Posted By:peer On 1/16/2016 1:09:30 AM |
|
கவிதை : ஏர்வாடி சிந்தா
வீரமொன்று தாய்மண்ணை தன் ரத்தத்தால் அலங்கரித்து கண்ணயர்கிறது .................... புதியதாய் ஒரு வெள்ளி .. பூத்து நேசத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த மண்ணை . ................ கோடி விழிகளின் நல்லுறக்கத்திற்காக நீங்கா துயிலுற்றிருந்தன இதுவரை உறங்காது விழித்திருந்த விழிகள் இரண்டு .. .................... இன்னும் எத்தனை உயிர்களை கொன்று எழுதப்படுமோ எல்லைக்கொடுகளின் அரசியல் ....................... காதலுடன் இச்சவப்பெட்டியை சேர்த்தணைக்கிறது தேசிய கொடி . ............................... கண்ணீருடனே .. தலைசாய்க்கின்றன சுதந்திரகாற்றில் .. உதிர்ந்துவிழும் மலர்கள் .....................
நேசத்துடன் தன்மகனை நெஞ்சிற்குள் புதைத்துகொள்கிறாள் தாயொருத்தி .. ............ இந்த உதிரத்துளிகளிலாவது ஒட்டுப்படுமா இனத்தாலும் மதத்தாலும் உதிர்ந்து விழுந்த நம் தேசியம் ....................... தனக்கென ஒரு வரலாறை எழுத முற்படுகின்றது அரவணைப்ப இழந்த மகளின் பார்வையொன்று .......................... வீர மரணத்திற்க்கென்றே அர்ப்பணிக்க பட்ட உயிர்தான் என்றாலும் என்ன பதில் சொல்லப்போகிறோம் ? எதிரியின் இல்லத்தில் விருந்துண்டு எச்சில் இலை எறிவதை தவிர்த்து ...?
|