symbicort inhaler cost symbicort generic inhaler price redirect symbicort inhaler uk பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் ==============================
தொடர் 4: வேற்றுக்கிரக வேஷம்
Episode 37: அவாமிர் (குடியிருப்போர்):
Episode 38 : நவீன உலகில் ஜின் இனத்தவர்கள்
இதுவரை நாம், மார்க்க ஆதாரங்களில் நேரடியாகக் கூறப்பட்ட ஒருசில ஜின் இனத்தவர்கள் பற்றி மட்டுமே பார்த்திருக்கிறோம். குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றில் நேரடியாகக் குறிப்பிடப் பட்டிருக்கும் இந்த ஜின் இனத்தவர் பட்டியலை வைத்துக் கொண்டு, “ஜின்களில் மொத்தமாகவே இவ்வளவு இனங்கள் தாம் இருக்கின்றன. இவற்றைத் தாண்டி வேறு இனங்கள் ஜின்களில் இல்லை” என்று யாராவது கூறினால், அது மிகவும் தவறான புரிதல் மட்டுமே. உண்மை அதை விடவும் விசாலமானது. இதைப் புரிந்து கொள்வதற்குச் சில உதாரணங்களைச் சுட்டிக் காட்டுகிறேன்:
குர்ஆனில் மனித இனத்தின் கடந்தகால வரலாறுகள் பற்றிக் கூறும் போது, ஒருசில சமூகத்தவரை அல்லாஹ் அடியோடு அழித்ததாகக் கூறுவதைப் பார்க்கலாம். உதாரணத்துக்கு “ஆத்” மற்றும் “ஸமூத்” போன்ற ஒருசில கூட்டத்தாரை அல்லாஹ் பூண்டோடு அழித்ததாக குர்ஆன் கூறுகிறது.
குர்ஆன் கூறும் இந்தத் தகவல்களை வைத்துக்கொண்டு, “அல்லாஹ் குர்ஆனில் கூறிய சமூகத்தவர்களை மட்டுமே மனித வரலாற்றில் அழித்திருக்கிறான்; அதைத் தவிர வேறெந்த சமூகங்களையும் அல்லாஹ் ஒருபோதும் அழித்ததே இல்லை” என்று யாரும் கூற மாட்டோம். ஏனெனில், குர்ஆனில் கூறப்படும் இந்தச் சம்பவங்கள், நாம் படிப்பினை பெறும் விதமாகச் சுட்டிக் காட்டப்பட்ட ஒருசில எடுத்துக்காட்டுகள் மட்டுமே; இவையல்லாமல் இன்னும் எத்தனையோ சமூகங்களை அல்லாஹ் அழித்திருப்பான். அவற்றையெல்லாம் பட்டியல் போட்டு ஒன்று விடாமல் நமக்குச் சொல்ல வேண்டுமென்ற அவசியம் அல்லாஹ்வுக்கு இல்லை என்று தான் நாம் ஏகோபித்துப் புரிந்து வைத்திருக்கிறோம்.
இதே போன்ற அடிப்படியிலேயே ஜின் இனத்தவர் பற்றியும் நமக்கு மார்க்கம் கூறியிருக்கிறது. பொதுப்படையாக இவர்களை “ஜின்” (மறைவானவை) என்று மார்க்கம் கூறியிருப்பதன் அடிப்படை அர்த்தமே இது தான். அதாவது ஒருசில உதாரணங்கள் மூலம் ஜின்கள் பற்றிய அத்தியாவசியமான சில அடிப்படைத் தகவல்களை மாத்திரமே மார்க்கம் நமக்குச் சொல்லியிருக்கிறது. ஏனைய தகவல்கள் எதையும் மார்க்கம் நமக்குச் சொல்லாமல், அவற்றை மர்மமாகவே விட்டிருக்கிறது. அவை பற்றியெல்லாம் விவரமாக மார்க்கம் நமக்குச் சொல்லவில்லையென்பதற்காக அப்படியெந்த மர்மமும் ஜின்களின் பரிமாணத்தில் இல்லையென்று யாராவது முடிவெடுத்தால், நிச்சயமாக அது தவறான முடிவு தவிர வேறில்லை.
