எங்கள் ஊர் ஏர்வாடி...
எங்கள் ஊர் நல்ல ஊர்...
மடையையும்...சாக்
கடையையும்..
நாற்றத்தோடு
பார்த்த நாம்....நம்பி
ஆற்றையும் ...அதன்
ஊற்றையும் ஏ..
மாற்றத்தோடு
பார்த்த நாம்...
தெருக்களில் பெருங்குப்பைகள் பல
குவிந்து கிடக்க பார்த்த நாம்..
நெடுஞ்சாலையில்
கரும்போலையில் நம் கால்கள்
பின்ன நடந்த நாம்...
சாலையில்லா சோலைகளும்,
இருட்டடைந்த சாலைகளும்
இரவு செல்ல பயந்த நாம்...
சிங்கப்பூர பார்த்துப்புட்டு,
நம்ம ஊர நோக்கிப்புட்டு,
ஏக்கத்தோடும், வாட்டத்தோடும்
பெரும்ம்ம்...மூச்சுவிட்ட நாம்..
பஞ்சாயத்து என்றாலே ....
கட்ட்டப்பஞ்சாயத்து என்ற நிலை..
கொஞ்சமில்லை, நஞ்சமில்லை
லஞ்சம் வாங்கும் கள்ளர் தொல்லை...
நொந்துபோன மக்களுக்கும்,
நொடிந்துபோன மனங்களுக்கும்
வந்ததுபார் விடிவுகாலம்...
நல்லவராம், வல்லவராம் ,
நல்லெண்ணம் கொண்டவராம்,
அன்பு, ஆற்றல் மிக்கவராம்,
அருமை நண்பர் அபுல்கலாம்
ஆசாத்தை தேர்ந்தெடுத்தோம் நம்
அருமை தலைவராக ....
அவரும், தம் சகாக்களும் ,
அயராது உழைப்பதினால்,
லஞ்சமில்லை, பஞ்சமில்லை
துர்நாற்றம் எங்குமில்லை.
நெடுஞ்சாலையிலே ஓலையில்லை ...
நம் தெருக்களிலும் குப்பையில்லை.
நேர்மையான நிர்வாகமும்,
தூய்மையான பராமரிப்பும்,
தரமான நீர் எங்கும்..
தடையின்றி வினியோகமும்,
ஊரெங்கும் சாலைகளும்,
ஒளி உமிழும் விளக்குகளும்.
சாலைகளும், ஓடைகளும்
ஓட்டையின்றி, உடைசலின்றி
மின்னிடுதாம் பளிங்கென...
மேல் நாட்டை மிஞ்சிடவே...
சிங்கப்பூரை பார்த்த கண்கள்,
எங்க ஊரை சொக்கினதே..
இறைவா! எம் நிருவாகம்
இன்றுபோல என்றென்றும்
ஏற்றமுடன் திகழ்ந்திடவே
அன்புடனே அருள்புரிவாய்...
நல்லூருக்கு உதாரணமாய்..
சொல்வதற்கு நம்மூரே...
எங்கள் ஊர் ஏர்வாடி ....
எங்கள் ஊர் நல்ல ஊர் ....
ஆக்கம்: Mahmood Basheer Ahamed