தாய்: என்னருமை மகனே! உன் பிறப்பில் நான் என் மரணத்தோடு போராடினேன். நீ நோய்வாய்ப்பட்டு, பின்னிரவுகளில் அழுது கொண்டே இருந்த பொழுதெல்லாம் தூக்கமற்ற பல இரவுகளை கழித்துள்ளேன். உனக்கு உணவூட்டாதவரை நான் உணவு உட்கொண்டதேயில்லை. உன்னை இன்று நீ உள்ள இந்நிலைக்கு கொண்டுவர எண்ணிலடங்கா வலிகளையும் தாங்கிக் கொண்டேன். என்னருமை மகனே! இதற்காக உன் தாய் எனக்கு என்ன கைம்மாறு பகரப்போகிறாய்?
மகன்: என்னன்புத் தாயே! நான் வளர்ந்ததும் தொழில் தேடி, நன்கு உழைத்து உங்களை இந்த உலக இன்பங்களால் மகிழ்விப்பேன்.
தாய்: என்னருமை மகனே! உன் தந்தை இதை ஏற்கனவே செய்துவிட்டார், இதையே உன்னிடமிருந்தும் நான் எதிர்பார்க்கவில்லை.
மகன்: என்னன்புத் தாயே! நான் நற்பண்புமிக்க ஒரு பெண்ணை தேடி திருமணம் செய்வேன்; அவள் நான் வீட்டில் இல்லாத போது உங்கள் அன்போடு அரவணைப்பாள்.
தாய்: என்னருமை மகனே! எனக்காக சேவையாற்றுவது என் மருமகள் மீது கடமையுமில்லை; உன் தாய் நான் அதை அவளிடம் எதிர்பார்க்கவுமில்லை.
மகன்: என்னன்புத் தாயே! நீங்களே கூறுங்கள், நான் உங்களுக்கு எவ்வாறு தான் கைம்மாறு செய்வது?
தாய்: (கண்களில் கண்ணீர் மல்க) என் மரணத்தில் என்னைத் தூக்கிச் செல்ல உன் தோள் கொடு மகனே! உன் தொழுகைகளிலெல்லாம் எனக்காக கையேந்திடு மகனே! மகனே, மறந்துவிடாதே! நீ புரியும் ஒவ்வொரு நல்லமலும் என் மறுமையை ஒளிர்வூட்டும். எனக்காக இவற்றை மட்டும் செய்திடுவாயா என்னருமை மகனே!
மகன்: (கண்கள் கண்ணீரால் கதம்பமாகிறது; வார்த்தைகள் இல்லை மறுமொழி வழங்க)
👉🏻நீங்கள் உங்கள் தாய்க்கு என்ன கைம்மாறு புரியப்போகின்றீர்கள்?
தாய் என்பது ஒவ்வொருவரது வாழ்வினதும் அதியுன்னத ஆத்மா. ஒரு தாய் என்பவள் சுவனத்துக்கான மிக வலிமையான வாயில். அவ்வாயிலை பாதாளம் தள்ளுவதும், பேணிக்கொள்வதும் உங்கள் கரங்கள் சார்ந்தது.
"யா அல்லாஹ்! என் தாய்க்கு நல்லருள் புரிவாயாக! அவரை கண்ணியப்படுத்தி, அவரது சொற்படி நடந்து, அவரை நேசித்து, அவரைப் பேணிப்பாதுகாக்கக்கூடிய நல்வழியை என் உள்ளத்திற்கு தந்தருள்புரிவாயாக!"
رَبَّنَا ھَبْ لَنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا. |