Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - Episode 60
Posted By:Hajas On 7/24/2017 4:19:24 PM

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும்
==============================

by - Abu Malik

தொடர் 4: வேற்றுக்கிரக வேஷம்

Episode 59: ஜின்களும் மனிதர்களும் உடலுறவு கொள்ள முடியுமா?

Episode 60 : ஜின்களும் மனிதர்களும் உடலுறவு கொள்ள முடியுமா? (தொடர்ச்சி...)

ஜின்களும் மனிதர்களும் உடலுறவு கொள்ள முடியுமா? (தொடர்ச்சி...)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மனிதர்களோடு ஜின்கள் உடலுறவு கொள்வதென்பது சாத்தியம் எனும் நிலைபாட்டையே மார்க்கம் சரிகாண்கிறது என்பதை சென்ற எபிசோடிலிருந்து, பல ஆதாரங்கள் சகிதம் நாம் பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக இனி மேலும் சில ஆதாரங்களைப் பார்ப்போம்.

ஆதாரம் 6:
"மேலும், உன் குரல் மூலம் அவர்களில் (மனிதர்களில்) உனக்கு முடிந்தோரை வழி சறுகச் செய்துகொள்; உன் குதிரைப் படையையும், காலாட்படையையும் அவர்களுக்கு எதிராக ஏவி விட்டுக் கொள்; அவர்களது (மனிதர்களது) செல்வங்களிலும், குழந்தைகளிலும் (சந்ததிகளிலும்) நீ பங்காளியாகிக் கொள்!" (என்றும் அல்லாஹ் ஷைத்தானிடம் கூறினான்).
(அல்குர்ஆன் 17:64)

ஏற்கனவே இந்த வசனத்தை நாம் இத்தொடரின் முந்திய பகுதிகளிலும் சில தடவைகள் நோக்கியிருக்கிறோம். திரும்பவும் இதே வசனத்தை இங்கும் கொண்டு வருகிறோம். ஏனெனில், ஷைத்தானிய ஜின்களின் ஆற்றல், மற்றும் மனித இனத்தவர் மீது அவர்களுக்கு இருக்கும் ஆதிக்கம் ஆகியவற்றைச் சரியாக இனம்கண்டுகொள்ளும் நோக்கில் ஆய்வு செய்யும் ஒவ்வொருவருக்கும் இந்தக் குர்ஆன் வசனம் ஒரு பொக்கிஷம் போன்றது. அந்த அளவுக்கு இந்த ஒரு வசனத்துக்குள் அல்லாஹ் ஏராளமான செய்திகளைப் பொதித்து வைத்துள்ளான்.

இந்த வசனத்தில் இங்கு நாம் கவனம் செலுத்தும் வாசகம் “அவர்களது (மனிதர்களது) செல்வங்களிலும், குழந்தைகளிலும் (சந்ததிகளிலும்) நீ பங்காளியாகிக் கொள்” எனும் வாசகம் மட்டுமே. ஏனெனில், இந்த வாசகத்தில் தான் நமது தலைப்புக்குத் தேவையான தகவல் உள்ளடக்கப் பட்டுள்ளது.

இந்த வசனத்திலிருக்கும் குறிப்பிட்ட வாசகத்துக்கு இங்கு நான் சுற்றி வளைத்துப் பொருள் கொடுக்கவில்லை. எந்தக் குர்ஆன் மொழியாக்கத்தை வேண்டுமானாலும் புரட்டிப் பாருங்கள்; இந்த வாசகத்தின் சொல்லுக்குச் சொல் நேரடி மொழியாக்கமே “அவர்களது (மனிதர்களது) செல்வங்களிலும், குழந்தைகளிலும் (சந்ததிகளிலும்) நீ பங்காளி (Partner) ஆகிக் கொள்” என்று தானிருக்கும்.

எந்தச் சிக்கலுமில்லாத, மிகவும் எளிய வசன நடையிலேயே இங்கு அல்லாஹ் இதைக் கூறியிருக்கிறான். இதைத் தவிர வேறெந்த மொழியாக்கமும் இந்த வாசகத்துக்குக் கிடையாது.

