Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
மழைநீர் சேகரிப்பு
Posted By:Hajas On 6/10/2014 3:57:55 AM

 
 
Rsga Seed Kannivadi's photo.
Rsga Seed Kannivadi's photo.
Rsga Seed Kannivadi's photo.
Rsga Seed Kannivadi's photo.
Rsga Seed Kannivadi's photo.
 
 

மழைநீர் சேகரிப்பு என்பது மழைநீரைத் திரட்டி, ஒருங்கே குவித்து, சேமித்து வைப்பது ஆகும். மழைநீரைச் சேகரித்து பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்கு, கால்நடைகளுக்கு, நீர்ப்பாசனம் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்குப் பயன்படுத்தலாம்.

வீடுகள், நிறுவனங்களின் கட்டடங்களின் மேற்கூரைகளில் இருந்தும் இதற்காகத் தயார் செய்யப்பட்ட தரைவழியாகவும் சேகரிக்கப்படும் மழைநீர் குடிநீருக்கான முக்கியமான ஆதாரமாகப் பயன்படுத்தலாம்.
உள்ளூரிலேயே கிடைக்கும் விலைமலிவான மூலப்பொருட்களைக் கொண்டு எளிதாகக் கட்டமைக்கப்பட்டு, பெரும்பாலான வசிப்பிடங்களில் வெற்றிகரமாகச் செயல்படுத்தக்கூடியது. கட்டடங்களின் மேற்கூரைகளில் சேகரிக்கப்படும் மழைநீர், பெரும்பாலும் நல்ல தரமானதாகவும் அதிக தூய்விப்புக்கு உட்படுத்தத் தேவையில்லாமலும் இருக்கிறது

தரைவழி மழைநீர் வடிகால் அமைப்பு
தரைவழி வடிகால் அமைப்பு மழைநீரை தயார்படுத்தப்பட்ட வடிகால் பகுதியிலிருந்து சேமிப்புப் பகுதிக்குக் கொண்டு செலுத்துகிறது. முறைப்படி வடிவமைக்கப்பட்டு கூடிய அளவு நீரைச் சேகரிப்பதன் மூலம், இது சிறிய சமுதாய மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்
.
மேற்கூரை மழைநீர் வடிகால் அமைப்பு
இந்த வகையான் அமைப்பில் மேற்கூரையில் விழும் மழைநீரை ஒருங்கே திரட்டி நீர்த்தாரைகள் மற்றும் குழாய்கள் மூலம் சேமிப்புப் பகுதிக்குக் கொண்டு செல்லப்படுகிறது. வறண்ட காலத்துக்குப் பிறகு பெய்யும் முதல் மழையின் நீரை சேகரிக்காமல் விட்டுவிடுவது நல்லது. இதில் தூசி, பறவை எச்சம் போன்றவைகள் கலந்திருக்கலாம். மேற்கூரை நீர்த்தாரைகள் போதுமான சரிவுடனும், பெருமழையைத் தாங்கக்கூடிய அளவு பெரியதாகவும் பலமானதாகவும் அமைத்தால் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளலாம்
கொசு உற்பத்தி, நீர் ஆவி ஆதல், நீர் மாசுபடுதல், பாசி வளர்ச்சி ஆகியவைகளைத் தடுக்கச் சேமிப்புத் தொட்டிகளை நன்றாக மூட வேண்டும். மழைநீர் சேகரிப்புத் திட்டம் நல்ல முறையில் செயல்படவும், தூய்மையாகவும் இருக்க அதற்கு வழக்கமான பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகளும் செய்ய வேண்டும்.
வீடுகளில் மழை நீர் சேகரிப்பு அமைப்புக்களை கட்டிவைத்துள்ளனர்.

வீட்டின் நடுப் பகுதியில் மழைநீர் தேங்கும்படி முற்றம் அமைத்துள்ளனர். எல்லா வீட்டிற்குமே (மாடமாளிகையாய் இருந்தாலும்) கூரைக்கு நாட்டு ஓடுகள்தான் பயன் படுத்தப்பட்டுள்ளது. மாடியின் மேல் தளத்தில் விழும் மழைநீர் நேராக கூம்பு குழாயின் வழியாக இரண்டாவது தளத்திற்கு வந்து அங்கிருந்து அடித்தளத்திற்கு கூடல் (கூடறு) வாய்த்தகரத்தின் வழியாக வந்து சேர்கிறது, இடையில் நாட்டு ஓடுகளுக்கு நீரை உறிஞ்சாத தன்மை உள்ளதால் ஓடுகளில் விழும் மழை நீரும் முற்றத்துக்குள் வந்து கொட்டும். அப்படி வந்து கொட்டும் நீரை கூடல்வாய்க்கு கீழே பெரிய பித்தளை (அகழி) அண்டாக்களை முற்றத்தின் நான்கு பக்க மூலைகளிலும் வைத்து அதன் வாயை வெள்ளை வேட்டித் துணி கொண்டு வேடு கட்டி பிடித்து சேமித்து வைக்கப்படும். பின்னர் சேமிக்கப்பட்ட நீரை தேவைப்படும் போது எடுத்து சுடவைத்து அருந்துவது இன்றும் வழக்கத்தில் இருக்கிறது.

