Posted By:peer On 10/14/2020 10:31:43 AM |
|
அறியப்படாத தமிழ் மொழி - கண்ணபிரான் இரவிசங்கர் அவர்கள்
அறியப்படாத தமிழ் மறுக்கப்பட்ட தமிழ் மறைக்கப்பட்ட தமிழ் இன்றளவும் மறைக்கப்பட்டு கொண்டிருக்கும் தமிழ்.
இன்றைய தலைமுறைகளுக்கு மொழி தெரியாததால்.. சற்றே மதம் பிடித்துள்ளதால்... சடங்கு சம்பிரதாயம் என பழகி விட்டதால்...
நம் மொழியின் மரபை பழிக்கும் சொற்களையே மந்திரம் என்ற பெயரில் ஒலிக்கவிட்டு...
அறியாமலே கண்மூடி சடங்கு செய்து கொண்டிருக்கிறோம். இன்னும் எத்தனை நாள் தான் இப்படியே செய்யப் போகிறோம்!
தொல்காப்பியர் முதல் தொ. பரமசிவன் வரை...
வளளுவன் முதல்..மொழிஞாயிறு பாவாணர் வரை என்று...
அறிஞர்கள் அளவிலே தங்கிவிட்ட தமிழ் மொழியின் உண்மைகளை...
உங்கள் இல்லத்திற்கு கொண்டு வருவதே இந்த நூலின் தலையாய நோக்கம்.
புதிய இளைஞர்களின மொழி உணர்வு நம் தமிழுக்கு பெருமை சேர்க்கிறது.
தொழில் நுட்பம் பயின்ற இளைஞர்கள் தமிழ் மொழி நுட்பத்தோடு இயங்குகிறபோது அவர்களோடு மொழியும் பெருமை பெறுகிறது.
கால வெள்ளத்தில் ஊறி ஊறி தூர் வாராமலேயே மண் அண்டிப் போய் குளமாக இருந்தது தற்போது குட்டையாகி விடும் அல்லவா...?
அதுபோல தமிழ் குளத்தை உங்களோடு சேர்த்து தூர் வாரும் அறப்பணியே இந்த புத்தகம்.
வாருங்கள்... அனைவரும் மகிழ்ச்சியாக ஒரு கை கொடுத்து வாசிப்போம் தோழர்களே...
நூலெனும் விசைப் படகுக்குள் பயணம் செய்யலாம் வாருங்கள்...
நூலை வாசிக்கும் முன் உங்களோடு சிலவரிகள் என அன்பு வேண்டுகோள் வைக்கிறார் நூலாசிரியர் கரச என்றழைக்கப்படும் முனைவர் கண்ணபிரான் இரவிசங்கர் அவர்கள்.
உங்களின் தனிப்பட்ட மதப்பிடித்தம் அரசியல் பிடித்தம் எதுவாயினும் சற்றே அதை மறந்து வாசியுங்கள்.
தற்பிடித்தம் கடந்து தமிழைத் தாயாக தமிழாக மட்டும் அணுகி வாசிப்போம்.
இதுபோன்ற அரிதிலும் அரிதான நூல்களை நாமும் வாசிப்போம். அடுத்த தலைமுறைக்கு அவசியம் அடையாளப் படுத்துவோம்!
தமிழ் கூறும் நல்லுலகிற்கு இந்நூல் ஓர் பொக்கிஷம்!
தோழமையுடன் சீனி.சந்திரசேகரன் |