எனவே, இனி நாம் இங்கு சிந்திக்க வேண்டியது ஒன்றை மட்டும் தான். “மனிதர்களது செல்வங்களிலும், குழந்தைகளிலும் (சந்ததிகளிலும்) நீ பங்காளியாகிக் கொள்” என்று ஷைத்தானைப் பார்த்து அல்லாஹ் இங்குக் கூறி இருப்பதன் அர்த்தம் தான் என்ன? இதைச் சரியாகச் சிந்தித்தாலே போதும்; மனித இனத்தவர்கள் மீது ஷைத்தானிய ஜின்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் அதிகாரம் எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஏற்கனவே நாம் பல தடவை குறிப்பிட்டது போல், இந்த வசனத்தில் அல்லாஹ், இப்லீஸுக்கு வழங்கியிருக்கும் அதிகாரங்கள் / ஆற்றல்கள் என்னென்னவென்பதைத் தான் பட்டியல் போட்டுக் காட்டுகிறான். இப்லீஸுக்கு, அதாவது ஷைத்தானிய ஜின்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் அதிகாரங்களின் பட்டியலுக்குள் தான், மனிதர்களது செல்வங்களிலும், சந்ததிகளிலும் பங்காளியாகிக் கொள்ளும் அதிகாரங்களும் கூட இங்கு உள்ளடக்கப் பட்டுள்ளன.

உண்மையில் இந்த வாசகத்தின் நேரடி அர்த்தத்தைச் சாதாரண அறிவுள்ள ஒருவரால் கூட இலகுவாக சிந்தித்துப் புரிந்து கொள்ள முடியும். அந்த அளவுக்கு இதன் வசனக் கோர்வை மிகவும் எளிய நடையிலேயே அமைந்துள்ளது. இருந்தாலும், இதை விடவும் சிறந்த இன்னுமொரு வழியில் இந்த வாசகத்தை இன்னும் அழகாகப் புரிந்து கொள்ளலாம். அது தான் நபி (ஸல்) அவர்களே நேரடியாகக் காட்டித் தந்த வழி.

அதாவது, நபி (ஸல்) அவர்களே இந்த வாசகத்துக்கு வழங்கிய சரியான தஃப்ஸீர் வியாக்கியானங்கள் போன்று அமைந்திருக்கும் சில ஹதீஸ்களின் வெளிச்சத்தில் இதன் விரிவான அர்த்தத்தை அழகாகப் புரிந்து கொள்ளலாம்.

இந்த அடிப்படையில், ஏற்கனவே நாம் விரிவாகப் பார்த்த ஒருசில ஹதீஸ்களின் கருத்துக்களை மீண்டும் ஒருமுறை இங்கு மீட்டிக் காட்டுகிறேன்:

ஹதீஸ் 1: “மனிதர்கள் செய்யும் எல்லாக் காரியங்களிலும் ஷைத்தான் பங்கேற்க வருகிறான்” எனும் கருத்துப்பட ஏற்கனவே நாம் பார்த்த ஹதீஸ்.

ஹதீஸ் 2: ஒருமுறை நபியவர்கள் ஸஹாபாக்கள் சகிதம் விருந்து சாப்பிட ஆரம்பிக்கும் போது, அங்கு ஓடி வந்த ஒரு சிறுமி, பிஸ்மில்லாஹ் கூறாமல் உணவில் கைவைக்க எத்தனித்த போது, அவளது கையைப் பிடித்துத் தடுத்த நபியவர்கள், “இந்தச் சிறுமியின் வாயிலாக ஷைத்தான் இந்த உணவில் பங்காளியாக முயற்சித்தான்; அல்லாஹ்வின் பெயர் கூறாமல் சிறுமி உணவை வாயில் போட்டிருந்தால், ஷைத்தானும் இந்த உணவில் ஒரு விருந்தினராகப் பங்கேற்றிருப்பான்” என்று கூறிய, ஏற்கனவே நாம் பார்த்த ஹதீஸ்.

