how to get an abortion pill buy abortion pill நமது ஊரை சுற்றியுள்ள இடங்களை பற்றிய சுவாரசியமான தகவல்கள்-பாகம் 2
by : Omar Salahudeen
ஏய் எங்க போற, இதோ நம்பி மலைக்கு போயிட்டு வந்துடறேன்....இது போன்ற உரையாடல்கள் இப்போது சாதரணமாகி விட்டன..ஆம் நம்பி மலை ஏர்வாடி மக்களின் பொழுதுபோக்கு பட்டியலில் முக்கிய இடம் வகிக்கிறது என்று சொன்னால் அது மிகை ஆகாது. சிறியவர் முதல் பெரியவர் வரை மகிழ்ச்சி பொங்க இயற்கையோடு உறவாடும் இடம் மேற்கும் தொடர்ச்சி மலை. நம்மை மேற்கு தொடர்ச்சி மலையின் அருகில் வாழவைத்த அல்லாஹ்வுக்கே நன்றி சொல்ல வேண்டும்..... சிறு வயதில் நாங்கள் நம்பி மலையில் போய் குளித்து வருவோம் சில நேரம் திருக்குறுங்குடியில் இருந்து நடந்தே, சிலநேரம் ஊரில் இருந்து மிதிவண்டியில் செல்வோம், எங்களை பொறுத்தவரை நம்பி மலையில் குளித்தேன் என்று சொன்னால் அது குறைந்த பட்சம் உலக்கு அருவியில் குளித்து இருக்க வேண்டும் அதை விடுத்து கீழே மோர்மடம் (புளிய மரம்) காசத்தில் குளித்து விட்டு வந்தால் பரிகாசத்துக்கு ஆளாவோம். வெகு நாளாகவே நாங்கள் இந்த நம்பி மலையும் அதன் சுற்றி உள்ள பகுதியையும் ஆராய வேண்டும், மலையை ஏறி அந்த பக்கம் இறங்கி விடவேண்டும் என்று எண்ணி இருந்தோம் (நம்பி மலையை ஏறி இறங்கினால் கேரளா என்று தவறாக எண்ணி இருந்தோம்), ஒரு நாள் அதற்கான தெளிவான திட்டத்தை போடாமல் ஏனோ தானோ என்று ஒரு மாலை வேளையில் ஒரு பெரிய கூட்டமாக கிளம்பிவிட்டோம் , நான் , இதயம் ரசூல், அசன், காதர், ரிபாய் , அசரப் அலி , கொச்சா அசன் , போகும்போது அரிசி மட்டும் இதர மளிகை சாமான்களும் இரண்டு பிரைலர் கோழியும் வாங்கி சென்றோம், இரவு வளுக்குபாரையில் தங்கிவிட்டோம் இரண்டு கோழியையும் அடைத்து வைத்து இருந்தோம் அடுத்த நாள் பிரியாணி போடுவதற்கு, மறு நாள் ஏற முயற்சி செய்து தோல்வியை தழுவினோம். ஆளாளுக்கு ஒரு குறின் மேல் நின்று போகும் வழியை தேடி நிராசை அடைந்து வளுக்குபாரையில் சமைத்து சாப்பிட்டுவிட்டு இறங்கிவிட்டோம். மீண்டும் ஒரு நாள் தெளிவான் திட்டம் போட்டு நாங்கள் 5 பேர் மட்டும் காலையிலே கிளம்பிவிட்டோம், எவ்வளவு ஏற முடியுமோ அவ்வவல்வு தூரம் ஏறினோம் அதன் பின்பு நாங்கள் ஏற முடியாத அளவுக்கு இருட்ட ஆரம்பித்துவிட்டது , மாலை 4 மணி இருக்கும் , அங்கேயே தங்கிவிடலாம் என்று முடிவு செய்து நெருப்பு மூட்ட விறகு பொருக்க சென்றுவிட்டோம். சரியான வெளிச்சம் இல்லாத காரணத்தினால் கொண்டு சென்ற வீச்சை விறகு வெட்டுகிறேன் பேர்வழி என்று பாறையை வெட்டி நண்பன் சோலியை முடித்துவிட்டான் , மீதி இருப்பதோ இன்னொரு வீச்சும், ஒரு ஈடியும்தான். விரைவாக லட்சுமிகாந்தம் (விறகுக்கு நாங்கள் வைத்த