ரா_பிரபு
பாகம் : 15 : மர்ம மண்டை ஓடுகள்
மாயன் மற்றும் aztek இனத்தினர் பல வகையில் மர்மங்களில் தொடர்புடையவர்கள் என்பதை நாம் அறிவோம். அவர்கள் இடத்தில கிடைத்த ஒரு மர்ம பொருள் தான் crystal skull க்ரிஸ்டலில் செதுக்க பட்ட ஒரு மர்ம மண்டை ஓடு.
1927 இல் ஆய்வாளர் ஒருவர் பூமியை தோண்டும் போது இது கிடைத்தது. இது 5000 வருடம் பழமையானது என்கிறார்கள் . சிலர் இது அதைவிட பழமையானது என்கிறார்கள். ஆச்சர்யம் என்ன வென்றால் இது செய்ய பட்ட விதம் இன்றைய தொழில் நுட்பதால் கூட செதுக்க முடியாத அளவு மிக துல்லியமாக க்ரிஸ்டலில் செதுக்க பட்டிருப்பது தான். மிக மிக சக்தி வாய்ந்த நுண்நோக்கி கொண்டு பார்த்தால் கூட செதுக்க பட்டது கண்டு பிடிக்க முடியாத அளவு அப்படியே அச்சில் வார்த்தை போல க்ரிஸ்டலில் செதுக்குவது அன்றைய கால ஆட்களுக்கு எப்படி சாத்தியமாயிற்று என்பது ஒரு பக்கம் மர்மம் என்றால் அதை எதற்காக செய்தார்கள் என்பது அடுத்த மர்மம்.
அதற்க்கு முன் நின்று அதை உற்று பார்த்தால் மன நிலை தாக்கத்திற்கு ஆளாகியது என்கிறார்கள் (இப்போ உங்களுக்கு இந்தியானா ஜோன்ஸ் இன் கிரிஸ்டல் ஸ்கல் படம் நினைவிற்கு வந்து இருக்குமே ) இந்த கிரிஸ்டல் ஒரு ஹை டேக் டேட்டா ரெக்கார்டர் என்பது சிலரின் நம்பிக்கை. இது கண் முன் நடந்த உலக சம்பவங்கள் எல்லாவற்றையும் இது சேமித்து வைத்திருக்கிறது . இது ஒரு வரலாற்று ரெகார்ட் டிவைஸ் மேலும் இதை கொண்டு எதிர்காலத்தையும் பார்க்க முடியும் என்றும் நம்புகிறார்கள். மொத்தம் 13 இந்த மாதிரி மண்டை ஓடுகள் செய்ய பட்டு உலகமெங்கும் அனுப்ப பட்டுள்ளது என்கிறார்கள் (வேறு இடங்களில் அடுத்த சில கிரிஸ்டல் மண்டைகள் கிடைத்துள்ளது )
பின்னால் வந்த ஆய்வாளர்கள் இது ஏதும் உண்மை அல்ல இது 18 ஆம் நூற்றாண்டில் செய்ய பட்டதாக இருக்கலாம் என்றும் சொன்னார்கள் ஆனால் இதை செய்தது யார் எதற்காக இதை செய்தார்கள் என்பது அறியப்படாத மர்மமாகவே உள்ளது.
✴ ✴ ✴ ✴
இப்பொது வேறு சில வித்யாசமான மர்ம மண்டை ஓடுகளை பற்றி பார்ப்போம்.
☯ Elongated Skulls of Mexico ☯
மெக்சிகோவில் தோல் பொருள் ஆய்வாளர்கள் விச்சித்திர மண்டை ஓடுகளை தோண்டி எடுத்தார்கள் அவைகள் எல்லாமே ஏலியன் தலைகளை போல பின்னால் நீண்டு காண படுபவை மொத்தம் 13 மண்டை ஓடுகள் கிடைத்தன (இதிலும் 13 ஆ ) இவைகள் கிபி 945 தொடங்கி 1308 காண கால கட்டத்தை சார்ந்தது .
