"அ" வுக்கு அடுத்து "ஆ" வருவது ஏன்?. சிறு ஒப்பீடு.
அரசனும், ஆண்டியாகலாம் என்பதை அறிந்திட!!
"இ" வுக்கு அடுத்து "ஈ" வருவதேன்?
இருப்பவன், ஈய வேண்டும் என இயம்பிட!!
"உ" வுக்கு அடுத்து "ஊ" வருவதேன்?
உழைப்பே ஊக்கம் என உணர்த்திட!!
*"எ" வுக்கு அடுத்து "ஏ" வருவதேன்?
எதையும், ஏன் என்று சிந்தித்துப் பார்க்க!!
"ஐ" மட்டும் ஏதோடும் சேராமல் தனித்து இருப்பதேன்?
அதற்கு நான் ( ஐ ) என்ற அகம்பாவம் இருந்தால் தனிமை படுத்தப்படுவாய் என்பதனை உணர்த்த!
"ஒ" வுக்கு அடுத்து "ஓ" வருவதேன்?
ஒற்றுமையே ஓங்கும் என்பதை உணர்த்திட!!!* எனவே நான் ( ஐ ) தான் என்கிற குணம், ஒரு மனிதனை தனிமைப்படுத்தி, ஒரு பெரிய பள்ளத்தில் தள்ளி விடும். |