சொலவடைகள்
கிராமத்தில் எளிய மொழியில் காலங்காலமாக சொல்லப்பட்டவை சொலவடைகள். எள்ளல் தொனியும் உண்மைகளும் அதில் இருக்கும்.
*பாடுபட்டவனுக்குப் பத்துப் பல்லாம் இளிச்சவாயனுக்கு இருபது பல்லாம்.
வேலை செய்தவர்களைவிட வேலை செய்யாதவர்க்கு அதிக பலன் அடைவதாக..
*ஆனவனுக்கு புத்தி சொன்னா அறுவும் உண்டு நினைவும் உண்டு ஈனனுக்கு புத்தி சொன்னா இருக்கும் இடத்தையும் தோத்துதான் போகணும் என அறிவுரை யாருக்கு சொல்வதென்று வந்த சொலவடை
*பத்தாவுக்கு ஏற்ற பதிவிரதையாய் இருந்தால் எக்காலமும் கூடிவாழலாம். சற்று ஏறுமாறாக இருந்தால் கூறாமல் சந்நியாசம் போய்விடலாம் என இல்லற தம்பதி குறித்து சொல்வார்கள்
*உழுகிற மாடும் , உள்ளூர் மருமகனும் ஒன்றுதான்
*வேலையைத் தள்ளிப்போடுகிற மனப்பான்மைக்கு ஒரு சொலவடை...- "செல்வியக்கா புருசன் செவ்வாக்கிழமை செத்தானாம்,
வீடு வெறிச்சோடி போய்டுமேனு, வெள்ளிக்கிழமதான் எடுத்தாளாம்"
*ஏர் உழறவன் ஏமாளியா இருந்தா மாடு மச்சான் னு கூப்டுமாம் *தென்னையை வச்சவன் தின்னுட்டு செத்தான், பனையை வச்சவன் பாத்துட்டு செத்தான்
*சின்ன மச்சான், குனிய வெச்சான் -நெருஞ்சி முள்
*நடந்தா நாடெல்லாம் உறவு
படுத்தா பாய் கூட பகை.
*தாகத்துக்கு தண்ணி கேட்டா குழிமேட்டுல வந்து ஊத்தின கதையா இருக்கே
*கம்பங்கதிரை கண்டா கை சும்மாயிருக்காது, மாமன் மகளை கண்டால் வாய் சும்மாயிருக்காது.
*உள்ளூர்ல உதை வாங்காத
வெளியூர்ல விதை வாங்காத..
என்பன போன்ற சொலவடைகளை ரசித்துப் படிக்கலாம் |