ஜின்கள் பற்றிய ஒருசில அடிப்படைத் தகவல்களை மார்க்கம் நமக்குக் கூறியிருப்பதன் அடிப்படை நோக்கங்கள் இரண்டு தான்:
நோக்கம் 1: இப்லீஸ் எனப்படும் ஜின்னைப் பற்றியும், அவனுக்குக் கீழ் பணி புரியும் பல்வேறு இனங்களைச் சேர்ந்த ஷைத்தானிய ஜின்கள் பற்றியும் ஒவ்வொரு முஃமினும் அவதானமாக இருக்க வேண்டியது அத்தியாவசியம். ஏனெனில், அவர்களைக் குறித்த சரியான அறிமுகம் இல்லாத பட்சத்தில், அந்த அறிவீனத்தையே ஓர் அனுகூலமாக உபயோகித்து இப்லீஸ் அதன் மூலமும் பல முஃமின்களை ஏமாற்றி வழிகெடுக்க முனைவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன.
எனவே, எதிரியின் பலம் / பலவீனம் குறித்து ஓரளவுக்கேனும் நாம் தெரிந்திருப்பது அத்தியாவசியம் எனும் ஓர் அடிப்படையில் ஜின்கள் பற்றிய ஒருசில அடிப்படைத் தகவல்களை மார்க்கம் நமக்குக் கூறியுள்ளது. மார்க்கம் கூறும் இந்த அடிப்படைத் தகவல்களை வைத்து, மீதியை நமது அறிவைக் கொண்டு சிந்தித்து, ஆய்வு செய்து கண்டறிந்து கொள்ள வேண்டியது நம்மைச் சார்ந்தது.
நோக்கம் 2: நபி (ஸல்) அவர்களது மறைவுக்குப் பிறகு வரக் கூடிய காலங்களில் மனிதர்கள், தம் வாழ்வில் அவ்வப்போது எதிர்நோக்கவிருக்கும் பல அமானுஷ்யமான நிகழ்வுகளைச் சரியாக இனங்கண்டு புரிந்து கொள்வதற்கும் ஜின்கள் பற்றிய ஓர் அடிப்படை அறிவு அத்தியாவசியமாகிறது. எனவே, இந்த நோக்கத்தின் அடிப்படையிலும் ஜின்கள் குறித்த சில அடிப்படைத் தகவல்களை மார்க்கம் நமக்குக் கூறியிருக்கிறது. இதை எளிதில் புரிந்து கொள்ள சில உதாரணங்களைக் கூறுகிறேன்:
உதாரணத்துக்கு, திடீரென்று ஒருவனுக்குப் பேய் பிடித்து விட்டதென்று விசித்திரமான சில நடவடிக்கைகள் வெளிப்படுகிறதென்று வைத்துக் கொண்டால், மூடநம்பிக்கையுடையோர் வேண்டுமானால், அதைப் பேயென்று நம்பி ஏமாந்து, பேயோட்டும் சூனியக்காரர்களிடம் அடைக்கலம் தேடலாம். மேலும், ஜின்கள் பற்றிய மார்க்கத்தின் நிலைபாடுகள் குறித்த சரியான அறிவு இல்லாத ஒரு முஸ்லிமாக அவன் இருந்தாலும் கூட, அவனுக்குள்ளும் இதையொட்டி இரண்டு விதமான அறிவீனங்கள் தோன்றலாம்.
ஒன்று, “இதுவெல்லாம் வெறும் மூடநம்பிக்கை” என்று ஒரேயடியாகத் தீர்மாணித்து, அமானுஷ்யமான எல்லாவற்றையுமே மொத்தமாக அவன் மறுக்க ஆரம்பிப்பான். இதன் விளைவாக நாளடைவில் அவன் உள்ளத்தில் நாத்திகக் கோட்பாடுகளே வேரூன்ற ஆரம்பிக்கும். ஏனெனில், எல்லா அமானுஷ்யங்களையும் மூட நம்பிக்கையென்று மறுப்பது ஈமானுக்கு முரணான செயல். ஒருசில அமானுஷயங்களை உண்மையென்றும் நம்புவது தான் ஈமான். இந்த ஈமானிய அடிப்படைக்கு மாற்றமாகவே அவனது சிந்தனை வேலைசெய்ய ஆரம்பிக்கும்.
அல்லது, அந்த மனிதனது உள்ளத்தில் விடை தெரியாத பல குழப்பங்களும், கேள்விகளும் இந்தச் சம்பவத்தையொட்டி உதிக்க ஆரம்பிக்கும். இவ்வாறான கேள்விகள் உள்ளுக்குள் கிடந்து நாளடைவில் விஸ்வரூபம் எடுக்கும் போது சில சமயங்களில் அது அவனது ஈமானுக்கே கூட அது அச்சுறுத்தலாக அமைந்து விடும்.
