fluoxetine alcohol side effects fluoxetine and alcohol effects read
வாடகை சைக்கிள் - (கட்டுரைத் தொடர் பாகம் - 9)
வாடகை சைக்கிள்களுக்கும் ஸ்பான்பர்...!
தீண்டுவார் இல்லாமல் இருக்கும் வாடகை சைக்கிள்களுக்கு, சிலவேளைகளில் கிடைக்கவே கிடைக்காதோ என்று எண்ணி எரிச்சல் படக்கூடிய அளவுக்கு கிராக்கி வந்துவிடும். அப்படி ஒரு சந்தர்ப்பம் 1980 ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது நம்ம ஊரில் நடந்தது. 1977 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 'இம் என்றால் சிறைவாசம்.. ஏன் என்றால் வனவாசம்.. என்ற நிலையை மாற்ற எண்ணிய மக்கள், இந்தியாவில் எமர்ஜென்ஸியைக் கொண்டு வந்து ஜனநாயகத்திற்கு எதிரான ஆட்சி நடத்திய இந்திரா காந்தி அம்மையாரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, பல கட்சிகள் ஒன்றிணைந்த ஜனதா கட்சியை ஆட்சியில் அமர்த்தினர். ஒரே தலைமை இல்லாத காரணத்தால் அமர்த்தப்பட்ட ஆட்சி இரண்டரை ஆண்டுகளில் தலைபிஞ்ச கருவாடாக ஆயிற்று. 1977ல் எமர்ஜென்ஸியை எதிர்த்து ஜனதா கட்சிக்கு ஆதரவு வழங்கிய தி.மு.க. பொன்ற தமிழக கட்சிகள் தங்களது கோஷத்தை மாற்றிக் கொண்டன. 1980 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் கோஷம் வேறாக இருந்தது. 'நேருவின் மகளே வருக..! நிலையான ஆட்சி தருக' என்பதுதான் அந்த கோஷம். அந்த கோஷம்போட்ட திமுக தொண்டர்களில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன்.
1980 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நம்ம ஊர் இணைந்துள்ள திருச்செந்தூர் பாராளுமன்ற தொகுதியின் நாடாளுமன்ற காங்கிரஸ் (எப்பவும் திருச்செந்தூர் தொகுதி கூட்டணி பங்கீடு என வரும்போது காங்கிரஸூக்குத்தான் ஒதுக்கப்படும். அதனால்தான் இன்றுவரை முன்னேற்றம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கக்கூடிய நிலையில் இருக்கிறது.) தவிர எனக்குத் தெரிந்து 3 முறை தொடர்ந்த திருச்செந்தூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக கே. டி. கோசல்ராம் என்பவர்தான் இருந்திருக்கிறார். அவர் தேர்தலில் போட்டியிடும்போது ஓட்டுக் கேட்பதற்காகக் கூட நம்ம ஊரு பக்கம் வந்ததில்லை. ஆயினும் காங்கிரஸ் வெற்றிபெரும். வழக்கம்போல் நம்ம தொகுதி முன்னேற்றத்திற்காக எந்த அறிகுறியும் இன்றி அனாதையாக கிடக்கும்.
அப்படிபட்ட காங்கிரஸ் எம்.பி. ஒருவரை உருவாக்குவதற்காக, அவருக்கு ஓட்டு சேகரிக்க வேண்டி நம்ம ஊரில் தி.மு.க. முஸ்லிம்லீக், காங்கிரஸ் போன்ற கூட்டணி கட்சிகள் சார்பாக சைக்கிள் பேரணி ஒன்று நடைபெற்றது. உள்ளூர் வாடகை சைக்கிள் கடைகளில் உள்ள எல்லா வாடகை சைக்கிள்களையும் முன்பதிவு செய்து, நூற்றுக்கணக்கான வாடகை சைக்கிள்கள் மற்றும் சொந்த சைக்கிள்கள் பங்கு பெற்ற ஊர்வலம் நம்ம ஊரில் நடைபெற்ற சைக்கிள் ஊர்வலங்களில் மிகப்பெரியது எனலாம். மதியம் 2 மணிக்கு ஆரம்பித்த அந்த ஊர்வலம் நம்ம ஊரின் அனைத்து பகுதிகளையும் சுற்றிவர இரவு 8 மணி ஆகிவிட்டது.அவ்வாறு சைக்கிள் ஊர்வலம் நடந்த அந்த நாளில் நம்ம ஊரில் உள்ள எந்த வாடகை சைக்கிள் கடையிலும் சைக்கிள் இல்லை. ஏனென்றால் அனைத்து வாடகை சைக்கிள் கடைகளிலும் உள்ள சைக்கிள்களை காங்கிரஸ் வேட்பாளர் கே. டி. கோசல்ராம் சார்பாக முன்பதிவு செய்துவிட்டார்கள். இரவு 8 மணிக்கு அப்புறம் அந்த சைக்கிள் ஊர்வலம் முடிந்த பிறகுதான் வாடகை சைக்கிள்கள் அந்தந்த கடைகளுக்குத் திரும்ப கொடுக்கப்பட்டது.
1980 ஆண்டு அந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள மொத்த நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஒரேஒருத் தொகுதியைத் தவிர, மீதமுள்ள அத்தனைத் தொகுதிகளையும் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி கைப்பற்றி, இந்தியாவில் மீண்டும் இந்திரா காங்கிரஸை ஆட்சியில் அமர்த்தினர். அவ்வாறு ஒரு பிரதமர் இந்திய அளவில் ஆட்சி அமர்வதற்கு உதவிய வகையில் நம்ம ஊரு வாடகை சைக்கிள்களுக்கும் பங்கு உண்டு... (இன்ஷா அல்லாஹ் தொடரும்)
https://www.facebook.com/photo.php?fbid=583743168314525&set=o.413878372014219&type=1&relevant_count=1&ref=nf |