Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
முதிர்ச்சி என்பது முதுமை அல்ல
Posted By:peer On 8/4/2020 2:39:56 PM

முதிர்ச்சி என்பது
முதுமை அல்ல

முதிர்ச்சி என்பது
தன்னைத் திருத்துதல்

முதிர்ச்சி என்பது
கோபம் விடுதல்

முதிர்ச்சி என்பது
விட்டுக் கொடுத்தல்

முதிர்ச்சி என்பது
சுற்றம் தாங்குதல்

முதிர்ச்சி என்பது
வெற்றியில் நிதானம்

முதிர்ச்சி என்பது
தோல்வியில் தைரியம்

முதிர்ச்சி என்பது
சூழலை அறிதல்

முதிர்ச்சி என்பது
மனதின் அமைதி

முதிர்ச்சி என்பது
வேகத்தில் விவேகம்

முதிர்ச்சி என்பது
விலகிப் பார்த்து
பிரச்சனை தீர்த்தல்

முதிர்ச்சி என்பது
ஒப்பீடு தவிர்த்தல்

முதிர்ச்சி என்பது
பொதுநலன் காத்தல்

முதிர்ச்சி என்பது
ஆசையைத் துறத்தல்

வயதின் முதிர்ச்சி
முதுமை

அறிவின் முதிர்ச்சி
புலமை

அன்பின் முதிர்ச்சி
காதல்

மனதின் முதிர்ச்சி
ஞானம்

வயலின் முதிர்ச்சி
பசுமை

வாழ்வின் முதிர்ச்சி
அடக்கம்

கல்வியின் முதிர்ச்சி
கனிவு

தோழமையுடன்
சீனி.சந்திரசேகரன்




தமிழ் மொழி
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..