இந்த இரண்டு அடிப்படைகளில், எந்தப் பக்கம் அந்த மனிதனது உள்ளம் திரும்பினாலும், இரண்டுமே இப்லீஸுக்கு லாபம் தான்.
ஆனால், ஜின்கள் குறித்த சரியான அறிவுடைய ஒரு முஃமின், இவை எதிலுமே சிக்கித் தனது ஈமானைப் பறிகொடுத்து விட மாட்டான். மாறாக, “இது ஒருவேளை மன நோயாக இருக்கலாம். அல்லது ஒரு ஷைத்தானிய ஜின், உள்ளே நுழைந்து கொண்டு பித்தலாட்டம் பன்னிக் கொண்டிருக்கலாம்” என்று அதை மிகவும் இயல்பாகவே அவன் எடுத்துக் கொள்வான். நோயென்று தெரிய வந்தால், அதற்கு மருத்துவம் பார்ப்பான். அது நோயையும் தாண்டிய அமானுஷ்யம் என்று தெரிய வந்தால், அதற்குரிய மார்க்கத் தீர்வுகளை நாடுவான். இதன் விளைவாக அவனது ஈமானும் பாதுகாக்கப் படும்; இப்லீஸின் திட்டங்களும் தோற்றுப் போகும்.
இதே போல் இன்னோர் உதாரணத்தையும் கூறலாம். ஒரு மனிதன் திடீரென்று, முற்றிலும் விசித்திரமான ஓர் உருவத்தையோ, ஆவித் தோற்றத்தையோ தனது வாழ்வில் நேரடியாகக் காண நேரிட்டால், நிச்சயமாக அந்தச் சம்பவம் அவனைப் பாதிக்கும். அதுவும் ஜின்கள் பற்றிய சரியான தெளிவு இல்லாத ஒருவனாக அவன் இருந்தால் அவ்வளவு தான்; சில வேளை அவனது நம்பிக்கையின் அடித்தளத்தையே தலைகீழாக மாற்றுவதற்குக் கூட அந்த ஒரு சம்பவமே போதுமானதாக அமையும்.
ஆனால், அதே உருவத்தை ஜின்கள் பற்றிய சரியான தெளிவுடைய ஒரு முஃமின் கண்டால், அவனை அந்தச் சம்பவம் பாதிக்காது. “ஏதோ ஒரு ஜின் உருமாறி வந்து விட்டுப் போயிருக்கிறது” என்று மிகவும் இயல்பாகவே அதை அவன் புரிந்து கொள்வான். அதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள மார்க்கம் அறிவுறுத்திய பிரகாரம் அல்லாஹ்வின் உதவியை மட்டுமே நாடுவான். இதன் மூலம் இப்லீஸின் பித்தலாட்டங்கள் அந்த முஃமினிடம் பலிக்காமல், அவன் தோற்றுப் போவான்.
இவ்வாறு நமது வாழ்வில் நாம் அரிதாக எதிர்நோக்கும் பல அமானுஷ்யமான சம்பவங்களின் பின்னணியில் இருக்கும் உண்மை என்னவென்பதை நாம் சரிவரப் புரிந்து கொள்வதற்கும், மற்றும் இப்லீஸ் பற்றிய சரியான தெளிவுகளை நாம் பெற்றுக் கொள்வதற்குமே ஜின்கள் பற்றிய சில அடிப்படைத் தகவல்களை மார்க்கம் நமக்குச் சொல்லியிருக்கிறது.
ஜின்கள் பற்றி இஸ்லாம் கூறியிருக்கும் அறிமுகத் தகவல்களைப் பிரதான அடிப்படைகளாக வைத்துக் கொண்டு தான், ஒரு முஃமின் தனது வாழ்வில் எதிர் நோக்கும் எந்தவோர் அமானுஷ்யமான நிகழ்வுகளையும் எடைபோடக் கற்றுக் கொள்ள வேண்டும். அது தான் மார்க்கத்துக்கு உவப்பான சரியான அணுகுமுறை.