சில பழங்குடிகள் 5 யிலிருந்து 16 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தலையில் வளையங்கள் போட்டு தலையை நீண்ட மண்டை ஓடு கொண்டவர்களாக மாற்று கின்றன என்கிறார்கள். அவர்கள் அந்த வடிவத்தை எங்கே பார்த்து கவர பட்டார்கள் என்பது புரியவில்லை. அந்த மண்டை ஓடுகள் ஏதும் நோய் காரணமாக இப்படி இருந்ததற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை.
☯ The Starchild Skull ☯
900 ஆண்டுகளுக்கு முன் கிடைத்த ஒரு குழந்தையின் மண்டை ஓடு இது பார்க்க மிக விசித்திரமாக வழக்கத்தை விட உருண்டை வடிவில் பெரிதாகவும் கண் குழிகள் சுருங்கி விசித்திரமாகவும் இருந்தது. இது ஏதோ மரபணு கோளாறு என்றும் ஏலியன் மண்டை என்றும் பல கருத்துக்கள் உண்டு. ஆய்வாளர்கள் 25 முக்கிய வேறுபாட்டை சாதாரண மண்டை ஒட்டிற்கும் இதற்கும் கண்டார்கள்.
☯ The Rhodope Skull of Bulgaria ☯
2001 இல் பல்கெரியாவில் ஒரு மண்டை ஓட்டை கண்டெடுத்தார்கள். அதன் DNA டெஸ்ட்டுகள் அது மனித மண்டை ஓடே அல்ல என்று சொன்னது.
மேலும் அதன் விச்சித்திர தோற்றமும் வியப்பாக இருந்தது. அதை விட இன்னோரு ஆச்சரயம் அந்த மண்டை ஓட்டின் கூடவே ஒரு உலோக டிஸ்க் போன்ற ஒன்று கிடைத்தது. இது பார்க்க சாதாரண வடிவமைப்பில் இல்லை இப்படி ஒரு விச்சித்திர தோற்றத்தில் யாரும் மண்டை ஓட்டை பார்த்ததும் இல்லை. இது முன்பே செய்ய பட்ட மரபணு சோதனையில் விளைந்த தோல்வி சோதனையா ?? அது மறைக்க பட்டு புதைக்க பட்டதா என்று தெரியவில்லை.
☯ The Horned Skull ☯
கதைகளில் வரும் சைத்தான் அல்லது பிசாஸிற்கு நெற்றி மேல் இரண்டு கொம்புகள் இருப்பது போல சித்தரிக்க பட்டிருக்கும். நிஜத்தில் அப்படி வடிவமைப்புடன் எந்த மனிதனும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் 1880 இல் சிரியாவில் ஒரு மண்டை ஓடு கண்டுபிடிக்க பட்டது .
உடலியல் கூறு படி சாதாரண மனிதர்களுடன் அது மிகவும் ஒத்து போனது ஆனால் ஒன்றே ஒன்று தான் விசித்திரமானது புருவதிற்கு 2 அங்குலம் மேலே இரண்டு கொம்புகள் காண எலும்புகள் புடைத்து கொண்டிருந்தது. மண்டை ஓடும் சாமான்ய ஓட்டை விட மிக பெரிதாக இருந்தது. குறைந்தது அந்த மண்டை ஒட்டிற்கு சொந்த காரன் ஒரு 7 அடி இருந்திருக்க வேண்டும் என்கிறார்கள்.
☯ Hobbit skull ☯
Homo floresiensis, வகை மனிதர்கள் ஆம் மனிதர்களில் இன்னோரு வகை 10000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தார்கள் என்பதற்கான சான்று இந்த hobbit skull. அந்த இனத்தின் நன்கு வளர்ந்த மனிதனின் அளவே 3.5 அடி தான் அவன் மண்டை ஓடு எவ்வளவு சின்னதாக இருந்து இருக்கும் பாருங்கள்.
✴ ✴ ✴ ✴
மர்ம கதைகள் பொதுவாக கிராம புறங்களில் அதிகம் புழக்கத்தில் இருப்பது உண்டு. அடுத்து பார்க்க இருப்பது கிராம புற மர்ம கதைகள் அல்ல. முழு கிராமமே மர்மமாக திகழும் சில "மர்ம கிராமங்கள் " பற்றி.
மர்மங்கள் தொடரும்............🕷🕷
|