🍀. குண்டக்க மண்டக்க : 🔸குண்டக்க : இடுப்புப்பகுதி, 🔸மண்டக்க: தலைப் பகுதி, சிறுவர்கள் கால் பக்கம், தலைப்பக்கம் எது என தெரியாமல் தூக்குவது, வீட்டில் எந்த எந்த பொருள் எங்கே எங்கே இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் இருப்பதுதான்...
🍀. அந்தி, சந்தி: 🔸அந்தி : . மாலை நேரத்திற்கும் , இரவுக்கும் இடையில் உள்ள பொழுது.. 🔸சந்தி: . இரவு நேரத்திற்கும் , காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது..
🍀. அக்குவேர்,ஆணிவேர்:🔸 அக்குவேர் : செடியி noன் கீழ் உள்ள மெல்லியவேர்...🔸 ஆணி வேர்: செடியின் கீழ் ஆழமாக செல்லும் வேர்...
🍀. அரை குறை: 🔸 அரை : ஒரு பொருளின் சரி பாதி அளவில் உள்ளது..🔸 குறை : அந்த சரிபாதி அளவில் குறைவாக உள்ளது...
🍀. அக்கம், பக்கம்: 🔸 அக்கம்: தன் வீடும், தான் இருக்கும் இடமும்... 🔸 பக்கம்: பக்தத்தில் உளவீடும், பக்கத்தில் உள்ள இடமும்...
🍀 கார சாரம் : 🔸காரம் : உறைப்பு சுவையுள்ளது... 🔸சாரம்: காரம் சார்ந்த சுவையுள்ளது...
🍀.இசகு பிசகு: 🔸 இசகு: தம் இயல்பு தெரிந்து ஏமாற்றறுபவர்களிடம் ஏமாறுதல்... 🔸 பிசகு: தம்முடைய அறியாமையால் ஏமாறுதல்...
🍀 .இடக்கு முடக்கு: 🔸 இடக்கு : கேளியாக நகைத்து, இகழ்ந்து பேசுதல்... 🔸 முடக்கு : கடுமையாக எதிர்த்து .தடுத்து பேசுதல்...
🍀. ஆட்டம் பாட்டம் : 🔸 ஆட்டம் : தாளத்திற்கு தகுந்தவாறு ஆடுவது... 🔸பாட்டம் : ஆட்டத்திற்கு பொருத்தமில்லாமல் பாடுவது...
🍀. அலுப்பு சலிப்பு : 🔸. அலுப்பு: உடலில் உண்டாகும் வலி... 🔸. சலிப்பு: உள்ளத்தில் ஏற்படும் வெறுப்பும், சோர்வும்,..
🍀. தோட்டம் துரவு , தோப்புது ரவு, 🔸 தோட்டம் : செடி, கொடி கிரை பயிரிடப்படும் இடம்... 🔸தோப்பு : கூட்டமாக இருக்கும் மரங்கள்... 🔸துரவு: கிணறு...
🍀. காடு கரை : 🔸 காடு : மேட்டு நிலம் (முல்லை)... 🔸 கரை : வயல் நிலம் .( மருதம், நன் செய் , புன்செய்)...
🍀.காவும் கழனியும்: 🔸 கா : சோலை... 🔸 கழனி: வயல்.. (மருதம் )...
🍀 நத்தம் புறம்போக்கு : 🔸 நத்தம் : ஊருக்குப் பொதுவான மந்தை... 🔸 புறம்போக்கு : ஆடு, மாடு மேய்வதற்கு அரசு ஒதுக்கிய நிலம்...
🍀 பழக்கம் வழக்கம் : 🔸 பழக்கம் : ஒருவர் ஒரே செயலை பல காலமாக செய்வது... 🔸 வழக்கம் : பலர் ஒரு செயலைப் பலகாலம் (மரபுவழியாக ) கடைப்பிடித்தது செய்வது..
🍀சத்திரம் சாவடி : 🔸 சத்திரம் : இலவசமாக சோறு போடும் இடம் ( விடுதி )... 🔸 சாவடி: இலவசமாக தங்கும் இடம்...
🍀. நொண்டி நொடம் : 🔸. நொண்டி : காலில் அடிபட்டோ, குறையால் இருப்பவர்.... 🔸. நொடம் : கை, கால் . செயல் சுற்று இருப்பவர்..
🍀. பற்று பாசம் : 🔸 பற்று :நெருக்கமாக உறவு கொண்டுள்ளவர்கள்... 🔸 பாசம் : பிரிவில்லாமல் மரணம் வரை சேர்ந்து இருப்பது...
