புன்னைக்கொட்டைபொறுக்கிச்சேர்த்ததும் வேப்பங்கொட்டைபொறுக்கிச்சேர்த்ததும் முந்திரிக்கொட்டைபொறுக்கிச்சேர்த்ததும் காவாளைப்பூண்டுவிதையுறுவியதும் இலுப்பைப்பூபொறுக்கியதும் இன்னும் ப்னம்பழம்பொறுக்கியதும்... ...
பனங்குருத்துவெட்டி புட்டுப்பெட்டியும் குச்சிப்பெட்டியும் (குச்சியென்பது சிலேட்டில் எழுதுவது) அஞ்சறைப்பெட்டியும் (அதில் நான்கறைகளேயிருந்தாலும் அஞ்சறைப்பெட்டியென்றுதான் பெயர்!) கொட்டானும் (சிறியபெட்டி) பொட்டியும் (பெரியபெட்டி) முடைந்ததும்..
பனை தென்னை என மரமேறியதும் புளியுலுக்கியதும் தேனெடுத்ததும் மீன்பிடித்ததும் (ஊத்தாற்போடுவதும் (ஊத்தாலென்பது நொச்சிக்குச்சியால் மேற்புறத்தில் சிறிதான் வாயும் அகன்ற அடிப்புறமுங்கொண்டது.நீர்நிலைகளில் அதை கவிழ்த்து அதன் மேற்புறவாயை ஒருகையால் உள்ளேயிருக்கும் மீன் வெளையேவந்துவிடாதபடி மூடிக்கொண்டு மறுகைக்குமட்டும் வழிவிட்டு கையை நுழைத்து அதற்குள் சிக்கியிருக்கும் மீனை துழாவி பிடிப்பது. மாறிமறி ஊத்தாலை போட்டுக்கொண்டேபோனால், உள்ளே மீன் மாட்டுவதை அது ஊத்தாலில் மோதி முட்டுவதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்! சிலநேரங்களில் பாம்புமிருக்கும்!)
வாய்க்கால்களில் பறிபோடுவதும்
(நாணற்குச்சியாலோ ஈர்க்குச்சியாலோபின்னப்பட்ட ஒரு நீள்வடிவமான பெட்டிபோன்ற அமைப்பில் ஒரேயோரிடத்தில் மீன் நுழையுமளவுக்கு ஓட்டையிருக்கும். அந்த ஓட்டையானது, உள்ளேநுழையும் மீனானது அதேவழியில் திரும்பிவரமுடியாதபடி ஈர்க்குச்சிகளால் வடிவமைக்கப்பட்டிருக்கும். வாய்க்காலில் நீர் சிறிதாக வடிந்துகொண்டிருக்கும்போது குறுக்கே மணலால் நீரை தடுத்து, இந்த பறியை நடுவில் வைத்துவிட்டால், இந்த பரியின்வழியாகமட்டுமே நீர் ஓடும். ஊள்ளேநுழைந்த எல்லாமீன்களும் பறிக்குள்!)
(மழைக்காலங்களில் வயற்பரப்புகளிற்பெய்த மழை குளத்தைநோக்கியோடி அதில் கலக்கத்தொடங்கியதும் குளத்திலுள்ள மீன்களெல்லாம் கூட்டங்கூட்டமாக ஓடிவரும் நீரில் எதிர்த்துநீந்திவரும். அவற்றை கையில் ஓர் அளவுபிடிக்கத்தியைவைத்துக்கொண்டு (நீண்டபீயுள்ளகத்தி) ஓடியோடிவெட்டுவதும் வெட்டுபட்டவற்றை ஓடுகிற நீரில் அவை ஓடுமுன் ஓடியோடி பொறுக்குவதும்!)
(வயல்களில் தண்ணீர் வற்றும்போது குறுகிவரும் தண்ணீரில் கெண்டைக்குஞ்சுகள் சலசலவென்று ஓடிக்கொண்டேயிருக்கும். அவற்றை அப்படியே கைகளால் அள்ளிக்கொண்டுவந்துவிடலாம்! நீர் குறைந்து சரியானதருணம்வரும்வரை பார்த்துக்கொண்டேயிருக்கவேண்டும்.)
சிறுவயதில் படிப்புக்கப்பால் செய்துவந்த பலவேலைகளையும் எண்ணிப்பார்க்கிறேன்.
இப்போதுள்ள சிறுவர்களுக்கு படிப்பைத்தவிர எதுவுந்தெரியாது!
- பொன்முடி வடிவேல்
https://www.facebook.com/Relaxplzz/posts/931001823616814