அதாவது, மார்க்கத்தில் ஏற்கனவே கூறப்படாத விதங்களில் நமது வாழ்வில் ஏதும் அமானுஷ்யமான சம்பவங்கள் நிகழ்ந்தாலும் கூட, அந்தச் சம்பவங்கள் குறித்த தகவல்களையெல்லாம், ஜின்களின் மறைவான உலகம் குறித்து மார்க்கம் கூறியிருக்கும் ஆதரங்களோடு வைத்துத் தான் ஒரு முஃமின் உரசிப் பார்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு உரசிப் பார்ப்பதன் மூலம் மட்டுமே, அந்த அமானுஷ்யமான சம்பவம் பற்றிய தீர்க்கமான ஒரு நிலைபாட்டை எடுக்க வேண்டும்.
இந்த அடிப்படையில், பறக்கும் தட்டுக்குரியவர்களின் அமானுஷ்ய நடவடிக்கைகளை, ஜின்கள் பற்றிய மார்க்க ஆதாரங்களோடு உரசிப் பார்த்ததன் விளைவாகவே பறக்கும் தட்டுக்களில் வரக் கூடிய வேற்றுக்கிரக வாசிகள் அனைவரும் சந்தேகத்துக்கே இடமில்லாமல் ஜின் இனத்தைச் சேர்ந்தவர்கள் தான் எனும் உறுதியான நிலைபாட்டுக்கு நான் வந்திருக்கிறேன். இதை நான் அடித்துக் கூறுகிறேன். இதில் மறு பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில், எந்த அடிப்படையில் இவர்கள் நடவடிக்கைகளை மார்க்க ஆதாரங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தாலும், இவர்கள் ஜின்கள் தவிர வேறில்லை என்ற உண்மை மட்டுமே திரும்பத் திரும்ப ஊர்ஜிதமாகிறது.
இனி இந்த அடிப்படைகளை மனதில் வைத்துக் கொண்டு, நமது சமகால உலகம் சார்ந்த சில அமானுஷயமான புதிர்களுக்கு விடை காணும் விதமாக, மார்க்கத்தில் நேரடியாகக் கூறப்படாத மேலும் சில ஜின் இனத்தவர்களைப் பற்றி சற்று மாறுபட்டதொரு கோணத்திலிருந்து நோக்கலாம். அதற்கு முன், சில அடிப்படைகளையும் தெளிவு படுத்திக் கொள்ளலாம்.
மனித கண்களுக்குத் தெரியும் வடிவங்களில் ஜின்கள் நமது பரிமாண உலகுக்குள் ஊடுறுவும் போது, பொதுவாக இரண்டு அடிப்படைகளில் ஊடுறுவுகிறார்கள் என்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம். அதாவது, உருமாறுதல் அல்லது ஊடகம் ஒன்றின் வாயிலாக ஊடுறுவுதல் ஆகிய இரண்டில் ஓர் அடிப்படையிலேயே ஜின்கள் நமது முப்பரிமான உலகுக்குள் ஊடுறுவுகிறார்கள் என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டோம்.
இதில், உருமாறுதல் பற்றி ஏற்கனவே பார்த்து விட்டோம். எனவே அதை இங்கு மீட்டுவது நேர விரயம். ஆனால், ஊடகம் ஒன்றின் வாயிலாக நமது முப்பரிமாண உலக்குக்கு ஜின்கள் ஊடுறுவது குறித்து சில மேலதிக தகவல்கள் சொல்லப்பட வேண்டியிருக்கின்றன. எனவே அவற்றையும் சற்று நோக்குவோம்.
ஊடகம் ஒன்றின் வாயிலாக ஜின்கள் நமது முப்பரிமாண உலகுக்குள் ஊடுறுவுதல் என்பது, உருமாறும் அடிப்படையிலிருந்து சற்று மாறுபட்டது. உருமாறும் போது, அவர்கள் தமது சக்தி அதிர்வெண்களை நமது பரிமாண உலகுக்குப் பொருந்தும் அளவுக்குக் குறைத்துக் கொள்வதன் மூலமே புதிதாக ஒரு தற்காலிக வடிவத்தை அவர்களாகத் உருவாக்கிக் கொள்கிறார்கள். இதற்கு உதாரணமாக ஆவித் தோற்றங்கள், நிழல் வடிவங்கள், அரிதாகத் தோன்றும் சில விசித்திரமான உருவங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
ஆனால், ஊடகத்தின் வாயிலாக ஊடுறுவுதல் என்பது இந்த அடிப்படையைச் சார்ந்ததல்ல. புதிதாக ஒரு வடிவத்தை எடுப்பதற்குப் பதிலாக, ஏற்கனவே இருக்கும் ஒரு முப்பரிமான வடிவத்துக்குள் தம்மை அவர்கள் நுழைத்துக் கொண்டு, அதன் வடிவத்தில் வருவதையே ஊடுறுவல் என்பதன் மூலம் இங்கு குறிப்பிடுகிறேன். எளிமையாகக் கூறினால், இந்த முப்பரிமான உலகில் வாழக் கூடிய ஏதாவது ஓர் உயிரினத்தின் உடல்களுக்குள் ஜின்கள் வந்து புகுந்து கொள்வது கூட இந்த அடிப்படையிலான ஊடுறுவல் தான். உதாரணத்துக்கு ஒரு மனிதனின் உடலுக்குள் ஜின்கள் புகுந்து கொண்டு அவ்வப்போது சேட்டைகள் பன்னுவது கூட இந்த வகையைச் சார்ந்த ஊடுறுவல் தான்.
