Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
திருநெல்வேலி‬.....ஊர் பெருமை!!
Posted By:Hajas On 5/1/2016 2:52:38 AM

 

திருநெல்வேலி‬.....ஊர் பெருமை!!

எலே மக்கா!!

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் வாழ்பவர்களில் 40% திருநெல்வேலி,தூத்துக்குடியை சேர்ந்தவர்களே. சென்னையின் பெருமைக்கு காரணம் நாங்களே,

தமிழ்நாட்டின் பள்ளி ஆசிரியர்களில் 40% பேரும், கல்லூரி ஆசிரியர்களில் 30% பேரும் நெல்லையையும், அதன் சகோதர மாவட்டமான தூத்துக்குடியை சார்ந்தவர்களே,

தமிழ்நாட்டின் இரண்டாவது நெற்களஞ்சியம் நெல்லை தான்...எனவே எங்கள் தேவை எங்களாலே பூர்த்தி செய்ய படுகிறது,

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் ஒரு திருநெல்வேலியை சேர்ந்த நபர் தெரிந்தவராக கண்டிப்பாக இருப்பர்,

இந்தியாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் இருப்பவர்களில் தமிழர் இருந்தால் அவர் நெல்லையை சேர்ந்தவராகவே இருப்பார், Familiar Industriallists from Nellai are
T V Sundram Iyengar ( TVS Group ), S Anatharamakrishnan ( Amalgamations Group ), Padma Bhushan Shiv Nadar ( Founder Chairman, HCL Technologies ), 
AD Padmasingh Issac ( Chairman & MD, Aachi Masala Group ), V G Paneer Das ( Founder, VGP Group ), M G Muthu ( Founder, MGM Group ),Dr.Sivanthi Adhiththanar ( Dina thanthi daily ).

தமிழ்நாட்டில் உள்ள ஒரேஒரு வற்றாத் ஜீவநதி எங்கள் தாமிரபரணி தான்...தென் இந்திய 8 ஜீவநதிகளில் தமிழகத்தின் ஒரே நதி எங்கள் தாமிரபரணி தான். எங்கள் தாமிரபரணி தான் நெல்லை, மற்றும் சகோதர' மாவட்டங்களான தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியின் தாகம் தீர்க்கிறது. தமிழக நதிகளில், தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்நாட்டில் பயணித்து தமிழ்நாட்டில் கடலில் கலக்கும் ஒரே தமிழக நதி எங்கள் தாமிரபரணி தாய் தான்,

 

தமிழ்நாட்டின் அழகான தைரியமான பெண்கள் என்றால் எங்கள் நெல்லை, தூத்துக்குடி சகோதரிகள் தான்...சான்று: தமிழ்நாட்டின் பெண் போலீஸ் எண்ணிகையில் 25% பேர் எங்கள் சகோதரிகள் தான். பெண்கள் அதிகமாக கைத்தொழிலில் ஈடுபடும் மாவட்டங்களில் நெல்லை முதலிடம்,

தமிழக புவியியல் அமைப்பில் கடல்,மலை,காடு,வயல்,பாலைவனம் என அனைத்தும் உள்ள ஒரே மாவட்டம் எங்கள் நெல்லை தான். எனவே நெல்லையை குட்டி தமிழ்நாடு என்று கூட சொல்லாம். ஏனென்றால் நெல்லையின் சில ஊர்கள் ஊட்டி, கொடைக்கானல் போலவும், சில ஊர்கள் ராமநாதபுரம் போலவும், சில ஊர்கள் தஞ்சாவூர் போலவும், சில ஊர்கள் நாகப்பட்டினம் போலவும், சில ஊர்கள் அதிக காடுகள் கொண்ட ஈரோடு போலவும் இருக்கிறது. இப்படி ஒரு புவியியல் அமைப்பு உலகில் எந்த நிலப்பரப்பிலும் இல்லை,

தமிழ்நாட்டின் எல்லா மாவட்டத்திற்கும் நிலம் வழியாக செல்ல வேண்டுமானால் பல வழிகளில் செல்லலாம். உதரணமாக சென்னை செல்ல வேண்டுமானால் திருச்சி வழியாகவும் செல்லலாம். கோவை சென்று சேலம் மற்றும் தருமபுரி வேலூர் வழியாக திருச்சி யை தொடாமலே போகலாம். இப்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பல வழிகளில் அதன் அண்டை மாவட்டம் வழியாக செல்லாமல் செல்லலாம். ஆனால் கன்னியாகுமரி மாவட்டம் செல்ல வேண்டுமானால் நெல்லை மாவட்டத்தில் நுழையாமல் செல்லவே 
முடியாது,

தமிழில் எங்கள் நெல்லை தமிழ்க்கு இணை எங்கள் நெல்லை தமிழ் தான்... "ஏலே, சவுக்கியமா ஏலே"

