ஸ்மார்ட் போன்களிலும், கணினி மற்றும் டேப்களிலும் உள்ள கேம்களில் முடங்கிப் போய்விட்ட இன்றைய தலைமுறையின் இழப்புகளின் வரிசையில்...
"குச்சிக் கம்பு" என்று நமது ஊரில் அழைக்கப்படும் கில்லி விளையாட்டும் ஒன்று.
வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாமல் வீட்டில் தேங்காய் உடைக்கப் பயன்படுத்தும் மழுங்கிப் போன வெட்டாத அரிவாளை எடுத்துவந்து வெட்டு வெட்டென்று வெட்டி இறுதியில் குச்சிக் கம்பு தயாரான போது ஏற்பட்ட மகிழ்ச்சி இப்போதும் நெகிழ்ச்சியாக இருக்கிறது.
தெருக்களில் ஓட்டு வீடுகளே அதிகம் இருந்த அந்த நாட்களில் இந்த விளையாட்டால் பலியான ஓடுகளும் அதிகம்.
குச்சிக் கம்பு சீசன் வந்துவிட்டால், குச்சியைக் கில்லுவதற்காக போடப்பட்ட குழிகளை ஒவ்வொரு தெருக்களிலும் பார்க்க முடியும்
ரெடியா ரெடியா என்று கேட்டுக் கொண்டே கையில் கம்பைப் பிடித்து, குச்சிக்கு அருகில் வைத்து, முழு பலத்தையும் கம்பின் நுனி வழியாக பூமியில் செலுத்தி அதை நன்றாக அழுத்தி சுர்றென்று குச்சியை பறக்கவிடும் அழகே தனியானது.
குச்சியை அடித்து பறக்கவிட்ட பின்னர் குழிக்கும், குச்சிக்கும் இடைப்பட்ட தூரத்தை குத்துமதிப்பாக சொல்வதும், எதிரணியினர் கம்பைவாங்கி அதை அளந்து பார்ப்பதும், அதில் நடக்கும் தில்லுமுல்லும, அதனால் ஏற்படும் தள்ளுமுள்ளும் தெருவையே கலகலப்பாக்கிய தருணங்கள் மிக அற்புதமானது.
குச்சி கம்பால் அடித்து ஒருவர் கண்ணை கெடுத்தவர் வீட்டுக்கு கண்ண கெடுத்தார் வீடு என்று பேரும் வந்து விட்டது .
இந்த மகிழ்சியை பார்க்காத இக்கால சிறுவர்கள்
குச்சி கம்பால் அடித்து ஒருவர் கண்ணை கெடுத்தவர் வீட்டுக்கு கண்ண கெடுத்தார் வீடு என்று பேரும் வந்து விட்டது .
அடித்த அடியில் ஓடு மட்டுமா?உடைந்துள்ளது. எத்தனை பேர் மண்டை உடைந்துள்ளது.ஒருவருக்கு கண்ணும் போயுள்ளது. 7வது தெருவில் நாங்கள் எல்லாம் champion ஆக்கும்.
கண்முண்னே தோன்றும் அந்தகணவிலே கலங்கிடுதே ஆணந்த உணர்விலே ஆரோக்கியம் நிரைந்த விளையாட்டு
நாங்க அதுல king வாப்போ
வாப்போ சேக்கப்பா! நீ king ஆக இருக்கமாட்டாய். prince ஆக இருந்திருக்கலாம்.
கொடுப்பினை இல்லா இக்கால இளம் சிறார்கள்.
மேலதிக தகவல்:
இந்த விளையாட்டு எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. அனால் Lippa (gioco),என்று இத்தாலியில் இந்த விளையாட்டை போல அங்கு ஒரு விளையாட்டு பழக்கத்தில் உள்ளது . இதற்கு தேவைப்படும் இரண்டு குச்சிகள் (தண்டா,கில்லி),தமிழ் நாட்டிற்கு இது அறிமுகம் தேவை இருக்காது .இதற்கு இவ்வளவு நபர் தான் விளையாட வேண்டும் என்று விதிகளும் கிடையாது.இந்தியாவில் குறிப்பாக தென் இந்தியாவிலும்,வடக்கில் பஞ்சாப்,பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப்,போன்ற இடங்களில் அதிகம் விளையாடுகிறார்கள். தமிழகத்தில் கிராம புறங்களில் இது தான் தேசிய விளையாட்டு.ஆனால் கிட்டிபுல்லை அடிபடையாக வைத்தே baseball, cricket போன்ற விளையாட்டுகள் வந்திருக்ககூடும் என்று சில ஆய்வுகள் கூறுகிறது. நமக்கு தெரியாத செய்தி இதற்கு International championship tournaments நடத்தப்பட்டுள்ளன என்பது.ஐந்து முறை நடைபெற்ற போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதி இருக்கின்றன.,மூன்றில் பாகிஸ்தானும் இரண்டு ஆட்டம் யாருக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் சமமாக முடிந்துள்ளது.
விதிகள் ஒரு ஒரு இடங்களில் இந்த விளையாட்டில் விதிகள் திருத்தி விளையாட படுகின்றன.பெரிய செலவு செய்து எதுவும் வாங்க தேவை இல்லை இரண்டு குச்சி செய்தால் இந்த விளையாட்டு ரெடி.அதுவும் சுவாரசியமான விளையாட்டு.
இதன் மற்ற மொழி பெயர்கள்:
கில்லி-தண்டா-தேவநாகரி. டங்குளி - பங்களாதேஷ்.(பங்களா) சின்னி-தண்டு-கர்நாடகா.(கன்னடா) விட்டி-தண்டு-மகாராஷ்டிரா.(மராத்தி) கிட்டிபுல்லு-தமிழ். கூட்டி-பில்லா-ஆந்திரா.(தெலுங்கு) லப்ப-துக்கி-பஷ்டோ.
விளையாடப்படும் இடங்கள் :இந்தியா(குறிப்பாக தென் இந்தியா),பாகிஸ்தான்(பஞ்சாப்),இத்தாலி,அமெரிக்கா(பீ-வீ),பிலிப்பைன்ஸ்(சயடோங் )மற்றும் சில ஐரோபிய நாடுகள்.
நம்ம சச்சின் டோனி மாதிரி உள்ள கிட்டிபுல்லு "SUPERSTARS":
இந்தியா வருன்,அஜய்,ரோகித்மிஸ்ரா(IIT,Bhuvaneshwar,மாணவர்),விஜய் சௌதரி,விவேக் பரன்வல்,உபேந்தர் குமார்,சந்தீப் பிரகாஷ் . பாகிஸ்தான்: நூர் கான்,அப்துல்ஹமீது, நதீம் ஜமீல்,அஸேம் சித்திகி
மெதுவாக மறந்து வரும் கிரிக்கெட்டிற்கு முன்னோடியான இந்த விளையாட்டை கிராமத்து இளையர்கள் தான் முற்றிலும் அழிந்து விடாமல் ஏதோ விளையாடி வருகிறார்கள்.
நன்றி - முகநூல் |