அனேகமான சந்தர்ப்பங்களில் ஜின்கள் / ஷைத்தான்கள் நமது முப்பரிமான உலகுக்குள் பிரவேசிக்கும் போது, எந்த மனிதனுக்கு அநியாயம் செய்யும் நோக்கில் அவை பிரவேசிக்கின்றனவோ, அதே மனிதனின் உடலையே தாம் தரித்திருப்பதற்கான ஊடகமாகவும் பயன்படுத்திக் கொள்வதுண்டு.
சூனியம் போன்ற காரியங்களில் ஈடுபடுத்தப்படும் அனேகமான ஜின்கள் இதனால் தான் முதல் கட்ட நடவடிக்கையாக, தாம் ஏவி விடப்படும் மனிதனது உடலில் வந்து புகுந்து கொள்ள முயற்சிப்பதுண்டு. அதன் பிறகு அந்த மனிதனது உடலுக்குள் இருந்து கொண்டே ஏவி விடப்பட்ட சூனியத்தைப் பலிக்கச் செய்வதற்கான வேலைத்திட்டங்களை அவை ஆரம்பிப்பது வழமை.
ஆனால், இந்த முறைக்கு மாற்றமாக இன்னோர் அடிப்படையிலும் ஜின்கள் நமது முப்பரிமான உலகுக்குள் ஊடுறுவுகிறார்கள். தொழினுட்ப ரீதியில் முன்னேற்றம் கண்ட சில ஜின் இனத்தவர்கள், மனித உடல்களைப் போல் சுதந்திரமாக இந்த முப்பரிமான உலகில் இயங்கும் வல்லமை கொண்ட சில உயிரியல் உடைகளைத் (Biological Suit) தாமாகவே தொழினுட்ப ரீதியில் தயாரித்து, அவற்றினுள் தமது சக்தி சார்ந்த உடல்களை நுழைத்துக் கொண்டு வேற்றுக்கிரகவாசிகள் எனும் வேடத்தில் பறக்கும் தட்டுக்களில் அவ்வப்போது வந்து போகிறார்கள்.
ஆதிகாலங்களில் இந்த வகையான ஊடுறுவல்கள் மிக அரிதாகவே நடந்திருப்பதாக ஒருசில குறிப்புகளை மட்டுமே காண முடிகிறது. ஆனால், கடந்த ஓரிரண்டு நூற்றாண்டுகளில் இவ்வாறான ஊடுருவல் சம்பவங்கள் பலநூறு மடங்குகளாக அதிகரித்திருப்பதைப் பலநூற்றுக் கணக்கான குறிப்புகள் மூலம் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது.