ஹதீஸ் 3: உணவு உண்ணுதல், உடை அணிதல் போன்ற அனைத்துக் காரியங்களையும் அல்லாஹ்வின் பெயரைக் கொண்டே ஆரம்பிக்குமாறும், மற்றும் உடலுறவு கொள்ளுதல் போன்ற காரியங்களை ஆரம்பிக்கும் போதெல்லாம் ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக் கொள்ளுமாறும் நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்திய பல ஹதீஸ்கள்.

ஹதீஸ் 4: குறிப்பாக, அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு ஷைத்தானிடம் பாதுகாவல் தேடிய பின் உடலுறவு கொண்டால், அதன் மூலம் கிடைக்கும் குழந்தை ஷைத்தானின் ஆதிக்கத்திலிருந்து பாதுகாக்கப் படும் எனும் கருத்துப்பட நபியவர்கள் கூறிய, ஏற்கனவே நாம் பார்த்த ஹதீஸ்...

மேலே பட்டியலிடப்பட்ட ஹதீஸ்களையெல்லாம், “மனிதர்களது செல்வங்களிலும், குழந்தைகளிலும், அவர்களோடு நீ பங்காளியாகிக் கொள்” எனும் குர்ஆன் வாசகத்தோடு பொருத்தி, சற்று நேரம் சிந்தித்துப் பார்த்தால், இந்த வாசகம் என்ன கூறுகிறது என்பது தெளிவாகப் புரிந்து விடும். இவ்வாறு இந்த வாசகத்தோடு மேற்கூறப்பட்ட ஹதீஸ்களையும் இணைத்துப் புரியும் போது இதிலிருந்து வெளிப்படும் அர்த்தம் ஒன்று தான்:

மனிதர்களது அன்றாட வாழ்வின் எல்லாக் காரியங்களிலும் தாமும் ஒரு பங்காளர்களாகப் பங்கேற்பது போல், மனிதர்களது உடலுறவிலும் பங்கேற்கும் ஆற்றல் ஷைத்தானிய ஜின்களுக்கு இருக்கின்றது என்பது மட்டுமல்ல; அவ்வாறான உடலுறவுகளின் விளைவாகக் கருக்கொள்ளும் குழந்தைகளின் உருவாக்கத்தில் கூட ஷைத்தானிய ஜின்களின் கலப்படங்கள் இருக்கும் என்பது தான் இந்த வாசகம் கூறும் நேரடிக் கருத்து.

“அவர்களது செல்வங்களில் நீயும் பங்காளி ஆகிக்கொள்” என்பதற்கு, மனிதர்களது வியாபாரங்களில் ஷைத்தானிய ஜின்கள் பங்கேற்பதன் மூலம், அவர்களது இலாப நஷ்டங்களுக்கும், அதிலிருக்கும் ஹராம் / ஹலால் என்பவற்றுக்கும் திரைமறைவில் ஷைத்தானிய ஜின்களின் பங்களிப்பும் காரணமாக அமைகிறது எனும் அர்த்தம் வெளிப்படுவதைப் போல்....

“அவர்களது குழந்தைகளிலும் நீ பங்காளியாகிக் கொள்” என்பதற்கு, மனிதர்களது உடலுறவிலும் ஷைத்தானிய ஜின்கள் பங்கேற்பதன் மூலம், அதன் விளைவாகப் பிறக்கும் குழந்தையின் உருவாக்கத்தில் கூட திரைமறைவில் ஷைத்தானிய ஜின்களின் பங்களிப்புக்கள் இருக்கின்றன எனும் அர்த்தமே இங்கு வெளிப்படுகிறது.

