ஹைப்பர் லூப் பற்றி நம்மில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும் ஆனால் இன்னும் கூட சில பேர் கேள்வி படாமல் இருக்கலாம் .
ஹைப்பர் லூப் ஒரு வருங்கால தொழில் நுட்பம். வெகு விரைவில் பயன்பாட்டிற்கு வர இருக்கும் ஒரு போக்குவரத்து சாதனம்.
மனிதன் சைக்கிள் சென்று பிறகு பைக்கில் சென்று பிறகு காரில் சென்று பிறகு ட்ரைனில் சென்று பிறகு விமானத்தில் சென்றான் . இப்போது அதன் நீட்சியாக அடுத்ததாக அவன் கண்டு கொண்ட ஒரு போக்குவரத்து சாதனம் தான் ஹைப்பர் லூப்.
இதன் மொத்த பெருமையை நாம் தர வேண்டியது elon musk என்பருக்கு தான். (இவரை பற்றி அறியாதவர்கள் நிச்சயம் இவரை பற்றி தேடி அறிந்து கொள்ளுங்கள் இக்காலத்தில் வாழும் மிக முக்கிய அறிவியலாளர் இவர்.)
இவர் அபார மூளையில் உதித்த விஷயம் தான் இந்த ஹைப்பர் லூப்.
அமெரிக்க அரசாங்கம் 68 பில்லியன் டாலர் செலவில் அடுத்த ரயில் கட்டுமான திட்டத்திற்கு பட்ஜெட் ஒதுக்கிய போது . தான் வெறும் 8 பில்லியன் டாலரில் அதைவிட உயர்ந்த தொழில் நுட்பத்தில் அதை விட வேகமான அதை விட பாதுகாப்பான , அதை விட அதிக வசதிகள் கொண்ட ஒரு போக்குவரத்து சாதனத்தை உருவாக்கி தர முடியும் என சவால் விட்டு உண்டாக்கிய ஒன்று தான் ஹைப்பர் லூப்.
இது நடந்தால் உலகின் மிக வேகமாக போக்குவரத்து சாதனம் இதுவாக தான் இருக்க போகிறது
இது என்ன மாதிரி வண்டி.?
சென்னை யிலிருந்து கன்னியாகுமரி வரை ஒரு ஆயில் குழாயை பூமிக்கு சற்று மேலே பாலம் போட்டு கொண்டு போனால் எப்படி இருக்கும்?? பார்க்க இது அப்படி தான் இருக்கும். அந்த குழாய் அமைப்பிற்கு உள்ளே வேகமாக பாயும் ஒரு கேப்ஸுல் தான் ஹைப்பர் லூப். நீங்கள் ஜேம்ஸ் பாண்ட் பட விரும்பி என்றால் "the world is not enough " படத்தை பார்த்து இருக்கலாம் அதில் பாண்ட் ஒரு குழாய் குள் ஒரு வாகனத்தில் அமர்ந்து வேகமாக பயணம் பண்ணும் காட்சி ஒன்று இருக்கிறது. கிட்ட தட்ட அப்படி பயணம் செய்வது தான் ஹைப்பர் லூப்.
சரி இது எப்படி வேலை செயகிறது?
குழாய்க்கும் கேப்ஸுளுக்கும் இடையில் காந்த புலம் உண்டாக்க பட்டு அது தரும் விசையை பயன் படுத்தி தான் இந்த வண்டி ஓடுகிறது. காற்றால் உண்டாகும் தடையை போக்க காற்றை உறிஞ்சி பின்னுக்கு தள்ளும் கம்ப்ரெசர் அமைப்பு ஒன்று இதில் உள்ளது. கேப்ஸுளுக்கும் டியுபுக்கும் உள்ள இடைவெளியில் காற்று உராயவை குறைக்க ஒரு அமைப்பும் உண்டு.
ஒரு கேப்ஸுளில் 28 பேர் அமரலாம். ஒரு குழாய் பாதையில் இரண்டு tube இருக்கும் ஒன்னும் போகும் பாதை ஒன்று வரும் பாதை. நமது மின்சார ரயிலுக்கு கூடவே வரும் மின் இணைப்பு கம்பங்கள் போல இதற்க்கு ஏதும் தேவை இல்லை. காரணம் இது இயங்க போவது இந்த குழாய்களின் வெளி மேல் கூரையில் பதிக்க பட்டுள்ள சோலார் தகடுகள் தரும் ஆற்றலால். பூகம்பம் வந்தால் கூட இது தாங்க வேண்டும் என்பதால் தான் இது சிறப்பு பாலம் மேல் அமைக்க படுகிறது.
இது திட்டமிட்டுள்ள படி அமைந்தால் நிச்சயம் போக்கு வரத்து வரலாற்றில் இது ஒரு மைல் கல் தான்.
அப்புறம் முக்கியமான ஒன்றை சொல்ல மறந்துட்டேன் இதன் வேகம்..
இதன் வேகம் மணிக்கு 1200 கிமி
https://www.facebook.com/groups/1172035886161279/permalink/1521649344533263/