திருநெல்வேலி,தூத்துக்குடி என நிர்வாக ரீதியாக பிரிந்து இருந்தாலும் எங்கள் இரு மாவட்ட மக்களுக்கும் பின்னி பிணைந்து வாழ்கிறோம். தமிழ்நாட்டில் இப்படி சகோதரத்துவமாக இதுவரை எந்த இரு மாவட்டங்களும் இருக்க வாய்ப்பு கிடைக்கவும் இல்லை. இனிமேல் இருக்கபோவதும் இல்லை,

ஒவ்வொரு வருடமும் பள்ளி கல்வி தேர்ச்சியில் நாங்களே அதிக சதவிகிதம் தேர்ச்சி பெருவோம். சென்னை,கோவை.திருச்சி.
மற்றும் மதுரை யை விட. முதல் முன்று இடங்களில் நெல்லை பிராந்திய பள்ளி மாணவர்கள் இல்லாமல் இதுவரை வந்தது இல்லை, தமிழக 10th & +2 முடிவுகள்,

பாண்டிய மன்னர்களின் முற்கால தலை நகரம் நெல்லை தான்..

இன்னும் 100 வருடங்களுக்கு பிறகு தமிழ் நாட்டில் தண்ணீர் இருக்கும் இடங்கள் என்று ஒன்று இருக்குமானால் அது நெல்லை மற்றும் கன்னியாகுமரி மட்டும் தான்,

உலக சுகாதார நிறுவனம் கணக்கு படி, இந்தியாவில் வாழ தகுதியான
நகரங்கள் என்ற வரிசையில் தமிழ்நாட்டின் இருந்து தேர்வு செய்யப்பட்ட இரண்டு மாவட்டத்தில் ஒன்று நெல்லை இன்னொன்று கன்னியாகுமரி.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்பிள்ளை. பாரதியார்,
சுப்பிரமணிய சிவா, புலித் தேவன், வீர பாண்டிய கட்டபொம்மன், மாவீரன் சுந்தரலிங்கம், வாஞ்சிநாதன், வீரன் அழகுமுத்துகோன், ஒண்டி வீரன், மார்ஷால் நேசமணி, தோழர் ஜீவா, வீரமாமுனிவர், முஹமது இஸ்மாயில், போன்ற பல சுதந்திர போராட்ட வீரர்கள் பிறந்த புண்ணிய பூமி..தமிழ்நாட்டில் அதிக சுதந்திர போராட்ட வீரர்கள் பிறந்த பூமி எங்கள் நெல்லை.கர்ம வீரர் காமராஜர் விருதுநகரில் பிறந்திருந்தாலும் அவருக்கு நெல்லை,தூத்துக்குடி மற்றும் குமரி மக்கள் மீது அன்பு அதிகம்.

நெல்லைகார்களின் அன்புக்கும் எல்லை கிடையாது. கோபத்திற்கும் எல்லை கிடையாது. இயல்பாகவே நெல்லை மக்களுக்கு பிட்யுட்டரி சுரப்பி செயல்பாடு அதிகம்..

மதச்சார்பின்மைக்கு சான்று நாங்கள் தான். நெல்லையில் கோவில்கள் அருகில் மசூதி யை பார்க்கலாம், மசூதி அருகில் சர்ச் யை பார்க்கலாம்..
தமிழ்நாட்டில் இதுவரையில் மதகலவரங்கள் நடைபெறாத மாவட்டங்களில் நெல்லையும் ஒன்று.

Tirunelveli Medical College( govt ) TMC, Govt College of Engg Tirunelveli, Tirunelvili Law College, Govt agricultural college, Govt Siddha Medical College, Govt Veterinary College, என தமிழ்நாட்டின் உயர்கல்வி மையமாக திகழ்கிறது நெல்லை....

தமிழ்நாட்டில் அப்பாவுக்கு அதிக மரியாதை தரும் பசங்க நெல்லை பசங்க தான். பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறைவாக பதிவாகும் மாவட்டங்களில் நெல்லை மற்றும் தூத்துக்குடி முதலிடம். பதிவு திருமணங்கள் குறைவாக நடக்கும் மாவட்டங்களில் திருநெல்வேலியும் ஒன்று. விவாகரத்து குறைவாக நடக்கும் மாவட்டங்களில் நெல்லை முதலிடம். முதியோர் காப்பகங்கள் குறைவாக உள்ள மாவட்டமும் எங்கள் திருநெல்வேலி தான்.

தமிழ்நாட்டில் சென்னை,கோவைக்கு பிறகு அதிக இளைஞர்கள் உள்ள மாவட்டம் நெல்லை தான். " District of Youth "

ஒரு ஆண்டில் வெளியாகும் தமிழ் படங்களில் 50% படங்கள் திருநெல்வேலியை மையமாக கொண்டே வெளிவருகிறது....

அப்புறம் எங்க அல்வா...கொடுத்துட்டேன்......!

proud to be an "TIRUNELVELIAN and THOOTHUKUDIAN ".ஏலே இது எங்க ஏரியாலேன்..!

https://www.facebook.com/groups/tirukan/permalink/888485394630417/




Others
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..