மேலும், இங்கு இன்னொரு மறைமுகமான அர்த்தமும் வெளிப்படவே செய்கிறது. மனிதர்களோடு உடலுறவு கொள்வதன் மூலமோ, அல்லது தொழினுட்பம் சார்ந்த மரபணுக் கலப்பின உற்பத்தி (Genetic Hybridization) மூலமோ ஜின்களின் நேரடி வாரிசுகள் என்று இல்லாவிட்டாலும், மனித குழந்தைகளின் மரபணுக்களில், ஜின்களின் சக்திசார் மரபணு அலகுகள் கலப்படமாவதன் மூலம், தூய மனித இனம் அல்லாத, கலப்பின மனிதர்கள் (Hybrids) / மனித ஷைத்தான்கள் உருவாகுவது கூட சாத்தியம் எனும் இன்னோர் உண்மையையும் இங்கு அல்லாஹ் மறைமுகமாக உணர்த்திக் காட்டுகிறான்.

இது குறித்த மேலும் சில விளக்கங்களை இன் ஷா அல்லாஹ் இந்தத் தொடரின் அடுத்த பகுதியில் நான் நோக்கவிருக்கிறோம். எனவே, இப்போதைக்கு இவ்வளவும் போதும்.

மேலே குறிப்பிடப்பட்ட குர்ஆன் வசனத்துக்கும், அது சார்ந்த ஏனைய ஆதாரங்களுக்கும் கூட நாம் இங்கு முன்வைத்திருக்கும் விளக்கங்கள் தாம் சரியானவை எனும் நிலைபாட்டிலேயே ஸஹாபாக்கள் மட்டுமல்லாது, அனேகமான இமாம்களும் கூட ஏகோபித்த கருத்தில் இருந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

அதாவது, மனிதர்களோடு ஜின்கள் உடலுறவு கொள்வது முற்றிலும் சாத்தியம் என்பதில் மட்டுமல்லாமல்; அவ்வாறான உடலுறவுகள் நிதர்சனத்தில் நடப்பதுமுண்டு எனும் கருத்திலேயே கற்றறிந்த இமாம்கள் கூட ஏகமனதாக இருந்திருக்கிறார்கள். மேலும், இது ஆச்சரியப்படத்தக்க ஒரு விடயமல்ல; சர்வசாதாரணமான ஓர் அம்சம் எனும் கருத்திலேயே அந்தக் காலம் முதல் எல்லா அறிஞர்களும் இருந்துள்ளார்கள். இதை உறுதிப்படுத்தும் ஒருசில சான்றுகளை இனி நாம் சற்று விரிவாகப் பார்க்கலாம்:

சான்று 1:
ஜாஹிலியக் காலத்தில், யூத / கிரித்தவ சமூகங்களைப் போன்ற பல்வேறுபட்ட சமூகத்தவர் மத்தியிலும், நபி (ஸல்) அவர்களது நுபுவ்வத்தையொட்டிய பல முன்னறிவிப்புக்கள், ஜோதிடர்கள், தீர்க்கதரிசிகள், மற்றும் ஜின்கள் போன்ற பல்வேறு ஊடகங்கள் வாயிலாக ஏற்கனவே அறிவிக்கப் பட்டன எனும் கருத்தில் பல செய்திகள் ஸீராக்களில் பரவலாகப் பதிவாகியிருப்பதைப் பார்க்கலாம்.

ஜோதிடர்கள், மற்றும் தீர்க்கதரிசிகளின் வாயிலாக முன்னறிவிக்கப்பட்ட செய்திகள் பற்றி இங்கு ஆய்வு செய்வது நமது நோக்கமல்ல. ஆனால், ஜின்கள் வாயிலாக நபியவர்களின் நுபுவ்வத், மற்றும் குர்ஆன் குறித்த பல செய்திகள், உலகில் நாலாபுறமும் எத்தி வைக்கப் பட்டன எனும் கருத்தை குர்ஆன் பின்வருமாறு ஊர்ஜிதப் படுத்தியுள்ளது:

(குர்ஆனைச்) செவிமடுத்த ஜின்களில் சிலர் (தமது கூட்டத்தாரிடம் சென்று), "நிச்சயமாக நாங்கள், மிகவும் ஆச்சரியமான ஒரு குர்ஆனைச் செவிமடுத்தோம்" என்று கூறினர், என எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டதென்று (நபியே!) நீர் கூறுவீராக.
(அல்குர்ஆன் 72:1)

