Posted By:peer On 9/25/2016 3:04:59 PM |
|
ஒரு முறை ரேடியோவில் கேட்டாலே சினிமாப் பாட்டு மனப்பாடம் ஆச்சு. ******* பேருந்துக்குள் கொண்டுவந்து மாலைமுரசு விற்பார்கள். ******* மிதிவண்டி வைத்திருந்தோம். ********* எம் ஜி ஆர் உயிரோடு இருந்தார். ******** ரஜினி, கமல் படம் ரிலீஸ்.
KB படங்கள் என்றால் ஒரு மாதம் அலசுவோம். ***** எந்த நிறுத்தத்தில் ஏறினாலும் உட்கார இடம் கிடைக்கும் பேருந்தில். ******** கல்யாண வீடுகளில் பாய் போட்டுச் சாப்பாடு. ******* கபில்தேவின் கிரிக்கெட். விறுவிறுப்பான 5 நாள் கிரிக்கெட் ஆட்டம்.
******** குமுதம், விகடன் நேர்மையாக இருந்தது. ******* எல்லா வீடுகளிலும், ரேடியோவிலும், கேசட்டிலும் பாடல் கேட்பது சுகமானது. ******** வீடுகளின் முன் பெண்கள் காலையில் கோலமிட்டார்கள், மாலைப் பொழுதுகளில் வீட்டின் முன் அரட்டை அடிப்பார்கள். ******* சினிமாவுக்கு செல்ல 2 நாளைக்கு முன்பே திட்டமிடுவோம். ******** தீபாவளி பண்டிகையை கொண்டாட ஒரு மாதத்துக்கு முன்பே தயாராவோம். ******* புதுச்சீருடைதான் சிலருக்கு Deepawali dress. ***** டான்ஸில் ஆபரேஷன்தான் பெரிய ஆபரேஷன். நிறைய பேர் பண்ணி கொண்டார்கள். ******* வானொலி நாடகங்களை ரசித்து கேட்டோம்., ******** எல்லோரும் அரசு பள்ளிகளில் படித்தோம். ******* சாலையில் எப்போதாவது வண்டி வரும். ******* மழை நின்று நிதானமாக பொழியும். ******* தமிழ் ஆசிரியர்கள் தன்னிகரற்று விளங்கினர். ********* வேலைக்கு போகாதவன் எந்த குடும்பத்திற்கும் பாரமாயில்லை. ********* எளிதில் மணப்பெண் கிடைத்தாள். ******* வெஸ்ட் இன்டீசை cricketல் வெல்லவே முடியாது. ********* சந்தைக்கு போக பத்து ரூபாய் போதும். ******* அம்மா பக்கத்தில் உறங்கினோம். ********* கொளுத்தும் வெயிலில் செருப்பு இல்லாமல் நடந்தோம். ******** முடி வெட்ட இரண்டு ரூபாய்தான். Shaving 50 பைசா. ------------------- பருவப் பெண்கள் பாவாடை தாவணி உடுத்தினர்……… சிலிண்டர் மூடுதுணி போல் யாரும் நைட்டி அணியவில்லை. ****** சுவாசிக்க காற்று இருந்தது. குடிதண்ணீரை யாரும் விலைக்கு வாங்க வில்லை. ******** தெருவில் சிறுமிகள் பல்லாங்குழி ஆடுவார்கள். அவர்களை கலாய்த்துகொண்டே நாங்கள் நுங்கு வண்டி ஓட்டுவோம். ******* டாக்டர் வீட்டுக்கே வருவார். ******** காதலிப்பது த்ரில்லிங்கா இருந்தது. ******* சினிமாப் பாட்டு புஸ்தகம் கிடைக்கும்.
******* எழுத்தாளர் சுஜாதா கதைகள் சிக்குனு இருக்கும். ******* மயில் இறகுகள் குட்டி போட்டன, புத்தகத்தில். ****** ஐந்து ரூபாய் தொலைத்து அப்பாவிடம் அடி வாங்கினேன். ******* மூன்றாம் வகுப்பிலிருந்து மட்டுமே ஆங்கிலம். ****** ஐந்தாம் வகுப்பு வரை அரைக்கால் டவுசர். ****** மொத்தத்தில் மரியாதை இருந்தது. ******* தொலைந்து போனவை நம் நாட்கள் மட்டுமல்ல, நம் சுகங்களும்தான்..😌 ********* |