Posted By:peer On 12/15/2017 11:56:08 PM |
|
மன்னன் சேட் என்று எல்லோராலும் அழைக்கப்படும் திரு . K . S . அஹமது முஹைதீன்
ஏர்வாடி தந்த பம்பாய் நகரத்துபெரும் தொழிலதிபர் மட்டுமல்லஎத்தனையோ பல தொழில் அதிபர்களை உருவாக்கி விட்டபெருந்தகை இவர்
1960 களில் நமதூரில் இருந்துபம்பாய் சென்று வாழ்க்கையின்அடிமட்டத்தில் இருந்து பல சிரம்மங்களுக்கும் கடினமான உழைப்புக்கும் பிறகு படிப்படியாய்வாழ்க்கையில் உயர்ந்து வளமானவாழ்க்கையின் உச்சம் தொட்டவர்திரு .மன்னன் சேட் அவர்கள்
நமதூரில் இன்றைக்கும் பலர் பெரும்தொழிலதிபராக திகழ்கிறார்கள்என்றால் ( நான் உள்ப்பட ) திரு . மன்னன் சேட் அன்று ஊனிய வித்துதான் பூமியின் அடிநுனிவரை வேர் விட்டு விளைந்த பெருமரமாய் செழித்து வளர்ந்து சிறப்புடன் வாழ்வதற்கு திரு . மன்னன் சேட் அவர்களின் ஊக்கமும் உற்சாகமுமே முக்கிய காரணம் என்றால் மிகையில்லை
தான் தேடிய செல்வங்களை வசதி குறைத்த மக்களுக்கு வாரி வழங்குவதில் வள்ளலாக திகழ்ந்தவர் திரு . மன்னன் சேட் அவரது தொழில்சாலையில் 200 க்கும் அதிகமான நமதூர் ஏர்வாடி மக்களுக்கு தொழில் வாய்ப்பை நல்கிய தொழிலதிபர் இவர்
திறமை யாரிடமிருந்தாலும் உற்ச்சாக படுத்தி அவர்களை கை தூக்கி விடும் நல்ல மனது இவரிடம் நிரம்பவே இருந்தது 1970 - 1978 கால பகுதிகளில் திரு மன்னன் சேட் அவர்களின் நேரடி பார்வையில் நான் பம்பையில் பணியாற்றிய கால கட்டங்கள் என்னால் மறக்க முடியாத நாட்கள் ஆகும்
எவ்வளவு வசதி இருந்தாலும் தனது வாழ்க்கையை மிக சிம்பிளாக வைத்து கொண்ட பெருந்தகை இவர் எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத மா மனிதர் திரு அஹமது முஹைதீன் என்றமன்னன் சேட் ஆவார்
அவர் மறைந்து ( 1994 ) பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்னும் என்போன்ற பலரின் மனதில் அழியாத இடத்தை பிடித்து விட்டவர்.
அன்னாரின் மறுமை வாழ்க்கையில் எல்லா சிறப்புகளும் பெற்று சுவர்க்க வாழ்க்கை வாழ இறைவனிடம் துவா செய்வோம் ...!
- Peer Mohamed |