what is generic for zofran zofran generic
(ஏழைகளுக்கு எட்டாக் கனியாகி வரும் ஏர்வாடியின் மீன் விலை)
காலை நேரங்களில் ஏர்வாடியின் தெருக்களில் கனீரென ஒலிக்கும் குரல்கள் எம்ம்மோ! பச்ச வேணுமா?
ஆண்கள் சைக்கிளிலும், பெண்கள் தங்கள் தலைகளிலும் சுமந்து வரும் மீன்களை பச்ச என்று கூறுவது ஏர்வாயின் பழக்கம். இப்போது தெருக்களில் வந்து விற்பனை செய்வோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டது.
தாய்மார்கள் மீன் வியாபாரிகளிடம் பேரம் பேசி மீன் வாங்கும் காட்சி எப்போதும் மறக்கமுடியாத காட்சி.
அவர்கள் கூறும் விலையிலிருந்து எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்து, சரி நிறுத்து தாருங்கள் என்று சொல்லி , கூடைக்குள் கையை விட்டு இருக்கிற மீன்களை எல்லாம் ஒரு புரட்டு புரட்டி, இது என்ன இப்படி இருக்கிறது? அது என்ன அப்படி இருக்கிறது? என்று முனுமுனுத்தவாறே தங்களுக்குத் தேவையான மீன்களை தேடிப் பிறக்குவதும்,
கையை எடுங்கம்மா. இப்படி போட்டு மீனை பாடாய் படுத்தினால், நான் மற்ற இடங்களில் எப்படிம்மா மீன் விற்பது? என்று வியாபாரிகள் புலம்புவதை காதிலேயே வாங்காமல் தன் காரியத்திலேயே குறியாய் இருப்பதும்,
மீன் இருக்கும் தராசின் தட்டு தரையைத் தட்டிய பின்பும் அதில் மீனை அடுக்கிக் கொண்டே போவதும், கோபத்தில் வியாபாரி, போம்மா நீ மீனும் வாங்க வேணாம். ஒன்னும் வாங்க வேணாம் என்று கூறியவாறு தராசுத் தட்டிலுள்ள மீன்களை எல்லாம் மீண்டும் கூடைக்குள் கொட்டிவிடுவதும்,
மறுபடியும் தன் வாதத் திறமையால் வியாபாரியை சரிகட்டி தராசு தட்டு தரையைத் தட்ட மீனை வாங்கிவிட்டு, ஏற்கனவே 50 ரூபாய் என பேரம் பேசிய மீனுக்கு 40 ரூபாயைக் கொடுப்பதும், முடியவே முடியாது. இன்னும் 10 ரூபாய் கொடுங்க இல்லைனா மீனை குடுங்கம்மா என்று வியாபாரி சீறுவதும், வேறு வழியின்றி இடது கையில் இறுக்கிப் பிடித்து மறைத்து வைத்திருந்த 10 ரூபாயைக் கொடுத்துவிட்டு முனுமுனுத்தவாறே வீட்டுக்குள் செல்வதும் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள்.
காலம் பல விஷயங்களை மாற்றிவிட்டது.
இன்றைக்கு ஏர்வாடியில் மீன் விற்கும் விலை சுற்றுவட்டாரங்களில் எங்கும் இல்லாத அளவுக்கு அதிகரித்து விட்டது. வள்ளியூர் மார்கெட்டின் விலையைவிட ஏர்வாடி மார்கெட்டின் விலை அதிகம்.
பொருளாதாரம் வளர்ந்து விட்டது. வசதி வாய்ப்புகள் கூடிவிட்டது. மீன் வியாபாரிகளிடம் பேரம் பேசும் பழைய தாய்மார்களை படிப்பறிவற்றவர்கள், நாகரீகம் தெரியாதவர்கள் என்றெல்லாம் கூறி ஏளனமாகப் பார்க்கும் போக்கு அதிகரித்து விட்டது.
அவர்கள் அப்படிப் பேரம் பேசி மிச்சப்படுத்திய பணம் தான் நாம் படிப்பதற்கும், உயர்வதற்க்கும் உதவியுள்ளது என்பதையெல்லாம் மறந்து விட்டது இன்றைய தலைமுறை.
மறு பேச்சு பேசாமல் கேட்கும் காசை கையில் கொடுத்து மீன்களை வாங்கும் இன்றைய தலைமுறையின் இந்த செயல்பாட்டால், ஏர்வாடியின் பல ஏழைக் குடும்பங்களுக்கு மீன் சாப்பிடுவது எட்டாக் கனியாகி வருகிறது.
நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது, நம்மை அண்டி வாழும் அனைவரும் வாழ வேண்டும் என்ற எண்ணம் உயிர்ப் பெற வேண்டும்.
|