ஆச்சரியப்பட வைக்கும் தலைவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள். !!
*******************************
“எம் ஆட்சியில் உச்சத்தை அடைந்தோம்! சாலை வசதிகளை அமைத்துக்கொடுத்தோம் ! நகரங்களை அமைத்தோம்! விமான நிலையம் ! துறைமுகங்கள்! மாபெரும் சுரங்கப்பாதைகள் மற்றும் பாலங்கள் அமைத்துக்கொடுத்தோம்.!
என்றெல்லாம் பேசுபவர்கள் இவற்றை அமைத்ததின் மூலம் எவ்வளவு ஊழல் செய்தார்கள்? எங்கெல்லாம் சொத்துக்கள் வாங்கினார்கள்? எந்தெந்த நாடுகளில் எல்லாம் பங்களாக்களை வாங்கியுள்ளார்கள்?
போன்ற விபரங்கள் தேர்தல் நேரங்களில் அல்லது மனுத்தாக்கள் செய்யும் போது சொத்தின் மதிப்பீட்டை குறிப்பிடும்போது, அல்லது தேர்தலில் போட்டியிட்டவர் தோற்றதின் பின்னால் நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.
எந்தவொரு ஆட்சியாளரும் தாங்கள் பொதுச் சொத்துக்களில் ஒரு பைசா கூட பெற்றதில்லை என்றோ, அரச சொத்துக்களை அபகரிக்கவில்லை என்றோ தைரியமாக, நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியுமா என்ன?
ஒரு ஏரியா கவுன்சிலர் அப்படி நெஞ்சுயர்த்தி கூறிவிடமுடியுமா?
ஆனால் சத்தியத்தைப்பேசி சத்தியமாகவே வாழ்ந்து காட்டிய
முஹம்மத் ரசூல் (ஸல்) அவர்கள்
தங்களின் ஆட்சி முறையில் அரச சொத்துக்களை அபகரித்தார்கள் என்றோ, பொதுச் சொத்தில் குடும்பம் நடத்தினார்கள் என்றோ, எங்கும் எந்த ஆதாரத்தையும் யாரும் காட்ட முடியாது.
ஆன்மிகம், அரசியல் போன்ற அனைத்திற்க்கும் தலைவராக வாழ்ந்து ஒரு முழு சாம்ராஜ்யத்தையே கட்டி ஆண்ட அல்லாஹ்வின் தூதர் அவர்களின் ஆடையை பாரீர் !
'மேலே போர்த்திக் கொள்ளும் ஒரு போர்வை, கீழே அணிந்து கொள்ளும் முரட்டு வேட்டி ஆகிய இரண்டையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) எடுத்துக் காட்டி ‘இவ்விரு ஆடைகளை அணிந்த நிலையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்’ என்று குறிப்பிட்டார். நூல் : புகாரி 3108, 5818
இது போதுமா? இன்னும் ஆதாரம் வேனுமா?
ஆகவே ஒட்டுமொத்த உலகத்திற்க்கும் ஓர் ஒப்பற்றத் தலைவராக மிளிர்கிறார். முஹம்மத் (ஸல்) அவர்கள்.
அத்தலைவரை அறிய வாரீர். !!
>>> அப்துல் காதிர் மன்பஈ