அடிக்கடி இவர்கள் இவ்வாறு வேற்றுக்கிரகவாசி உடல்களில் பறக்கும் தட்டுக்களில் தோன்றி மறைவதற்கான உண்மையான நோக்கங்கள் / காரணங்கள் என்னவென்பது இதுவரை திட்டவட்டமாக நமக்குத் தெரியாது. ஆனால், நாளுக்கு நாள் இந்த அடிப்படையிலான இவர்களது வருகை சமகால உலகில் அதிகரித்துக் கொண்டே செல்வதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
வேற்றுக்கிரகவாசி எனும் புதிய வேஷத்தில் அனேகமான ஜின்கள் நமது பரிமாணத்துக்குள் ஊடுறுவுவதன் நோக்கம் / காரணம் இதுவரை திட்டவட்டமாக அறியப்படாமல் இருந்தாலும், இவர்களது நடவடிக்கைகளை வைத்து ஒருசில காரணங்களை ஓரளவுக்கு ஊகிக்க மட்டுமே முடிகிறது. உதாரணத்துக்கு ஒருசிலதைக் குறிப்பிடுகிறேன். சிந்திக்கும் மக்களுக்கு இது போதுமானதாக இருக்கும்:
காலத்துக்குக் காலம் மனித நாகரீகங்கள் / தொழினுட்பங்கள் மாறுபடும் போது, அந்த மாறுதல்களுக்கு அமைய மக்களை ஏமாற்றும் உத்திகளைக் கையாள்பவர்களாக இந்த ஜின் இனத்தவர்கள் இருக்கலாம். அதாவது, குதிரை, கழுதை போன்ற மிருகங்களில் மனிதர்கள் பிரயாணம் செய்த அன்றைய காலங்களில், மிருக வடிவங்களில் அடிக்கடி மக்களிடம் தோன்றிய இந்த ஜின் இனத்தவர்கள், இன்று விமானங்களில் பயணிக்கும் மனிதர்களை ஏமாற்றும் விதமாக, அது போன்ற வடிவங்களில் பறக்கும் தட்டுக்களைத் தயாரித்துக் கொண்டு வருவோராக இருக்கலாம்.
அல்லது...
இதுவரை காலமும் மறைவான பரிமாணத்திலேயே வாழ்ந்து வந்த இவர்கள், சமகால உலகம் யுகமுடிவு நாளை நெருங்கிக் கொண்டிருப்பதால், அதையொட்டி இவர்களும் நேரடியாகவே நமது முப்பரிமான உலகுக்குள் பிரவேசிப்பதற்கு மேற்கொள்ளும் ஆயத்தங்களாகவும் கூட இது இருக்கலாம். யுக முடிவை நெருங்கும் போது நடக்கவிருக்கும் சம்பவங்களுள் அனேகமானவை ஏறுக்கு மாறானவையாகவும், நம்ப முடியாத விதங்களிலும் இருக்கும் என்பதாகவே மார்க்கம் கூட நமக்குப் பல முன்னறிவிப்புக்களைச் செய்துள்ளது.
உதாரணத்துக்கு, தஜ்ஜால் வந்து நிகழ்த்தப் போகும் பல அதிசயங்கள், வரலாறு காணாத வகையிலான பூகம்பங்கள், யஃஜூஜ், மஃஜூஜ் எனும் விசித்திரக் கூட்டத்தாரின் வருகை, மனிதர்களின் பாசையில் பேசக் கூடிய ஒரு பிராணியின் வருகை, ஒரு மாதுளம் பழத்தின் தோலின் கீழ் ஒரு கூட்டமே நிழல் பெறும் அளவுக்கு இராட்சதக் கனிகள் பூமியில் முளைக்கும் விசித்திர நிகழ்வு, சூரியன் மேற்கில் உதித்தல்... போன்ற பல்வேறு முன்னறிவிப்புக்களை மார்க்கம் கூறியிருப்பதைப் பார்க்கும் போது ஓரு மறைமுகமான உண்மை நமக்குப் புலப்படுகிறது.
அதாவது, உலக அழிவை நெருங்கும் போது இந்த உலகத்தில் நடக்கும் நிகழ்வுகள் எல்லாமே விசித்திரமானவையாகவும், நம்ப முடியாதவையாகவுமே இருக்கும் என்பது தான் மார்க்கம் கூறும் அந்த மறைமுகமான உண்மை.
இவ்வாறான விசித்திரமான நிகழ்வுகளின் பட்டியலில் வேற்றுக்கிரகவாசி வேடமிட்டு வரக் கூடிய இந்த ஜின் இனத்தவர்களது வருகைகளும் ஒன்றாக இருக்கலாம்... ஒருசில விசித்திரங்களைப் பற்றி மட்டுமே மார்க்கம் நமக்கு “சாம்பிள்” போன்ற அடிப்படையில் கூறியிருக்கலாம். இன்னும் இது போன்ற எத்தனையோ அதிசயங்கள் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கக் காத்திருக்கலாம். அவ்வாறான அதிர்ச்சிகளில் ஒன்றாக இந்தப் பறக்கும் தட்டுக்களில் வரக்கூடிய ஜின் இனத்தவர்களது அட்டூழியங்களும் இருக்கவும் வாய்ப்பிருப்பதை யாரும் மறுக்க முடியாது.