🍀 ஏட்டிக்கு போட்டி : 🔸 ஏட்டி: விரும்பும் பொருள் அல்லது செய்வது... ( ஏடம் : விருப்பம்) 🔸 போட்டி : விரும்பும் பொருள். செயலுக்கு எதிராக வருவது தான்...
கிண்டலும் கேலியும்: 🔸 கிண்டல் : ஒருவன் மறைத்த செய்தியை அவன் வாயில் இருந்து வாங்குவது.... 🔸 கேலி : எள்ளி நகைப்பது,..
🍀. ஒட்டு உறவு : 🔸 ஒட்டு : இரத்த சம் பந்தம் உடையவர்கள்... உறவு : கொடுக்கல் சம்மந்தமான வகையில், நெருக்மமானவர்கள்...
🍀 பட்டி தொட்டி : 🔸 பட்டி: கால்நடைகள் (ஆடுகள்) வளர்க்கும் இடம் (ஊர்)... 🔸 தொட்டி : மாடுகள் அதிமாக வளர்க்கும் இடம்...
🍀 கடை கண்ணி : 🔸 கடை: தனித் தனியாக உள்ள வியாபார நிலையம்... 🔸 கண்ணி : தொடர்ச்சியாக அமைந்த கடைகள் , கடை வீதிகள்...
🍀 பேரும் புகழம் : 🔸 பேர் : வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் உண்டாகும் சிறப்பு பெருமை.. 🔸 புகழ்: வாழ்விற்கு பிறகும் நிலைப் பெற்றிருக்கும் பெருமை....
🍀. நேரம் காலம் : 🔸 ஒரு செயலைச் செய்வதற்கு நமக்கு வசதியாக அமைத்து கெள்வது (Time,.. 🔸 காலம் : ஒரு செயலை செய்வதற்கு பஞ்சாங்க அடிப்படையில் செய்ய முற்படும் கால அளவு..
🍀 பழி பாவம் :.. 🔸 பழி: நமக்கு தேவையில்லாத , பொருத்தமில்லாத செயலை செய்தால் இக்காலத்தில் உண்டாகும் அபச் சொல்... 🔸 பாவம், : தீயவை செய்து மறுபிறப்பில் நாம் அனுபவிக்கும் நிகழ்ச்சி...
🍀 கூச்சல் குழப்பம்: 🔸 கூச்சல் : துன்பத்தில் சிக்கி வாடுவோர் போடும் சத்தம்... (கூ - கூவுதல்) 🔸 குழப்பம்: துன்பத்தின் மத்தியில் உண்டாகும் சத்தத்தை கேட்டு, வந்தவர்கள் போடும் சத்தம்...
🍀 நகை நட்டு : 🔸 நகை : பெரிய அணிகலன்கள் (அட்டியல், ஒட்டியானம்.) 🔸 நகை : சிறிய அணிகலன்கள்..
🍀 பிள்ளை குட்டி: 🔸பிள்ளை : பெதுவாக ஆண் குழந்தையை குறிக்கும்... 🔸 குட்டி: பெண் குழந்தையை குறிக்கும்...
🍀 பங்கு பாகம்: 🔸 பங்கு: கையிருப்பு.. பணம்,நகை, பாத்திரம்.( அசையும் சொத்து)... 🔸 பாகம் : வீடு, நிலம்.. அசையா சொத்து...
🍀வாட்டம் சாட்டம் : 🔸 வாட்டம் : வளமான தோற்றம், வாளிப்பான உடல்... 🔸 சாட்டம் : வளமுள்ள கனம். தோற்றப் பொலிவு...
🍀. காய் கறி : 🔸 காய்: காய்களின் வகைகள்... 🔸 கறி : சைவ உணவில் பயன்படுத்தப்படும் கிழங்கு வகைகள்...
🍀 ஈவு இரக்கம் : 🔸 ஈவு : (ஈதல்) கொடை கொடுத்தல், வறியவருக்கு உதவுதல்... 🔸 இரக்கம் : பிற உயிர்களின் மேல் அன்பு காட்டுதல்...
🍀 பொய்யும் புரட்டும்: 🔸 பொய்: உண்மையில்லாததை கூறுவது... 🔸 புரட்டு : ஒன்றை நேருக்கு மாறாக மாற்றி பொய்யை உண்மை யென கூறி நடிப்பது...
🍀 சூடு சொரனை: 🔸 சூடு : ஒருவர் தகாதசெயல், சொல்லை செய்யும்போது உண்டாகும் மனகொதிப்பு... 🔸 சொரனை: நமக்கு ஏற்படும் மான உணர்வு,,,😁👏💐 |