Peer Mohamed
ஆசையாய் இருக்கு ஆற்றில் குளிக்க ... குளித்து கரையேற படித்துறை இல்லையே என்ற கவலையாவும் இருக்கு
கரையிலும் முள்ளு மரம் ஆற்றிலும் முள்ளு மரம் எங்கே போய் குளிக்க ? அன்று ஆற்றில் பாச்சோறு போல் மணலும் படித்துறையும் இன்று ஈட்டி போல் குட்டும் முள்ளும் இடம்மாறி ஓடும் ஆறும்
ஆசையாய் இருக்கு ஆற்றில் குளிக்க ...
அன்று ஆற்றை சுற்றி பின்ன மரம் வாகை மரம்... ஆற்றை தொட்டடுத்து மாந் தென்னை தோட்டங்கள் ... இன்று சுற்றிலும் முள்ளு மரம் சூலவரவும் முள்ளு மரம்
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்று ஊரு நிறைய முள்ளு மரம்மல்லவா வளர்த்து விட்டோம்
இதை தெரிந்து வளர்த்தோம ? தெரியாம்மல் வளர்ந்ததா ?
புரியவில்லை எனக்கு - உங்களுக்கு புரிந்தால் சொல்லுங்களேன் ...
வெள்ளம் கொஞ்சம் வடிந்து 2 நாட்களுக்கு பின் தண்ணீர் தெளிந்ததுபோல வரும்.பெரிய பாலத்தின் தூண்களை சுற்றி மண் அரித்து ஆழமாக இருக்கும். ஆனாலும் நீர் நல்ல இழுப்புடன் போகும்.
அப்படி ஒரு வெள்ளத்தில், ரேடியோ மைதான படித்துறைக்கு பத்தடி தாண்டி தொடங்கும் ஆழம் பாலத்துக்கு பத்தடிக்கு பின் முடியும். இங்கு குதித்து அங்கு கரையேறுவது எங்கள் சாகசம்.
அப்படி ஒருநாள் குளித்துக்கொண்டிருக்கும்போது கிழக்கே பட்டம்கட்டி தெருவையும் தாண்டி, இங்கிருந்து நடுஆத்தில் இழுத்து செல்லப்பட்ட ஒருவன் நிக்கிறான்..
நான் இங்கிருந்து நீந்திசென்று அங்கு அவனை அடைந்து கைபிடித்து, ஆழம்பார்த்து கூட்டிசென்று , பட்டங்கெட்டி தெருவுக்கு கிழக்கே பனம்காட்டில்கரையேற்றினேன். ஹசன்சேக் வீட்டுக்கு வடக்குவீட்டு பையன். அவன் யாரென்று இன்றும் எனக்கு அடையாளம் தெரியவில்லை. ம்ம்ம்ம்ம்ம்.. அதெல்லாம் ஒரு ஒரு காலம் பழைய நினப்புடா , பேராண்டி பழைய நெனப்புடா !
எங்க வாப்பும்மா 7ம்தெரு ஆத்தில் குதித்து 9ம் தெருல கரையேறுவாங்களாம்.. (ஆதாரம்: ஐ ஓ பி சலாஹுதீன்)
நம்ம ஊருல அந்த காலத்தில் பெரிய வெள்ளம் வந்தால் ஒன்னான்தெரு கரையில் குதித்து அஞ்சான்தெரு கரையில் ஏறி மீண்டும் குதித்து ஆரான்தெரு அல்லது லெப்பை வளவு கரையில் ஏறி தனியாளாக வெள்ளத்தில் விளையாட்டு காமிப்பாங்களாம் அவங்க பெயர் "அம்மி யூசுப்"
அய்ன கயிா் நலையாம குளிக்கனும் இல்லா விட்டால் வீட்டுக்கு தொிந்துவிடும் கண்னும் சிகப்புஆக கூடாது இது தான் கள்ள குளியல் இதல்லாம் வாழக்கையில் மறக்கா முடியுமா முடத்தி கஸம் இனி வரும் மா
-தகவல் ஒரு கண்ணா
|