இந்த வசனத்தின் பிரகாரமும், மற்றும் இது சார்ந்த பல ஹதீஸ்களின் பிரகாரமும் நபியவர்களின் வருகை, மற்றும் குர்ஆன் அருளப்பட்ட செய்தி ஆகிய தகவல்கள் ஜின்கள் மூலம் தூர தேசங்களிலுள்ள பலருக்கும் கூட முன்கூட்டியே எத்தி வைக்கப் பட்டன எனும் உண்மை இங்கு ஊர்ஜிதமாகிறது.

இந்த அடிப்படையிலான ஒரு சம்பவம் ஜாஹிலியக் காலத்து மதீனாவிலும் நிகழ்ந்ததாக இப்னு இஸ்ஹாக்கின் ஸீராவில் பின்வருமாறு பதிவாகியுள்ளது:

ஹிஜ்ரத் செய்து, நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே, மதீனத்து யூதர்கள் கூறிய ஒரு முன்னறிவிப்புச் செய்தி, அறியாமைக் கால அன்ஸாரிகள் மத்தியில் பரவலாகப் பேசப் பட்டு வந்தது. அதாவது, நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக மக்காவில் தேர்ந்தெடுக்கப் பட்ட காலப் பகுதியிலேயே, அந்தச் செய்தி தம்மை வந்தடைந்து விட்டதாக மதீனத்து யூதர்கள் அன்ஸாரிகளிடம் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கு மக்காவில் நுபுவ்வத் கிடைத்த செய்தி, மதீனாவிலிருக்கும் தமக்கு எவ்வாறு தெரிய வந்தது என்பதைப் பற்றி யூதர்கள் கூறிய போது, பின்வரும் சம்பவத்தின் வாயிலாகவே அது தமக்குத் தெரிய வந்ததாகக் கூறினார்கள். அந்தச் சம்பவம் இது தான்:

பனூ நஜ்ஜார் கோத்திரத்தைச் சேர்ந்த நு’மான் இப்னு அம்ர் என்பவரின் தாயாரான ஃபாத்திமா எனும் பெண்மனி, ஜாஹிலியக் காலத்து மதீனாவில் விபச்சாரத் தொழில் புரிந்து கொண்டிருந்த பெண்களுள் ஒருவராக இருந்தார். இந்தப் விபச்சாரிப் பெண்ணுக்கு ஜின் இனத்தைச் சேர்ந்த ஓர் ஆண் ஜின்னோடு கள்ளக் காதல் இருந்து வந்தது.

அடிக்கடி இந்த ஜின் (தனக்கு ஃபாத்திமாவோடு உடலுறவு கொள்ளத் தேவை ஏற்படும் போதெல்லாம்), அறையில் யாருடன் அவர் இருந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், அறையை உடைத்துக் கொண்டு நுழைவது போல் வெறியோடும், வேகத்தோடும் (மற்றவர் கண்ணுக்குத் தெரியாத விதத்திலும், ஃபாத்திமாவின் கண்களுக்கு மட்டும் தெரியும் விதத்திலும்) அறைக்குள் நுழைந்து, அவருடன் உடலுறவு கொண்டு விட்டுச் செல்வதே வழக்கமாக இருந்தது.

ஒரு நாள் ஃபாத்திமாவின் அறையில் நுழைந்த இந்த ஜின், வழமைக்கு மாற்றமாக (வழமை போல் உடலுறவு கொள்ளாமல்), சோர்வோடு சென்று சுவரோரமாகச் சரிந்து விட்டது. அதைப் பார்த்த ஃபாத்திமா அதனிடம், “உனக்கு இன்று என்ன நேர்ந்தது?” என்று கேட்டார். அதற்கு அந்த ஜின், “விபச்சாரம் செய்வதை மொத்தமாகத் தடை செய்ய ஓர் இறைத்தூதர் வந்து விட்டார்” என்று கவலையோடு கூறியது.