தங்களுக்கு தேவையான நீரை அகழியில் பிடித்தது போக மேல்கொண்டு மிஞ்சும் மழை நீரை வீணடிக்காமல் தங்களது வீட்டின் ஓரத்திலேயே கால்வாய்களை அமைத்து வீட்டின் பின்புறம் கிணறு போன்ற உறையுடன் கூடிய மழைநீர் சேகரிப்பு தொட்டியையும் கட்டி வைத்து அதனுள் விழுமாறு அமைத்துள்ளனர். இப்படி இப்பகுதியில் உள்ள வீடுகளில் அந்தக் காலத்திலேயே வடிவமைக்கப்பட்ட மிகச்சிறந்த கட்டட கலையினால் சிறு துளி தண்ணீர்கூட வீணாகாமல் நிலத்தடியில் சேமித்து வைக்கப்படுகின்றது. அதே போல கழிவு நீரும் வெளியே தெருவில் செல்லாதபடி நிலத்துக்குள்ளேயே கால்வாய் அமைத்து வெளியேற்றப்படுகிறது.

இப்படி வீடுகளில் மட்டுமல்லாது கோயில்கள்,தெருக்கள் என எல்லா இடங்களிலும் மழைநீரை சேமித்துவைக்கும் தொலை நோக்கு அவர்களுக்கு இருந்துள்ளது.எப்படி என்றால் மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த செம்புரான் எனப்படும் பாறைக்கற்கலால் கட்டப்பட்டுள்ள குளங்கள் அங்கு ஒவ்வொரு ஊரிலும் அமைக்கப்பட்டுள்ளது. மழைநீர் எங்கு தேங்கி ஓடினாலும் கடைசியில் இந்த குளத்தில் கலக்கும் விதமாக கால்வாய்கள் வெட்டி வைக்கப்பட்டுள்ளன.
இதனால்தான் இப்பகுதியில் உள்ள குளங்கள் என்றும் வற்றாதவையாக உள்ளன. மொத்தத்தில் நகரத்தார்கள் கட்டிய வீடுகள் யாவும் மழைநீர் சேமிப்புக்கான வடிகால்கள் என கூறலாம்.

நிலத்தடி நீர்மட்டம் உயர
நிலத்தடி நீர்மட்டம் உயர மழைநீர் சேகரிப்புத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நிலத்தடித் தொட்டி, கிணறு, தெப்பக் குளம் அல்லது குட்டைகளில் சேமிக்கப்பட்டும் மழைநீர் தானாக நிலத்தடிக்கு உறிஞ்சிக்கொள்ளப்படுகிறது.

நகர்ப்புறப் பகுதிகளில் பயன்பாடு
மழைநீர் சேகரிப்புத் திட்டம் நகர்ப்புறங்களில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் மற்றும் மழை வெள்ளத்தை மட்டுப்படுத்தவும் பயன்படுகிறது. சேமிக்கப்படும் மழைநீர் அன்றாட வீட்டு உபயோகத் தேவைகளுக்கும், கழிப்பறைகளிலும், சலவை மற்றும் குளியலுக்கும் பயன்படுத்தலாம்.
கடின நீர் உள்ள இடங்களில் மழைநீர் முக்கியத் தேவையாக உள்ளது. மேலும் நன்றாகச் சுத்திகரிக்கப்பட்ட பின்ன்ரே குடிதண்ணீராகப் பயன்படுத்த வேண்டும்.

கட்டாய மழைநீர் சேகரிப்புத் திட்டம்
இந்திய மாநிலமான தமிழ்நாட்டில், கட்ந்த 2001ஆம் ஆண்டு முதல், கட்டாய மழைநீர் சேகரிப்புத் திட்டம் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. முதல்வர் செல்வி.செயலலிதா அவர்களின் தலைமையில் நடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த, இச்சட்டம் கொண்டுவரப்பட்டுத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
இச்சட்டத்தின்படி அனைத்து வீடு மற்றும் அனைத்து கட்டடங்களும் கட்டயாமாக மழைநீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும். தேவைப்படுவோர்க்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உருவாக்கிக் கொடுக்கும். தவறினால் மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புத் துண்டிக்கப்படும்.
இதன் மூலம் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
தற்பொழுது தென்மேற்கு பருவமை ஆரம்பிக்கும் இந்த தருணத்தை பயன்படுத்தி நாமும் மழைநீரை சேமிக்க ஆரம்பிக்கலாமா?

நன்றி

 

https://www.facebook.com/nellaieruvadi.sunnathjamath/posts/518258981634135




Technology
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..