Posted By:peer On 9/13/2020 6:13:30 PM |
|
நம் குழந்தைகள், மற்றும் பெற்றோர்கள் படித்து மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு பாடல்:
22 முறை ழகரம் வரும் ஒரே ஒரு பாடல்: - தமிழுக்கு ஒரு சிகரம்!!!
ஒழுகலரி தழிகலியி லுழியுலகு பழிபெருகு வழியைநினையா முழுதுடலி லெழுமயிர்க டழுவுமுனி குழுவினொடு கெழுவுசிவனைத் தொழுதுலகி லிழுகுமல மழியும்வகை கழுவுமுரை கழுமலநகர்ப் பழுதிலிறை யெழுதுமொழி தமிழ்விரகன் வழிமொழிகண் மொழிதகையவே. பொருள்: நல்லொழுக்கத்தில் நிற்றல் அரிதாகி அழிகின்ற கலிகாலத்தில் உலகில் பழிபெருகுதலை நினைந்து வருந்தி, உடல் முழுவதும் முடி முளைத்துள்ள உரோமச முனிவர் தம் குழுவினருடன் அங்குத் தங்கி, சிவபெருமானைத் தொழுது, உலக இச்சைக்கு இழுக்கின்ற மலங்கள் நீங்கிச் சிவஞான உபதேசம் பெற்றதால் கழுமலம் எனப் போற்றப்படும் திருத்தலத்தினை வணங்குவோரின் குற்றம் இல்லையாகச் செய்கின்ற தலைவனும், எழுதும் வேதமெனப் போற்றப்படும் தமிழ் வல்லவனுமாகிய ஞானசம்பந்தன் அருளிய இந்த வழிமொழித் திருவிராகப் பாசுரங்கள் பாடிப் பயன்பெறும் தன்மை உடையன.
- எழுதியவர்: திருஞானசம்பந்தர் நூல்: தேவாரம் |