வாடகை வீடுதான் என்றாலும் .இருபது வருடத்திற்கும் மேலாக நான் பிறந்து வளந்த வீடு..
யார்மீதும் வஞ்சம் வளர்காமல்,நாமும் வாழ்க்கையில் வளர வேண்டும் என்று மனதினில் வைராக்கியம் வளர்த்த வீடு..
முன்புறம் ஓடு,பின்புறம் ஓலை,மழை நேரங்களில் ஒழுக்கும் ... எந்த இடமானாலும் அதற்கு தந்தாற்போல் வாழ கற்றுத்தந்த வீடு ...
இன்று போல் குளியல் அறை இல்லை ,கழிவறையும் கிடையாது.குட்டித்தோடம் மட்டுமே
அதிகாலை நேரம் தெருகோடியில் இருக்கும் அடிபம்பில் என் தாயார் பிடித்து வரும் நீர்தான் ,எங்கள் அத்தனை பேருக்கும் குடிக்கவும் ,குளிக்கவுமாக...
சொந்த உறவுகள் அற்றுபோய் சுற்றி இருந்தவர் எல்லாம் உறவுகளாய் வாழ்ந்த வீடு..
தெற்குவீட்டு கண்ணா,சேனாபிள்ளை கண்ணா,சீத்தைவீட்டு கண்ணா ,மாம்முட்டி கண்ணா ,மைமூன் கண்ணா,சரக்கிக்கண்ணா என எத்தனை கண்ணாமார்கள் அப்போது எங்களுக்கு ...
நான் சோர் தின்ன தொடங்கியது சொந்த வீட்டில் அல்ல எங்களுக்கு சொந்தமாக வந்தவர்களின் வீட்டில் தான்
நான் சிறு குழந்தையாக இருந்த போது ஒரு நாள், சரக்கி கண்ணா என் வீட்டில் இருக்க மத்தியான நேரம் அது சோர் ஆக்கிவிட்டாயா? என என் தாயாரிடம் கேட்கின்றார்கள் .ஆமாம் சாச்சி என்கின்றார் என் தாயார் .அப்படியானால் அகப்பை கம்பால் அடி சோறு கொஞ்சம் கின்னத்தில் பருப்பூற்றி எடுத்து வா என்றார்களாம். அப்படியே எடுத்து வந்து கொடுக்கவும் ,அதை பிசைந்து எனக்கு ஊட்ட பதறி போன என் தாயார் ,என்ன சாச்சி புள்ளைக்கு சோறு கொடுக்கின்றீர்கள் என் பிள்ளைக்கு எதாவது ஆகிடும் என கூற அட போளா, அவன் சோர் தின்ன ஆரம்பித்து ஒருமாதம் ஆகுது என்றார்களாம்....
என் உடன் பிறந்தவர்கள் மூன்று பேர்களின் திருமணங்கள் இங்கேதான் நடந்தன...
இப்போது இந்த வீட்டை பார்க்கும் போது எல்லாம் என் இதயத்தில் இறந்தகாலத்தின் நினைவுகள் அலை அலையாக வந்து போகும்...
|