Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
கடைசி தலை முறை
Posted By:Hajas On 10/14/2014 4:28:03 AM

Ac Peer

- - - - - - கடைசி தலை முறை - - - - - -

1986க்கு முன்பு பிறந்த நாம் அனைவருமே கடைசி தலை முறை.

1. ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் நாம்தான்.
2. ஓனிடா மண்டையனை பாத்த கடைசி தலைமுறையும் நாம்தான்.
3. செல்போனில் பட்டனை பார்த்த கடைசி தலைமுறையும் நம்மளாதான் இருக்கும்.
4. மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறையும் நாமாதான்...!
5. கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
6. மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி, அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறையும் நம்மளாதான் இருக்கும்.
7. வெட்டிப்போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறையும் நம்மளாதான் இருக்கும்.
8. தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
9. கல்யாண மண்டபங்களிலும், கல்யாண வீடுகளிலும், உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறையும் நம்மளாதான் இருக்கும்.
10. காதல்கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி, பூஜை போட்டு, பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப்பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் 
இருக்கும்.
11. நண்பர்களுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். 
12. மாமா பொண்ணு, அத்தை பொண்ணு என ஏகப்பட்ட முறைப்பொண்ணுங்க புடை சூழ வந்த கடைசி தலைமுறையும் நம்மளாதான் இருக்கும்.
13.10th & 12th ரிசல்ட் பேப்பரிலே பார்த்த கடைசி தலைமுறையும் நாம் தான்.
14. வெட்கப்படுற பொண்ணுங்களை பார்த்த கடைசி தலைமுறையும் நாம்தான்.
15. கதவு வச்ச டிவிய பாத்த கடைசி தலைமுறையும் நாமதான் 
16. ஆடியோ கேசட்டில் பாட்டு கேட்ட கடைசி தலைமுறையும் நம்மதான்.
17. சைக்கிளில் கால் எட்டாத போதும் குரங்கு பெடல் ஓட்டியது நம்ம தலைமுறை தான்.
18. போஸ்ட் கார்டுல ரிசல்ட் வந்த கடைசி தலைமுறை நாமதான்.
19. ஜவ்வு மிட்டாயில் வாட்ச் கட்டின கடைசி தலைமுறையும் நாம்தான்.
20. நாம் படித்த புத்தகத்தை விற்று அதில் வரும் பணத்தை வைத்து, அடுத்த வகுப்புக்கும் புத்தகங்கள் வாங்கின கட்டின கடைசி தலைமுறையும் நாம்தான்.
21. கோனார் தமிழ் உரை, வெற்றி அறிவியல் உரை, இதெல்லாம் வச்சு படிச்ச கட்டின கடைசி தலைமுறையும் நாம்தான்.
22. நொண்டி, கிட்டிப்புள், பம்பரம், கண்ணாம்பூச்சி, கோலி போன்ற பலவிதமான விளையாட்டுகளுக்கும் கடைசி தலைமுறை நாம்தான்.
23. காசுகள் 1, 2, 3, 5, 10, 20, 25 பைசா நாணயங்களை கடைசியா பாத்த தலைமுறையும் நாமதான்.
24. மண் குழப்பி வீடு கட்டி விளையாடிய கடைசி தலைமுறையும் நாம்தான்.
25. இதையெல்லாம் படிக்கும்போது அதை ரசிக்கும் கடைசி தலைமுறையும் நாம்தான்.

Amjath Khan Eruvadi ஒளியும் ஒலியும் பார்க்க வீடு வீடாக சென்ற ஞாபகம் வருது

 

Faisal Khan 20. நாம் படித்த புத்தகத்தை விற்று அதில் வரும் பணத்தை வைத்து, அடுத்த வகுப்புக்கும் புத்தகங்கள் வாங்கின கட்டின கடைசி தலைமுறையும் நாம்தான்.
Kadhar Mohideen ஒளியும் ஒலியும் பார்க்க வீடு வீடாக சென்ற ஞாபகம் வருது சூப்பர்

 

Mohamed Uvais மிகப் பெரிய தொழில் நுட்ப மாற்றத்தினைப் பார்த்த தலைமுறை

 

Sahul Hameed 26. பலகையில் அலிப் பே ஓதிய கடைசி தலைமுறை 
27. டைப்ரைட்டிங் கோர்ஸ் கத்துகிட்ட கடைசி தலைமுறை 
28. ஸ்டவ் அடுப்பில் சமைத்ததை சாப்பிட்ட கடைசி தலைமுறை 

29. 12 வரைக்கும் கவர்ன்மெண்ட் ஸ்கூலில் படித்த கடைசி தலைமுறை

 

https://www.facebook.com/groups/baithussalam/permalink/726978110704242/

 

 


 



Others
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..