இவ்வாறு ஜின் வந்து கூறிய இந்த முன்கூட்டிய தகவலின் மூலமே, நபி (ஸல்) அவர்களின் நுபுவ்வத் பற்றிய செய்தி ஏற்கனவே தமக்குத் தெரிய வந்து விட்டதாக யூதர்கள் கூறியதாக அன்ஸாரிகள் தெரிவித்தனர்.

இப்னு இஸ்ஹாக் ஸீராவில் இந்தச் செய்தி பதிவாகியுள்ளதைப் பின்வரும் பதிவுகளில் பார்க்கலாம்:

ஸீரத்து ரஸூலில்லாஹ்: பக்கம் 92, இல. 122 (ஹாமிதுல்லாஹ் பதிப்பு)
ஸீரா இப்னு இஸ்ஹாக்: 1 / 113 (ஷாமிலா) அல்லது...
கித்தாப் அஸ்ஸியர் வல் மஃஹாஸி: பக்கம் 113

மேலும் இந்தச் செய்தி சில சிறிய மாற்றங்களோடு, இப்னுல் ஜவ்ஸியின் “அல் வஃபா பி அஹ்வால் அல் முஸ்தஃபா” (பக்கம் 154) இலும் பதிவாகியுள்ளது.

சான்று 2:
குர்ஆன் வசனம் 55:56 இற்கு விளக்கவுரை கூறும் போது முஜாஹித் (ரஹ்) கூறியதாகப் பதிவாகியுள்ள செய்தி:
“ஒரு மனிதன் தன் மனைவியோடு உடலுறவு கொள்ள ஆரம்பிக்கும் போது, அவன் அல்லாஹ்வின் பெயரைக் கூறவில்லையென்றால், (ஷைத்தானிய) ஜின், அவனது பிறப்புறுப்பைச் சுற்றிப் பின்னிக் கொள்வதன் மூலம், அவனோடு சேர்ந்து அந்த ஜின்னும் அவன் மனைவியோடு உடலுறவு கொள்ளும். இதை அல்லாஹ் தன் திருமறையில் (55:56 வது வசனத்தில்) குறிப்பிடுகிறான்”
(தஃப்ஸீர் அல் குர்துபீ: 10 / 289)

சான்று 3:
இமாம் மஹ்மூத் அல் அலூஸியின் நிலைபாடு பின்வருமாறு அமைந்துள்ளது:
“ஒரு பெண்ணோடு அவள் கணவன் உடலுறவு கொள்ளும் போது அல்லாஹ்வின் பெயரைக் கூறவில்லையென்றால், அவளோடு ஜின்களும் உடலுறவு கொள்கின்றன.”
(ரூஹுல் ம’ஆனீ: பாகம் 27, பக்கம் 119)

சான்று 4:
இமாம் இப்னுல் ஜவ்ஸி இது குறித்துப் பின்வருமாறு கூறுகிறார்:
“ஒரு மனிதப் பெண்ணோடு ஓர் ஆண் உடலுறவு கொள்வது போன்ற அதே அடிப்படையில் மனிதப் பெண்களோடு உடலுறவு கொள்ளும் ஆற்றல் ஜின்களுக்கும் உண்டு.”
(ஃஜாத் அல் மஸீர் ஃபீ இல்முத் தஃப்ஸீர்: பாகம் 8, பக்கம் 122)

இப்னுல் ஜவ்ஸியின் இதே கருத்தை இமாம் ஸுயூத்தியும் வழிமொழிந்துள்ளார்.
(நஷ்ர் அல் ஆலமைன்: பாகம் 3, பக்கம் 301)

