முதலில் இந்த 'ஜீ' பழக்கம் ஒழிந்து ஐயா பழக்கம் வரணும்.
வீட்டுக்குழந்தைகளுக்கு அழகிய தமிழ் பெயர்கள் சூட்ட தொடங்க வேண்டும். வீட்டில் பிறந்த பெண் குழந்தைக்கு, "தேன்மொழி என்று பெயர் வைக்க வில்லையா..ஏன் ரோஷிணி என்று பெயர் வைத்திருக்கிறீர்கள்?" - இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் அடிக்க வந்துவிடுவார்கள்..
ரமேஷ், விக்னேஷ், மணீஷ் இந்த பயிர்களுக்கு பதிலாக இளம்பரிதி, கவிநேயன் என்று பெயர் சூட்ட வைத்து விடுங்களேன் பார்ப்போம்..
இத்தனை ஏன்? எங்கள் பிராமண அகங்களிலும் சுப்ரமணியம், வேங்கடராமன், வைதேகி, புவனேஸ்வரி, மைதிலி, கிருஷ்ணஸ்வாமி இந்த பெயர்கள் எல்லாம் விட்டு விட்டு வினய், பனை என்றெல்லாம் பெயர் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்..
வேற்று மொழி தாக்கம் ஒரு சமூகத்தின் பண்பாட்டை வெகு எளிதில் சிதைத்துவிடும்..
ஆனால் என்ன வினோதமோ? இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ குடும்பங்களில் இந்த "modern style naming" கண்றாவி இருக்கிறதில்லை.. சமீபத்தில் ஒரு பாய் நண்பர் வீட்டில் பிறந்த குழந்தைக்கு இஸ்மாயில் என்ற பெயர்தான் வைத்திருக்கிறார்கள்.. கிருத்துவ குடும்பங்களிலும் சுத்தி சுத்தி ஜான், பீட்டர், மைக்கேல் இந்த ரீதியில்தான் குழந்தைகள் பெயர் வைக்கப்படுகின்றன..
பார்ப்போம்..
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்!
பள்ளிக்குழந்தைகளுக்கு மூதுரையும், நல்வழியும், ஆத்திசூடியும் தீவிரமாக திணித்தால் ஒழிய, தமிழ் சார்ந்த மொழியின் பண்பாடு ஒரு கேள்விக்குறி தான்..
தமிழை ஊன்றிப் படி, தமிழை சொல்லித்தா என்று பள்ளி, கல்லூரிகள் எங்கும் திணற திணற தமிழை திணி! என்று சொல்வதை விட்டு விட்டு, ஹிந்தி எழுத்துக்களை தார் அடித்து மறை என்று சொன்னால் அவனுக்கு எது சுலபம் ?..தார் பக்கெட்டை தான் தூக்குவான்..!!
- ஸ்ரீதர் கோபாலன் 6.8.2019
|