வாய்மொழி திறன் ( தாய்மொழி )
தமிழ் , தமிழ் என பெருமை மட்டும்(பேச,படிக்க இயலாதோர் ) கொள்வோர். மற்றும் உணர்வு கொண்டோர் (பேச,படிக்க தெரிந்தோர் ) என அனைவரும் உரக்க கீழ்வரும் சொற்றொடரை மொழியுங்கள் .
மிக சிறப்பாக ,உண்மையான எழுத்து ஒலியை *உச்சரித்தால் ( உண்மையில் ) நீங்களே மரபுவழி மாந்தன் .
இந்தப் பயிற்சி உங்களுக்கு !
ல / ள / ழ மூன்றிற்கும் ஒலி வேறுபாடு தெரியாதவர்கள் தான் தமிழை தவறாக பேசுகிறார்கள்.
குழந்தைகள் , சிறுவர்கள் , இளைஞர்கள் , பெரியோர் என அனைவரும் பயிற்சி எடுத்து எழுத்தொலி உச்சரிப்பு உணர்தல் சிறப்பு .
எனது பாட்டி எங்களுக்கு கொடுத்த பயிற்சி :
அவளை அவலளக்கச் சொன்னேன் , அவளும் அவலளக்கவில்லை .
இவளை அவலளக்கச் சொன்னேன் , இவளும் அவலளக்கவில்லை .
அவளும் , இவளும் அவலளக்காவிட்டால் , எவள் அவலளப்பாள் ?"
சிறப்பு ழ கரத்தை சிரமம் இன்றி சிறப்புடன் சொல்லுங்கள் .
இதில் தெரியும் தமிழணர்வு 😆
வியாழக்கிழமை ஆழமான குழியில் வாழைப்பழம் அழுகிக் கொழுகொழுத்து விழுவதைக் கண்ட குழந்தைகள் அழத்தொடங்கினர் .
தோவாழாக்கோட்டையிலே மூவாழாக்கு உழக்கு நெல்லுக்கு ஏழாயிரத்து , எழுநூற்று , எழுபத்தேழு வாழைப்பழம் !
சொல்லிப்பாருங்கள்** !
சரியாக உச்சரிக்க இயலாதோர்( அனைத்து வயதினரும் ) பயிற்சி மேற்கொள்க.
அடிப்படை அறிவோம் (உணர்வோம்) பின் பெருமை கொள்வோம்
நன்றி |