இவ்வாறு தர்க்கரீதியான பல காரணங்களை இவர்களின் நடவடிக்கைகளுக்குக் கற்பிக்கலாம். ஆனால், இவற்றுள் எது சரியான காரணம் என்பது பற்றி நம்மால் திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. இது பற்றி அல்லாஹ்வே அறிந்தவன். ஆனால் இவர்களது மர்மம் மிக்க நடவடிக்கைகளை வைத்து, நிச்சயமாக இவர்கள் நல்ல நோக்கத்தோடு நமது பரிமாணத்துக்குள் வருபவர்கள் அல்ல என்பதை மட்டும் ஆணித்தரமாகக் கூறலாம். இதற்கு ஏராளமான சான்றுகள் சமகால உலகில் இருக்கின்றன. உதாரணத்துக்கு ஒன்றைக் குறிப்பிடுகிறேன்.
இந்த வேற்றுக்கிரகவாசிகள் அவ்வப்போது பறக்கும் தட்டுக்களில் வந்து சில மனிதர்களைக் கடத்திச் செல்வதுண்டு. இவ்வாறு மனிதர்களைக் கடத்திச் செல்வதன் அடிப்படை நோக்கமே, அந்த மனிதர்களது DNA மாதிரிகளை உயிரோடு அறுவடை செய்து கொள்வது தான். இதுவரை நூற்றுக்கணக்கான மனிதர்கள் உலகின் நாலாபக்கங்களிலும் இவர்களால் கடத்தப் பட்டிருக்கிறார்கள். DNA மாதிரிகளை உயிரோடு அறுவடை செய்யும் பிரதான நோக்கத்தில் தான் அனேகமான மனிதர்கள் வேற்றுக்கிரகவாசிகளால் கடத்தப் படுகிறார்கள் என்பது முறையாகப் பதிவான பல ஆவனச் சான்றுகள் மூலம் நிரூபணமான உண்மை.
இவ்வாறு கடத்தப் படும் மனிதர்களிடமிருந்து தேவைப்படும் மனித DNA மாதிரிகளை அறுவடை செய்து முடித்த பின், அவர்களை மீண்டும் பத்திரமாகக் கொண்டு வந்து, கடத்தப்பட்ட இடத்திலேயே இவர்கள் விட்டு விட்டுச் செல்வார்கள். ஆனால், இவ்வாறு விட்டுச் செல்லும் போது குறிப்பிட்ட கடத்தல் சம்பவத்தையொட்டிய அந்த மனிதர்களது ஞாபகப் பதிவுகளையெல்லாம் அவர்களது மூளையின் ஞாபகப் பகுதியிலிருந்து ஏதோ தொழினுட்பத்தின் மூலம் அழித்து விட்டுத் தான் இவர்கள் மீண்டும் கொண்டு வந்து விட்டுச் செல்கிறார்கள்.
கடட்தப்படும் மனிதர்களின் ஞாபகப் பதிவுகளை இவர்கள் மூளையிலிருந்து அழிப்பதன் விளைவாக, கடத்தப்படுவோரில் அனேகமானோர் பிறகு பலவிதமான மனநோய்களுக்கும் உள்ளாவது வழமை.
இவ்வாறான நோய்களால் பாதிக்கப் பட்டோருக்கு வைத்தியம் பார்த்த பல மனநல மருத்துவர்கள் அரிதுயில் உத்திகளைக் கையாண்ட போது, அனேகமானோரின் அழிக்கப்பட்ட ஞாபகங்கள் மீண்டும் திரும்பியதாகப் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மேலும், இவ்வாறு கடத்தப்பட்டதாகக் கூறப்பட்டோர் பற்றி ஆய்வு செய்த பல உளவியல் நிபுணர்கள், ஒருசிலரைத் தவிர, ஏனைய அனைவருமே உண்மையில் கடத்தப்பட்டு, விசித்திரமான சில பரிசோதனைகளுக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதை சந்தேகத்துக்கிடமின்றி உறுதிப்படுத்தியும் இருக்கிறார்கள். மனதளவில் மட்டும் என்றில்லாமல், உடல் அளவில் மருத்துவ ரீதியில் கண்டறியப்பட்ட பல தடயங்கள் கூட, இவர்கள் கடத்தப்பட்ட சம்பவங்கள் உண்மை தாம் என்பதை உறுதி செய்திருக்கின்றன.
இவை குறித்து ஆதாரங்களோடு விரிவாக அறிந்து கொள்ள விரும்புவோருக்கும், ஆய்வு செய்ய விரும்புவோருக்கும் பின்வரும் இணைப்புகள் பிரயோசனமாக இருக்கும் என்று கருதுகிறேன்.
