pillola cialis cosa serve cialis generico in farmacia
வாடகை சைக்கிள் ( தொடர் கட்டுரை - பாகம் 7)
பெருநாளைக்கு முந்தைய நாள் மாலை 5 மணிக்கே வாடகை சைக்கிள் வந்த மகிழ்ச்சி. வீட்டில் ஏவப்படும் வெளி வேலைகள் அனைத்தும் படு சுறுசுறுப்பாக நிறைவேற்றப்படும். ஊருக்குள் எத்தனை தூரம் ஆனாலும் பரவாயில்லை. அத்தனை தூரமும் எளிதில் கடந்துபோய் வெகு விரைவில் நிறைவேற்றப்படும். சில வேலைகளில் கட்டளைத்தெரு செல்வதற்கு 6 வது தெரு வழியாகச் செல்லாமல்., ரோடு, சுற்றிக்கொண்டு செல்வதும் உண்டு.
ஒரு நோன்பு பெருநாள். இதேபோல் சைக்கிள் வாடகைக்கு எடுத்தாயிற்று. வாடகைப் பணம் எல்லாம் அட்வான்ஸாகவே செலுத்தியாகிவிட்டது. மாலை 5 மணிக்கே கையில் சைக்கிளும் வந்து விட்டது. ஆனால் இரவு 9 மணி ஆகியும் நாளைதான் பெருநாள் என்பத உறுதியாகவில்லை. ஊரில் அப்போத இருந்த 4 முஹல்லாக்களிலும் இரவுத் தொழுகையும் தொழுக ஆரம்பித்துவிட்டார்கள். வாடகை சைக்கிள் எடுத்தவர்கள் மத்தியில் ஒரு பெரும் கலக்கம். நாளை பெருநாள் இல்லை என்றால் சைக்கிளை திரும்பிக் கொடுக்க வேண்டும். எப்படியும் வாடகைப் பணம் திரும்ப கிடைக்கப்போவதில்லை. அதற்கு மறுநாள் பெருநாள் அன்று மீண்டும் வாடகை கொடுத்து சைக்கிள் எடுக்க இல்லாத பொருளாதாரம் இடம் கொடுக்காது. அனைவரும் கவலை தோய்ந்த முகத்துடன் கூடி ஆலோசனையில் வீற்றிருக்கஇ இரவு 10 மணிக்கு எல்லாம் பள்ளியில் தடதட தடதட என நகரா தட்டும் ஓசை. என்ன? என்று விசாரித்தபோது 'ஏய் நாளைக்குத்தான் பெருநாளாம்..கொழும்பு ரேடியோல சொல்லிட்டாங்களாம்' என்கிற சந்தோஷ வார்த்தை மக்களின் காதுகளில் இனிமையான தேனாக பாய்ந்தது.
வாடகைக்கு சைக்கிள் எடுத்த மக்கள் எல்லோரும் மீண்டும் சைக்கிள்ககளில் பலூன் கட்டி தெருக்களில் வலம் வந்து நாளைக்குத்தான் பெருநாளாம் என்கிற செய்தியை அறிவித்தது இன்றும் நினைவில் நிற்கிறது. இரவு முழுவதும் ஆசை தீர சைக்கிளில் சுற்றுவது. பெருநாளைக்கு இறைச்சி வாங்குவது என்பது இன்றைக்கும் நமது ஊரில் ஒரு பெரிய காரியமாகத்தான் இருக்கிறது. இரவு 9 மணிக்கே இறைச்சி வாங்க சென்றாலும் திரும்பி வருவது என்பது ஃபஜ்ர் தொழுகைக்கு முன்புதான். வாடகை சைக்கிள் எடுத்தவர்கள் இறைச்சி வாங்குவதற்கு என தனியாக ஒரு புரோகிராம் வைத்திருப்பார்கள். இரண்டுபேர் சேர்ந்து கொள்வது ஒருவர் இறைச்சிக் கடையில் காத்திருப்பது. மற்றவர் சைக்கிளில் சுற்றுவது. இந்த முறை ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு ஒருமுறை மாறும். கர்த்திருந்தவர் சைக்கிளிலும், சைக்கிள் ஓடியவர் காத்திருக்கவும் செய்வார். கடையிசில் இறைச்சி வாங்கியதும் இருவரும் வீடு வந்து சேருவர். அப்போது ஃபஜ்ருடைய நேரமாக இருக்கும். வீட்டிற்கு வந்து இறைச்சியை கொடுத்துவிட்டு, வாடகை சைக்கிளிலேயே வாய்க்கால் அல்லது ஆற்றில் சென்று குளித்து விட்டு, வீட்டிற்கு வந்து புத்தாடை உடுத்தி பெருநாள் தொழுகைக்குக் கூட சைக்கிளில்தான். தொழுதுவிட்டு வீட்டிற்கு வந்து உணவருந்திவிட்டு, உறவினர்களின் வீடுகளுக்கு விசிட். சில உறவினர்கள் வீடுகளில் பெருநாள் காசு கிடைக்குமே.
ஆக பெருநாள் தினம் முழுவதும் வாடகை சைக்கிளில்தான் கழியும். மதிய உணவிற்குப் பிறகு சினிமா மீது மோகம் கொண்ட ஒரு குழு வள்ளியூர் அருணா தியேட்டர் நோக்கியும், களக்காடு பாக்கியலெட்சுமி தியேட்டர் நோக்கியும் என்று கிளம்பிச் செல்லும். எஞ்சியவர்கள் உள்ளூரிலேயே மீண்டும் சைக்கிளில் சுற்றி வருவார்கள். கடைசியில் தொடர்ந்து சைக்களில் சுற்றியது, இரவில் நீண்ட நேரம் தூங்காதது போன்றவற்றால் உள்ள அலுப்பில் நல்ல டயர்டு ஆகிவிடும். எப்போடா சைக்கிளை கொடுத்துட்டு வருவோம் என்கிற நினைப்பு வந்துவிடும். சைக்கிளை திரும்ப கொடுத்துவிட்டு வரும்போது உள்ள சோகம் - பெற்ற குழந்தையை அனாதை ஆசிரமத்தில் விட்டுவிட்டு வரும் உணர்வுதான். வாடகை சைக்கிளாக இருந்தாலும், அடுத்த பெருநாள் எப்போது வரும், மீண்டும் எப்போது வாடகை சைக்கிள் எடுப்போம் என்கிற எதிர்பார்ப்புடன் வீடு வந்து சேருவோம்.. (இன்ஷா அல்லாஹ் தொடரும்)
https://www.facebook.com/photo.php?fbid=582681695087339&set=o.413878372014219&type=1&relevant_count=1&ref=nf# |