Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
திரும்பிப்பார்க்கிறேன்
Posted By:peer On 6/24/2015 2:36:26 AM

mixing adderall and weed

mixing zoloft and weed

 பச்சைப்போர்வை  
பசும் புற்கள்,
ஆற்றோரம் அசைந்தாடும்  
தென்னம்பிள்ளைகள்,
கோ.அ.மீரான் காக்கா  
தோட்டத்து மாமரங்கள் ,

வெண்பட்டு விரித்த  
மணல் திட்டுக்கள் ,
வெள்ளை பஞ்சுகளாய்  
மிதக்கும் மேகக்கூட்டங்கள்

நம்பியோரை கை விடா  
நல்ல நம்பியாறு,
கிளைகளின் மேல் கூடுகட்டி  
தொங்கி அசையும் தூக்கனாங்  
குருவிக்கூட்டுக்கலசங்களாய்  
ஒன்பதாம் தெருவின் விளிம்பில்  
தொங்கும் வீடுகள் ,

ஆற்றங்கரை ஓரத்தில் அழகுப் பள்ளிவாசல் ,
மாலை ஆறு மணிக்கு மேல்  
ரேடியோ மைதான வானொலியில் வயலும் வாழ்வும்,

சின்ன தார் சாலை  
சிறிய கடை வீதி  
ஒரு குட்டிப்பாலம்  
அதையொட்டிய மீன் சந்தை,

கல்வியிலும் ,விளையாட்டிலும்  
ஊக்கம் பெற செய்த எங்கள்  
ஆண்கள் உயர்நிலைப்பள்ளி ,
பெயருக்கேற்ற என்றுமே "உப்பாத" உப்பா ஓடை,

விடியற்காலை இளமிருட்டில்  
பள்ளிக்கூடம் சென்று ,
இருட்டிய பின் ,கல்வி ஒளி பெற்று வீடு திரும்பும்,
எங்களினப் பெண்கள் .

அறிவும்,அறிவாளும் கலந்த  
ஆரோக்கியச் சிந்தனைக்  
கலாச்சாரம் .
இரண்டும் எப்போதும்
ஒன்றையொன்று உரசிக்கொள்வதில்லை.

விஞ்ஞானமும் ,மெஞ்ஞானமும்  
விரிந்து விட்ட ,எங்களூர் நெல்லை  ஏர்வாடியில்
மேற்குறிப்பிட்டவைகளில் பாதிக்கு மேல்
இப்போது அங்கு இல்லை.

எழுபது,எண்பதுகளில் அங்கிருந்த, ஏராளமானோருக்கு  ஏக்கங்களும்,ஏமாற்றங்களும் , எரிமலை மூச்சுகளாய் வெளிப்படும்......ம்.....ம்.......!

ஆக்கம்: மு.அஜ்மல் அகமது.

Source: Facebook




Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..