பிரசித்தி பெற்ற பறக்கும்தட்டு ஆய்வாளர்களுள் ஒருசிலரது பட்டியல் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. இவர்களைத் தவிர இன்னும் ஏராளமான அறியப்பட்ட ஆய்வாளர்கள் பறக்கும் தட்டுகள் குறித்தும், வேற்றுக்கிரகவாசிகள் குறித்தும் நம்பமுடியாத பல தகவல்களைப் பகிரங்கமாக ஆதாரங்களோடு உலகுக்கு அறியப்படுத்தி வருகிறார்கள். வேற்றுக்கிரகவாசிகள் குறித்த எனது கருத்துக்களை ஆதாரங்களோடு உறுதிப்படுத்திக் கொள்ள விரும்புவோர், கீழே பட்டியலிடப் பட்டிருக்கும் ஆய்வாளர்களது ஆக்கங்கள் மூலமாகவும் அவற்றை உறுதிப் படுத்திக் கொள்ளலாம்:
https://en.wikipedia.org/wiki/Stanton_T._Friedman https://en.wikipedia.org/wiki/Nick_Pope_(journalist) http://www.zersetzung.org/about-dr-karla-turner https://en.wikipedia.org/wiki/Raymond_E._Fowler https://en.wikipedia.org/wiki/Remy_Chauvin https://en.wikipedia.org/wiki/Jean-Pierre_Petit https://en.wikipedia.org/wiki/Philip_J._Corso https://en.wikipedia.org/wiki/J._Allen_Hynek
வேற்றுக்கிரகவாசிகளால் கடத்தப்பட்டவர்களில் ஒரு குழுவினரைப் பிரத்தியேகமான விரிவான ஆய்வுகளுக்கு உட்படுத்திய, கலாநிதி கார்லா டர்னர் (Dr. Karla Turner, PhD) என்பவர், இந்தக் கடத்தல்களின் பின்னணி குறித்த பல உண்மைகளைக் கண்டறிந்தார். இவரது பல ஆய்வுகளின் தொகுப்புக்களாக எழுதப்பட்ட பிரசித்தி பெற்ற இரண்டு நூல்களைக் கீழே பட்டியலிடுகிறேன். வேற்றுக்கிரகவாசிகளின் சதித் திட்டங்கள் குறித்து விரிவாக அறிந்து கொள்ள விரும்புவோருக்கு இந்த நூற்களும் பிரயோசனமாக இருக்கும்.
இவரது ஆய்வுகள் பெரும்பாலும் வேற்றுக்கிரகவாசிகளின் கடத்தல் சம்பவங்களுக்கும் இலுமினாட்டிகளின் இரகசிய சிந்தைக் கட்டுப்பாட்டுச் செயல்திட்டங்களுள் ஒன்றான Project MKUltra இற்கும் இடையில் இருக்கும் பல இரகசியத் தொடர்புகளை அம்பலப் படுத்தும் அடிப்படையிலேயே அமைந்திருந்தன. இவரது ஆய்வுகள் மூலம் இலுமினாட்டிகளின் பல இரகசியங்கள் அம்பலத்துக்கு வரத் தொடங்கியதும், இவர் மர்மமான முறையில் தனது 48வது வயதில் இறந்தார். இவரது மரணம் இயற்கை மரணம் அல்ல; திட்டமிடப்பட்ட கொலை என்பது தான் இவரது கணவர் உட்பட அனேகமானோர் முன்வைக்கும் குர்றச்சாட்டு.
இவர் எழுதிய பிரசித்தி பெற்ற இரண்டு நூற்களையும் பின்வரும் லிங்க்குகளில் வாசிக்கலாம்:
http://www.zersetzung.org/…/Karla%20Turner%20-%20Masquerade… http://www.zersetzung.org/…/Karla%20Turner%20-%20Taken%20-%…
இனி இன்றைய நவீன உலகில் பறக்கும் தட்டுக்களில் வந்து போகக் கூடிய ஒருசில ஜின் இனத்தவர்களைப் பற்றித் தகுந்த சான்றுகளோடு சற்று விரிவாக அடுத்த எபிசோடில் நோக்கலாம்.
இன் ஷா அல்லாஹ் வளரும்...
- அபூ மலிக்
Episode 39: போல் ஹெல்யர் (Paul Hellyer): |