Posted By:peer On 1/6/2018 4:28:41 AM |
|
இருண்டக் காடொன்றில் தனித்துவிடப்பட்ட குழந்தை நான்… தூரத்தில் ஒளிறும்.. உன் தேடலோசைகள்.. தடைபடும் போதெல்லாம்.. மௌனங்களும் கூட.. அச்சுறுத்துகிறது. .. என்னை நீ தேடுகிறாய்.. உன் தேடலை நான் தேடிக்கொண்டிருக்கிறேன். … படரந்து கிடக்கும் சிறுபூக்களின் வாசங்களில்.. உன் மேனியின் சுகந்தத்தை நாசிகள் தேடித்தேடி.. ஏமாற்றங்களை முகர்கின்றது.. … பாவத்தின் தீப்பந்தங்களில்.. எரிந்துக் கொண்டிருக்கும் கானகத்தில்.. இருளாகிக் கொண்டிருக்கிறது வழித்தடங்கள்.. .. எரியும் கானகத்தின் வெளிச்சத்தில்.. என்னை நீ.. அறிவாய் என்றே.. சுட்டெரிக்கும் தழலருகே.. காத்துக் கொண்டிருக்கின்றேன்.. சாம்பலாகிப் போவதற்குள்.. மீட்டெடுப்பாயா நீ..?? … மின்னல் வெளிச்சங்களில் தடம் நகர்கின்றேன்.. தூரத்தில் ஒலிரும் உன் தேடலோசைகளை.. விழுங்கிக் கொண்டிருக்கின்றன மின்னலை ஒட்டிய பேரிடி முழக்கங்கள்.. … அந்தோ..அப்பேரிடியில் செவிடாகிப்போகும் காதுகளை.. மின்னல் விழுங்க காத்திருக்கும் பார்வைகளை.. எப்போது மீட்டெடுப்பாய் நீ … கானகத்தில் தனித்து விடப்பட்ட குழந்தை நான்.. மண்டியிட்டு.. உன் பாதச்சுவடுகளைத்.. தேடித் தவழ்கிறேன்… நிச்சயம் என் விம்மல் சப்தங்களை.. செவிமடுப்பாய் நீ.. …. உலர்ந்துக் கொண்டிருக்கும் என் கண்ணீர்துளிகளை.. இருளுக்குள்… விதைத்துக் கொண்டே நகர்கிறேன்.. திவலைகளில் ஒளிர்கின்றது.. உன் புன்னகைப் போரொளி.. மெல்ல.. இருளின் திரையகற்றுகிறது… கருத்த இக்கானகம்.
- ஏர்வாடி சிந்தா. |