Posted By:peer On 11/22/2014 12:01:50 AM |
|
கண்ணாடியைப் போல தெளிந்து ஓடிய நம் வாய்க்கால் நீர்.
நம் மக்கள் குடும்பத்தோடும், நண்பர்களோடும் குளித்து மகிழ்ந்த அற்புதமான இடங்களில் இதுவும் ஒன்று.
துணிகளைத் துவைப்பதற்காக கல்லைப் பிடிப்பதற்கு போட்டி போட்ட, சண்டைக் கூட போட்ட அந்த தருணங்களை இனிமேல் நம் நினைவுகளில் மட்டும் தான் மீட்டிப் பார்க்க முடியும்.
எல தண்ணிய கலக்காதீங்கல! அமைதியா குளிங்கல!
என்றெல்லாம் தண்ணீருக்குள் ஓடி விளையாடும் சிறுவர்களைப் பார்த்து பெரியவர்கள் அதட்டிய அதட்டல்களையும், குளித்துக் கொண்டிருக்கும் போது எருமைமாடுகள் நீருக்குள் அணிவகுத்து இறங்க, ஐய்யையோ! என அங்கலாய்த்துக் கொள்வதையும் இன்று நினைத்தாலும் இனிமையாய் இருக்கிறது.
கண்கள் இரண்டும் எண்ணி எண்ணி்ஏங்குதே காலம் இனிமேல் பளைய முரையில் மாருமோ ?
அந்த நாள் ஞாபகம் நெஞ்சினில் வந்ததே.....
|