code நேம் , ஒரு படத்தில் கவுண்டமணி பொய் கண்ணுகுட்டிக்கு இந்த பெயர்தான் வைத்து அழைப்பார்) சேகரித்து இரண்டு பாறைகளுக்கு மத்தியில் நெருப்பு மூட்டினோம், ஷேய்க் உமர் தான் சமையல் மாஸ்டர் இரவு நூட்லஸ் பண்ணி சாபிட்டோம், பால்பொடி தேயிலை சீனி எல்லாம் இருந்ததால் இரவு டீ போட்டு சுண்ட வைத்து இருந்தோம் , திடீர் என்று இரவில் சலஹுடீன் பாய் ஈட்டியை சத்தம் போட்டுகொண்டு எழுந்து கரடி கரடி என்ற அலறி ஈட்டியை வீசிவிட்டார் அந்த ஈட்டி நேராக சென்று ஒரு பாறையில் பட்டு கசதினுள் மூழ்கிவிட்டது , இரண்டு TORCH லைட் வைத்திருந்தோம் அதை வைத்து குழுவின் தலைவர் அசன் வெளிச்சம் அடித்து பார்த்தார் அது வெறும் பாறை உடனே அசன் பாய் தண்டனை வழங்குவதில் தாமதிக்காதவர், இரவு நடுநடுங்கும் குளிரில் கசதினுள் முங்கி ஈட்டியை மீட்டு எடுத்து வந்தார் சலஹுதீன் பாய்.தண்டனை நிறைவேர்யது மட்டும் இல்லாமல் ஈட்டியும் கைக்கு வந்தது. இரவு தூங்க சிரமமாகத்தான் இருந்தது ஒரே விலங்குகள் புதரில் ஓடுவது போலவும் வேட்டையாடுவது போலவும் , ஒரு வழியாக காவல் இருந்து ஆளுக்கு 2 மணி நேரம் தூங்கினோம், 5:15 மணிக்கெல்லாம் விடிந்து விட்டது போல வெளிச்சம், நாங்கள் தூங்கிய இடத்தின் 10 அடி தள்ளி ஒரு மிக பெரிய பாம்பு சட்டை கழட்டிவிட்டு சென்று இருந்தது , மாலையில் அதே இடத்தில அது இல்லை ஆகையால் இரவுதான் கலட்டி இருக்கவேண்டும் , தொட்டுபார்தபோது ஈரப்பதம் இருந்தது போல FRESH ஆகா இருந்தது , அவ்ளோ பெரிய சட்டை கழட்ட ஒரு ஒருவன்தான் இருக்கின்றான் சாட்சாத் ராஜநாகம் சட்டைதான் அது. காலையில் மாவும் பலமும் போட்டு பினது சாப்பிட்டுவிட்டு ஏற ஆரம்பித்தோம் ஏறக்குறைய 4000 அடிக்கு மேல் ஏறி இருப்போம் , நம்பி கோவிலில் இருந்து பார்த்தல் இரு மலைகளுக்கு இடையில் ஒரு குன்று போல தெரியும் அல்லவா அதனையும் தாண்டி ஏறிவிட்டோம் இன்னும் கொஞ்சம்தூரம் போனால் அந்த பக்கம் இறங்கிவிடலாம் என்று சென்று கொண்டு இருந்தபோது நடுகாட்டில் ஒருவர் சோராகுற சட்டியை வைத்து கோரி குளித்துக்கொண்டு இருந்தார் அவரை நெறுங்கி பேச்சு கொடுக்கலாம் என்று அவர் அருகில் சென்றால் நாங்கள் நின்ற இடத்துக்கு சற்று மேல் ஒரே ஆட்கள் சத்தம், பின்புதான் தெரிந்தது இவர்கள் எல்லாம் கொடி வெட்டி கடத்தும் கூட்டம் என்று. குளித்துக்கொண்டு இருந்தா நபர் வேறு யாருமில்லை வனத்துறை அதிகாரி அவர் என்காலி கூப்பிட்டு மிரட்டும் தோணியில் பேசினார், பதிலுக்கு நாமும் கொஞ்சம் ஆங்கிலத்தில் நாலு வார்த்தை பேச மனிதன் அடங்கிவிட்டார் , பின்பு அவரை நட்பு ஆகிக்கொண்டு அவருக்கும் ஒரு மாவுருண்டை கொடுத்தோம் சந்தோசமாக சாபிட்டுவிட்டு எங்களை அதற்கு மேல் பயணம் செய்ய