சான்று 5:
இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் இது குறித்துப் பின்வருமாறு கூறுகிறார்கள்:
“ஜின்களும் மனிதர்களும் தமக்கிடையில் உடலுறவு கொள்வது மட்டுமல்லாமல், அவ்வாறான உடலுறவுகளின் விளைவாக (சில சந்தர்ப்பங்களில்) குழந்தைகள் கூட பிறப்பதுண்டு. இது ஒன்றும் அதிசயம் அல்ல. இவ்வாறான நிகழ்வுகள் பரவலாக நடப்பது பலரும் (பல அறிஞர்களும்) அறிந்த விடயம். முஸ்லிம் சட்டக்கலை அறிஞர்கள் (ஃபிக்ஹ் இமாம்கள்) கூட இவ்வாறான நிகழ்வுகள் குறித்துக் கலந்தாலோசித்திருப்பது மட்டுமல்லாமல், இவ்வாறான உறவுகளை (மார்க்கச் சட்டப்படி) தடை செய்திருப்பதுமுண்டு. பெரும்பாலான “ஃபிக்ஹ்” அறிஞர்கள், ஒரு மனிதனும், ஜின்னும் திருமணம் செய்து கொள்வதை எதிர்க்கும் நிலைபாட்டிலேயே இருந்துள்ளார்கள்.
(மஜ்மூ’ அல் ஃபத்தாவா: பாகம் 19, பக்கம் 39)

உண்மையில், “மனிதரும், ஜின்களும் தமக்கிடையில் திருமணம் செய்து கொள்வதை மார்க்கம் அங்கீகரிக்கிறதா? அல்லது நிராகரிக்கிறதா?” என்பது குறித்த கருத்து வேறுபாட்டிலேயே அனேகமான அறிஞர்கள் கவனம் செலுத்தியிருக்கிறார்களேயொழிய, இவ்வாறு மனிதர்களும் ஜின்களும் தமக்கிடையில் உடலுறவு கொள்வதும், திருமணம் செய்து கொள்வதும் சாத்தியமா? என்பது குறித்து எந்த இமாம்களும் தமக்கிடையில் கருத்து வேறுபாடு கொண்டதில்லை. ஏனெனில், இவ்வாறு உடலுறவு நடப்பது முற்றிலும் சாத்தியம் எனும் நிலைபாட்டிலேயே எல்லா இமாம்களும் ஏகோபித்து இருந்துள்ளார்கள்.

இறுதியாக...

மனிதர்களுக்கும், ஜின்களுக்கும் இடையில் உடலுறவு நடப்பது முற்றிலும் சாத்தியம் என்பதை நிரூபிக்கும் விதமாக மார்க்கத்தின் வெளிச்சத்தில் இத்தனை வாதங்களையும், ஆதாரங்களையும், சான்றுகளையும் இங்கு நான் சமர்ப்பித்திருக்கிறேன்.

இவ்வாறு உடலுறவு நடப்பது சாத்தியமே இல்லையென்று பகுத்தறிவு வாதிகள் இனியும் வாதிடுவார்களென்றால், இங்கு முன்வைக்கப் பட்டிருக்கும் அத்தனை வாதங்களையும் முறியடிப்பது மட்டுமல்லாமல், அவர்களது வாதத்தை நிரூபிக்கும் விதமாக உருப்படியான ஒரேயொரு மார்க்க ஆதாரத்தையாவது சமர்ப்பித்து விட்டுத் தான் வாதிட வேண்டும். இது எனது சவால்..! மறுமை நாள் வரை அவர்களுக்கு அவகாசமுண்டு; முடிந்தால் அவர்கள் இவ்வாறு சமர்ப்பித்து விட்டு வாதிடட்டும் பார்க்கலாம்.

மார்க்க நிலைபாடுகள் குறித்த பகுதிகளின் இரண்டாம் பகுதி இத்தோடு நிறைவடைகிறது. இனி நாம் வேற்றுக்கிரகவாசிகளுள் இறுதியாக நோக்க வேண்டிய முக்கியமான இன்னோர் இனத்தவர்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இன் ஷா அல்லாஹ் வளரும்...

- அபூ மலிக்ஜின்களும் மனிதர்களும் உடலுறவு கொள்ள முடியுமா? (தொடர்ச்சி...)

- அபூ மலிக்

Episode 61: நகருயிர் சார்ந்தோர் (Reptilians / Draconians)

Power of Creator
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..