பாலானவர்களின் கவலையாக உள்ளது. தங்கள் பிள்ளைகள் பொறியாளர்களாகவோ, மருத்துவராகவோ வரவேண்டும் என்பது பெற்றோரின் விருப்பமாக உள்ளது.
ஆனால் பிள்ளைகள் என்ன படிக்க விரும்புகிறார்கள் என்பதை பெற்றோர் கேட்பதே இல்லை. இன்ஜினீரிங் படிக்க வைக்க வேண்டும் என்று விரும்பும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு கணக்கு உள்ளிட்ட பாடங்களை திணிப்பதும், மருத்துவராக வரவேண்டும் என்று விரும்புவோர் அறிவியல் பாடங்களை திணிப்பதும் எதார்த்தமாக நடக்கிறது.
பொறியியல் மருத்துவம் அல்லாமல் கலை அறிவியல் படிப்புகள் மற்றும் பிற படிப்புகளை தேர்வு செய்து படிப்பவர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்களா என்றால் இல்லை. பொறியியல் மருத்துவம் இல்லாமல் பொருளாதாரம்,
வணிகவியல், புள்ளியியல், உள்ளிட்ட படிப்புகளை படித்து முடித்த பிறகு கூடுதலாக சில படிப்புகளை படித்தால் ஆசிரியர், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஇஎஸ், ஐசிடபிள்யூ, பார்மசிஸ்ட், நர்சிங், மைக்ரோபயாலஜி, பயோடெக் போன்ற படிப்புகளை தேர்வு செய்து படித்தாலும் வேலை வாய்ப்பு இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு நடந்து முடிந்த பொறியியல் கவுன்சலிங்கில் பங்கேற்ற மாணவர்களில் அதிமானோர் தேர்வு செய்த படிப்பு மெக்கானிக்கல் இன்ஜினீரிங் தான்.
அதே மெக்கானிக்கல் இன்ஜினீரிங் தமிழ் வழிப்படிப்பை தேர்வு செய்தவர்கள் மொத்தம் 335 பேர்தான். அதற்கு அடுத்த படியாக இசிஇ படிப்பை தேர்வு செய்தவர்கள் 25000 பேர். ஐடி படிப்பை தேர்வு செய்தவர்கள் 2176 பேர் தான். கடந்த ஆண்டு கவுன்சலிங்குக்கு அழைக்கப்பட்டவர்கள் மொத்தம் 1 லட்சத்து 78 ஆயிரத்து 664 பேர். ஆனால் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர்தான் மேற்கண்ட படிப்புகள் உள்பட 12 பிரிவுகளை மட்டுமே தேர்வு செய்தனர்.
ஆனால், மற்ற படிப்புகளை தேர்வு செய்யாமல் விட்டுவிட்டனர். ஏரோநாட்டிகல், பிரிண்டிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, கெமிக்கல் இன்ஜினீங் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளை தேர்வு செய்யவே இல்லை.
ஆனால் மாணவர்கள் விரும்பாத மேற்கண்ட படிப்புகளில் அதிக அளவில் வேலை வாய்ப்பு இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற சூழல்களால் கடந்த ஆண்டு மட்டும் 80 ஆயிரத்து 500 இடங்கள் காலி ஏற்பட்டன. இது ஒருபுறம் இருக்க பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களில் 60 ஆயிரம் பேர் பொறியியல் படிப்பை விட்டுவிட்டு வேறு படிப்புகளை தேர்வு செய்துள்ளனர்.
ஆண்டுதோறும் அண்ணா பல்கலைக் கழகங்களில் நடத்தப்படும் வேலை வாய்ப்பு முகாம்களில் கலந்து கொள்ளும் பொறியியல் பட்டதாரிகளில் வெறும் 3 ஆயிரத்துக்கும் குறைவான மாணவர்களே கம்பெனிகளால் தேர்வு செய்யப்படுகின்றனர்.
பெற்றோர் தாங்கள் விரும்பும் படிப்புகளை பிள்ளைகள் மீது திணிக்காமல் பிள்ளைகள் எதில் ஆர்வமாக இருக்கிறார்களோ அதை படிக்க வைப்பதே புத்திசாலித்தனம்.
https://www.facebook.com/photo.php?fbid=1403476749934767&set=a.1387807558168353.1073741828.100008173661620&type=1&theater
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّي
(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்;உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது)உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. (திருக்குர்ஆன்.1:5-7)
T M M K AL-KHOBAR. K.S.A I visit : www.tmmk.info www.tmmk-ksa.com I Join: facebook.com/tmmk.khobar http://tmmkalkhobar.blogspot.com |