அனுமதி மறுத்துவிட்டார் , காடு மாடுகள் மட்டும் புலிகளின் வேட்டை பகுதிக்குள் நாங்கள் வந்துவிட்டதாக தெரிவித்தார் , கொஞ்சம் மேலே ஏறினால் நேற்றியன்கால் நீர்த்தேக்கம் வந்துவிடும் என்றும் தானும் தன்னோடு வந்தவர்களும் அந்த வழியாகத்தான் இறங்க போவதாகவும் சொல்லிவிட்டு எங்களுக்கு அனுமதி மறுத்து விட்டார் , என்காலி திரும்பி செல்லுமாறு சொல்லிவிட்டு ஒரு பாதையை காட்டிவிட்டார் , அதுதான் தாயார் பாதம் போகிற வழி அதனை பிடித்து போனால் நேராக வழுக்குபாறை அதன்பின்பு FOREST HOUSE பக்கத்தில் கொண்டு வந்து விடும் , மத்திய சாப்பாடு தேங்காய் சோறு அதனுடன் நறநறக்கும் கல் , தேங்காவை பாறையில் அரைத்தால் கல்பொடிகலும் வரத்தான் செய்யும் , சரி போன வரை லாபம் என்று மனதை தேர்த்தியவாறு வீடு வந்து சேர்ந்தோம்...இன்னொரு நாள் கண்டிப்பா போகணும்னு முடிவு எடுத்தோம் ....இன்னும் போய் கொண்டு இருக்கிறோம்... .கடந்த முறை விலங்குகள் கணக்கெடுப்பு எடுக்கும் போது விண்ணப்பம் கொடுத்து நிராகரிக்க பட்டது கணக்கெடுப்பு நடத்த கல்லூரி மாணவர்கள் மட்டுமே அனுமதி நமது தெருவில் இருந்து UTHUMAN THOUFEEQ GREEN BIRD போய் இருந்தார் ... மறக்க முயாத அந்த அனுபவத்தை நிறைய பேரிடம் கூறியுள்ளேன் அதை இங்கேயும் பதிய வேண்டும் என்று தோன்றியதால் இங்கு பதிகிறேன்.... நம்பிமலை தங்கியவர்கள் இடமிருந்து வலம் காதர், அசன், சலஹுதீன், நான் , sheik umer படம் கிடைக்கவில்லை சில தரவு நமது ஊரில் இருந்து மலையை கடந்து இறங்கினால் கீரிபாரை , தூரம் 22 KM ரோடு பயணம் 54 KM இரண்டு வழி உள்ளது கொடுமுடியாறு வழி , நம்பி மலை வழி , கொடுமுடியாறு வழி எழிது ஆனால் விலங்குகள் நிறைய உள்ள பகுதி நமது ஊரில் இருந்து தெரியும் யானை மண்டை மலையின் உயரம் 1300 Meter , அதன் பின்பு தெரியும் மலையின் பெயர் அசம்பு 1600 meter உயரம் (கிட்டத்தட்ட மூனார் உயரம் ) எல்லாம் 4500 அடிக்கு மேல நமது ஊரில் இருந்து பார்த்தால் தெரியும் M வடிவிலான குன்றும் அதன் பின்பு இருக்கும் குன்றின் உயரம் 5000 அடிக்கு மேல் நம்பிமலையில் இருந்து வடமேற்கு திசையில் ஏறினால் முதுகுளிவயல், குதிரைவெட்டி, மாஞ்சோலை கோதையார் மேல் அணை இவனைதும் 20 KM தூரத்தில் உள்ளன முதுகுளி வயல் என்பது திருவான்கோர் மகாராஜா கட்டிய ஒரு அழகிய GOLF COURSE போன்ற இடம் மாவடியில் இருந்து பார்த்தால் DONAHVUR FELLOWSHIP BANGALOW தெரியும் அறிய வகை கருஞ்சிறுத்தை திருக்குறுங்குடி மலையில் தான் உள்ளது நமது ஊரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மலையை கடந்து 73 KM வரும்
https://www.facebook.com/photo.php?fbid=523818017722014&set=gm.664906000244787&type=1
|