Posted By:peer On 11/22/2014 12:38:03 AM |
|
நம்பியாற்றின் தற்போதைய புதிய பாலம் கட்டப்படுவதற்கு முன் இடிக்கப்பட்ட நிலையில் பழைய பாலம்.
பழைய பாலம் இடிக்கப்பட்டு நம் கண்களைவிட்டும் மறைந்து போனாலும், அந்த பாலத்தோடு தொடர்புடைய ஏர்வாடி மக்கள் பலரின் பால்ய கால நினைவுகள் என்றும் மறையாது.
ஆம்!
>> பாலத்துக்கு கீழே குளித்து மகிழ்ந்தவர்கள்,
>> நண்பர்களோடு இணைந்து கள்ளன், போலிஸ் விளையாட்டின் போது அதன் சுவர்களில் சுற்றி சுற்றி மறைந்தவர்கள்,
>> பொருளாதார வசதி குறைவின் காரணமாக வீட்டில் கழிப்பிடம் இன்றின் பாலத்தின் கீழுள்ள மறைவிடங்களில் தங்களின் சுய தேவைகளை நிறைவேற்றியவர்கள்.
>> தங்கம் கிடைக்கலாம் எனும் நம்பிக்கையோடு நீரில் மூக்கி மண்ணை அள்ளி அரித்துப் பார்த்தவர்கள்.
>> பாலத்தின் மேலே நின்று அவர்களை வேடிக்கை பார்த்தவர்கள்.
>> தூண்டில் வீசி மீன்பித்தவர்கள்,
>> தண்ணீர் பாம்பை பிடிக்க செல்வோம் என்று கிளம்பிப்போய் அவற்றை கல்லால் அடித்துக் கொன்றவர்கள்.
>> பள்ளிக் கூடத்திற்கு செல்லாமல், பைக்கட்டோடு மாலைவரை அங்கேயே மறைந்திருந்தவர்கள்.
>> ஆற்று மணலில் ஊற்று தோண்டி நீர் பருகியவர்கள்.
>> ஒன்பதாவது தெருவுக்கு செல்வதற்காக வேண்டி பாலத்தில் நடந்து சுற்றாமல், பாலத்தின் மேற்கு புறம் வழியாக ஆற்றில் இறங்கி, ஆடை நீரில் நனையாமல் இருக்க, முட்டிவரை அதை தூக்கிப் பிடித்துக் கொண்டு பாலத்தைப் பார்த்துக் கொண்டே மிக கவனத்தோடு கடந்து சென்றவர்கள்.
இப்படி எண்ணற்ற மனிதர்களின் நினைவுகள் அவர்களின் நெஞ்சங்களில் என்றும் மறையாமல் நிழலாடிக் கொண்டே இருக்கிறது.
இன்று இந்த இடங்களைப் பார்க்கின்ற போது.........
இனிவரும் காலங்களில் இவற்றை நினைத்தும் பார்க்கவே முடியாது. இயற்கையோடு உறவாடிய தலைமுறையினரை நம் மண் இழந்து விட்டது.
இயற்கையை இழப்பது, நமுடைய இயல்பான வாழ்க்கையை சிதைத்துவிடும் என்பதை பலர் இன்னும் உணராமல் இருப்பது ஆபத்தானது.
|