உணர்வற்று உயிரற்று சும்மாயிருந்த எங்களை நீ உயிர்ப்பித்திருக்கிறாய்!
உடைத்தவர்கள் உருவிய வாளுடன் உலா வருகிறார்கள்..
அடுத்து என்ன செய்வார்களோ என்ற அச்சம் எங்கள் உள்ளத்தில் இல்லாமலில்லை..
ஆனாலும் இடிந்து விழுந்த உந்தன் கோபுரக் கும்பங்கள்..
எங்கள் நெஞ்சத்தின் கேடயமாகிப் போனதால்..அச்சமும் அகன்று விடுகிறது..
வயிற்றில் கரைந்த புளி உதிரத்தின் உரமாகி விட்டது..இனி இழக்க எங்களிடம் ஒன்றுமில்லை...
உன்னை இழந்து உன்னால் உயிர்ப்பிக்கப்பட்ட..
எங்கள் உடலுக்கும் உணர்வுக்கும் இனி இழக்க ஒன்றுமில்லை!
இன் ஷா அல்லாஹு உன்னை கட்டி எழுப்பும் வரை எங்களுக்கு உறக்கமுமில்லை...
ஆண்டுதோறும் உனக்காக உயிர்ப்போடும் துடிப்போடும் போராடுகிறோம்..
போராட்ட களத்திற்கு வந்து போகிறோம்..
இது வெறும் வாடிக்கை அல்ல..போராட்டம் நினைவிற்கான விதை...
விதை விருட்சமாய் வளர தொடர்ந்து போராட வேண்டும்..
அகங்கார ஆடையணிந்து பவனி வருவோர் ஆத்திரப்பட வேண்டும்...
விதை விருட்சமாய் வளர வேண்டும்..போராட்டம் தொடர வேண்டும்..
இன்று போராட களத்திற்கு வந்துள்ள எல்லா முஸ்லிம்களுக்கும்
உன் சார்பில் வஹ்தத்தின் வாழ்த்துக்கள்...!
பாபரி மஸ்ஜிதே! இறந்த எங்களுக்குள் இறைவன் உயிரூட்ட காரணமான காவியமே!
போராட எங்களுக்கு கற்பித்த கலாச்சாலையே வாழ்த்துக்கள்..!
வாழிய நீ! இந்தியாவின் அடையாளமாய் வளர்க நீ!!
S M Buhari