இந்த சொல் புகைப்படத்தில் இருக்கும் இந்த இடத்தில் குளித்து மகிழ்ந்த, சுற்றித் திரிந்த ஏர்வாடிகாரர்களில் வாழ்வில் மறக்க முடியாத சொல்!
கலங்கி என்ற சொல்லை உச்சரிக்கும் நாவுகள் இன்று ஊரில் இல்லாமலேயே போய்விட்டது.
பிளைட் வாய்காலில் இருந்து நடுவாய்காலுக்கு செல்லும் தண்ணீர் பிரியும் இடத்தில், நல்ல இழுப்புடனும் சற்று ஆழத்துடனும் சிறுவயதில் நம்மை அச்சுறுத்திய கலங்கியைக மகனுக்கு காட்டுவதற்காக அழைத்துச் சென்று பார்த்த போது நம்ம கலங்கியா இது? இப்படி ஆகிவிட்டதே? என்று மனசு கலங்கியது. ஆம்! அவ்வளவு பரிதாபமாக இருக்கிறது அதன் இன்றைய நிலை.
அதிகமாக தண்ணீர் வரும் காலங்களில் நடுவாய்காலுக்கு அளவுக்கு மீறி தண்ணீர் சென்றுவிடுவதை கட்டுப்படுத்தவோ என்னவோ தெரியவில்லை. நீர் பிரிந்து பாயும் இடத்தில் தற்போது இரும்பு சட்டர் போடப்பட்டுள்ளது.
இயற்கையை நாம் எவ்வளவு இழந்துள்ளோம் என்பதை கலங்கி போன்ற பல இடங்கள் நமக்கு சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறது.
இருப்பதையாவது பாதுகாப்போமா? அல்லது இழந்து விட்டு வருந்துவோமா?
நெல்லை ஏர்வாடி அழகும் வளமும்