Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
நம்பியாறு நினைவுகள் - கவிதை
Posted By:Hajas On 8/21/2017 8:14:35 AM

where can i buy naltrexone online

buy naltrexone

நம்பியாறு நினைவுகள் - கவிதை

மின் பாஷி

 

*********நம்பியாறு நினைவுகள்***********
மோண்ட பாய்ச்சுருட்டி..
தலையில் சுமந்தபடி..
விடிந்தும் விடியாத..
வைகறை விளும்பில்..
அரைத் தூக்கத்துடன்..
குளித்தெழுந்த நாள்முதலே
ஒட்டிக்கொண்டது..
என் ஆறு....
***************************
ஆற்றோர... அலைமொழியில்..
காற்றில் தன்
வாழ்வெழுதிய நாணலில்.
மை நனைத்து
வண்ணத்தில் ஒளிர்ந்த
அலிப்... பே.. தேக்கள்..
உயிர் மெய்கள்.
***************************
நிர்மா நெகிழிக்குள் நீந்தி...
பள்ளிவாசல் அகலுக்குள்..
புலம்பெயர்ந்த மீன்களின்,
அசைவுகளால்.. எழுதப்பட்டன
பள்ளிக்கும் எனக்குமான..
தொடர்புகள்.
***************************
அத்தனை கள்ளக்குளியலுக்கு
பின்னும், பிரியாமல்...
கால்சட்டை பைக்குள்
தங்கி போன
மணல் துகள்தான்..
மவுன சாட்சிகளாய்..
அன்றும் இன்றும்..
***************************
ஊருக்கு நடுவே
வகுடெடுத்து ஓடுகையில்..
கரைகளாய்...
அழகு பார்த்துக்கொண்ட
ஊர்தான்
சிக்குப் பிடித்து
சிக்கி தவிக்கிறது.
***************************
ஆற்றின் படுகைகளோடு
அடையாளம் தொலைத்தது
ஆறு நோன்பு.... பெருநாட்கள்.
***************************
அன்று..
கட்டிய மணல்வீடுகளை...
ஆறு கரைத்தது.
இன்று...
கட்டிய வீடுகள்..
ஆற்றை கரைத்தது.
***************************
உனக்கா..
ஊற்றால் ஊட்டினேன்...?
புதர்களுக்கிடையில்..
வெட்கிப் பதுங்கி..
புழுவாய் நெளியும்.. ஆறு.
***************************
அழியும்... ஆற்றின்
மிக சமீபமாகவே..
நம் மண்ணறைகள்...
குறியீடு.
*************************** 
பவானி, பொத்தி, கெண்டை
நீல நிற ஊசித்தட்டான்
அத்தனை ஓலங்களும்
மண்ணோடு குலைந்த சாந்தாக..
வீட்டுச் சுவர்களுக்குள்..
ஒலித்துக் கொண்டிருக்கும்..
மறந்தும் செவிமடுத்து
விடாதீர்கள்..
குற்ற உணர்வுகளில்
உங்கள் தூக்கம்
கலைந்து விடக்கூடும்.

https://www.facebook.com/photo.php?fbid=1322747227836583&set=a.109785105799474.16875.100003039540722&type=3&permPage=1





Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..