lexapro and weed lexapro and weed good website lexapro and weed effects
#வெங்காய சாகுபடி தொழில் நுட்பம்
தற்பொழு மதலைமுத்து என்ற விவசாயி வெங்காயம் நடவு செய்ய வெங்காயம் தேர்வு செய்து அவற்றை நடவிற்காக இரண்டு பல் உள்ள வெங்காயத்தை பிரித்துக்கொண்டு இருக்கிறார்கள் பிரித்து அவற்றை நுனிக்கருகல்நோய் தாக்குதல் இல்லாமல் இருக்க சூடோமோனஸ் 300 கிலோ விதைக்கு 2கிலோவும் வேரழுகல்நோய் தாக்காமல் இருக்க டிரைக்கொடெர்மா விரிடி 2கிலோவும் தழைச்சத்து கொடுக்க அசோஸ்பைரில்லம் 2கிலோவும் மற்றும் மணிச்சத்துக்களை கொடுக்க பாஸ்போபாக்டீரியா 2கிலோவும் விதையிலேயே கலந்து விதைநேர்த்தி செய்ய விதையை பிரிக்கின்றனர்.
வெங்காயரகம் - சாதாரகம்
பட்டம் வைகாசி- புரட்டாசி- மார்கழி
விதையளவு
ஒட்டு ரகம் 500 கிலோ. கோ -5 விதையாக இருந்தால் ஒரு கிலோ
நிலம் தயாரித்தல்
நான்கு உழவு போடவேண்டும். கடைசி உழவின் போது ஒரு ஏக்கருக்கு ஜிப்சம் 200 கிலோ, தொழுஉரம் 5 டன் போட வேண்டும்.
பார் அமைப்பு
1½ அடி அளவுள்ள பார் கரை இருக்க வேண்டும்.
விதைநேர்த்தி முறை
2கிலோ அசோஸ்பைரில்லம், 2 கிலோ பாஸ்;;;போபாக்டீரியா, 2 கிலோ வேம் 2 கிலோ டிரைக்கோடெர்மா விரிடியை . 2 கிலோ சூடோமோனஸ் 10 லிட்டர் நன்கு ஆறிய அரிசி வடிகஞ்சியுடன் கலந்து ஒரு ஏக்கருக்குத் தேவையான சிறிய வெங்காயத்தை நனைத்து நடவு செய்ய வேண்டும்.
விதை நடவு
10. செ.மீ இடைவெளியில் கரையின் இரு புறத்திலும் நட வேண்டும்.
நீர் நிர்வாகம்
நடவு தண்ணீர் மற்றும் 3ம் நாள் உயிர் தண்ணீர் விடவேண்டும். பிறகு 5 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விடவேண்டும். அறுவடைக்கு 15 தினங்களுக்கு முன்னால் தண்ணீரின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும்.
உர நிர்வாகம்
டி.ஏ.பி. 50 கிலோ,பொட்டா~; 50 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 30 கிலோ ஒரு ஏக்கருக்கு இடவேண்டும்.
களை நிர்வாகம்
ஆட்கள் மூலம் களை எடுக்கலாம். அல்லது வெங்காயம் நட்ட 3ம் நாளில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2½ மில்லி கோல் என்ற களைக் கொல்லியை தெளிக்கலாம். உயிர் உரம் உரச் செலவினைக் குறைக்க உயிர் உரமான அசோஸ்பைரில்லம் 2 கிலோ, பாஸ்போபாக்டீரியா 2 கிலோ, டிரைக்கோடெர்மா விரிடி 2 கிலோ, 50 கிலோ அளவுள்ள மக்கிய ஆறிய தொழு உரத்துடன் கலந்து இடவேண்டும்.
வளர்ச்சி ஊக்கி பயிர் நடவில் இருந்து 35ம் நாள், 50ம் நாள் மாலை வேளையில் வளர்ச்சி ஊக்கி ஏதாவது ஒன்றை தெளித்து மகசூலை அதிகரிக்கலாம்.
செடி வளர்ச்சி சுமாராக இருந்தால் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என்ற அளவில் 19 : 19 : 19 கரையும் உரம் தெளித்து செடி வளர்ச்சியை அதிகப்படுத்தலாம்.
செடியின் வளர்ச்சி அதிகமாக இருந்தால் மல்டிகே ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் தெளித்து செடியின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி மகசூலை அதிகப்படுத்தலாம்
நோய் கட்டுப்பாடு வேரழுகல் நோய்
அறிகுறி
வயலில் ஆங்காங்கே தூர்கள் காய்ந்து காணப்படும். பாதிக்கப்பட்ட வெங்காயத்தை பிடுங்கிப்பார்த்தால் வேர் அழுகி காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறை
3 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி என்ற பூஞ்சான மருந்தினை மண்ணில் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.
நுனிகருகல் நோய்
அறிகுறி
இலையின் அடிப்பாகத்தில் பச்சை நிற சிறிய பேன்கள் தென்படும். வெங்காயப் பயிரின் நுனி கருகி இளம்மஞ்சள் நிறமாக இருக்கும். ஆரம்ப காலத்திலேயே இந்நோயை கட்டுப்படுத்தாவிட்டால் வயல் முழுவதும் பரவி வெங்காயம் வைக்காமல் நின்றுவிடும்.
கட்டுப்படுத்தும் முறை
ஒரு ஏக்கருக்கு 600 கிராம் சூடோமோனாஸ் 100 மில்லி ஒட்டுப்பசை கலந்து தெளிக்கவேண்டும்.
இரசாயன முறை கட்டுப்படுத்தும் முறை
300 கிராம் டைத்தேன் எம். 45 அல்லது 150 கிராம் கார்பன்டிசம் இதில் ஏதாவது ஒன்றை 500 மில்லி நிம்பிசிடின் மருந்துடன் சேர்த்து கலந்து ஒரு எக்கருக்கு தெளிக்கலாம். அல்லது
ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2மில்லி என்ற அளவில் ஹரோக்கிரானை தெளித்து கட்டுப்படுத்தலாம்
பூச்சி கட்டுப்பாடு பச்சைப்புழு
அறிகுறி
பச்சைப்புழு அனைத்து காய்கறிப் பயிர்களையும் தாக்கும். வெங்காயத்தில் இலையின் உட்புறம் இருந்து சாப்பிடுவதால் இலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு வெங்காயப் பயிர் காய்ந்து விடும்.
கட்டுப்படுத்தும் முறை
மோனோகுரோட்டோபாஸ் அல்லது குளோரிபைரிபாஸ் ஏக்கருக்கு 400 மில்லியுடன் 100 மில்லி ஒட்டுப்பசை கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
முக்கிய குறிப்பு
அறுவடைக்கு 15 தினங்களுக்கு முன் மாலிக் ஹைட்ராக்சைடு என்ற பயிர் ஊக்கியை தெளிப்பதால் வெங்காயத்தை சேமிக்கும் போது ஏற்படும் அழுகல் நோய் மற்றும் எடை குறைவினை தவிர்க்கலாம்.
https://www.facebook.com/photo.php?fbid=604344173077686&set=a.240157109496396.1073741827.100005063264040&type=3&permPage=1 |