மக்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நோய் வராமல் பாதுக்காக்க என்ன செய்யவேண்டும் என்று கேட்டுப்பாருங்கள். அவர்களால் பதில் சொல்ல முடியாது. ஆரோக்கியத்தினை தீர்மார்மானிக்கும் சமூகக் காரணிகள் பற்றி கேளுங்கள், அது மருத்துவர்கள் வேலையில்லை அது சமூகவியலாளர் வேலை என்பார்.
8வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். நான் அரசு மனநலக்காப்பக்கத்தில் பணிபுரிந்திருந்த போது தாம்பரம் சானடோரியம் காசநோய் மருத்துவமனைக்கு கூடுதல் பணிக்காக செல்வதுண்டு.
அங்கு பல்வேறு மருந்துகளின் வீரியத்தை எதிர்கொள்ளும் திறன் கொண்ட எம் டி ஆர் காசநோய் கிருமியால் பாதிக்கப்பட்ட நோயர்களுக்கு புதுவகை மருந்துகளை சேர்க்கும் முன் மனநலபரிசோதனை செய்யது அறிக்க அளிக்கும் படி நோயர்களை அனுப்புவார்கள்.
அப்போது ஒருமுறை ஒரு தொழிலாளியை.பரிசோதிக்க வேண்டி அனுப்பப்பட்டார். அரியலார் அருகே இருக்கும் ஒரு சிறுகிராமம். அரியலூர் என்றவுடன் அவர் வாழும் சூழலை விசாரிக்க வேண்டும் என்று கேட்டது தான் தாமதம், சிமெண்ட் தொழிற்சாலை மாசினால் மிகவும் சிரமத்தோடு போராடிய கதையைக் கூறினார்.முதல் முறை காசநோய் வந்ததும் ஏன் மருந்துகளை நிறுத்தினீர்கள் என்று கேட்டேன். சார் அவங்க கொடுத்த மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுத்தால் குமட்டிக்கொண்டு வாந்தி வரும் தலைசுற்றும், நான் ஒருவன் தான் வேலைக்கு போகவேண்டும், மூட்டைத் தூக்கினாதான் பொழப்பு. அதான் மாத்திரைய நிறுத்திட்டேன். என்றார்.
அவருடைய உள்நோயர் பதிவேட்டில் எந்த பதிவும் இல்லை. மருந்துகள், அதைப் பற்றிய விவரங்கள் அவரது ரத்த பரிசோதனை மட்டுமே இருந்தது.ஒருவர்க்கு எதனால் mdr tb லருகிறது என்ற ஆய்வும் அதை தடுக்கும் வழிகளும் தேவையா ? வெறும் மருந்துகளை மட்டுமே மையப்படுத்திய மருத்துவமுறை கிருமிகளை என்னவாக மாற்றியிருக்கிறது ?
இதை பற்றி உடன் பணிபுரிந்த சகமனநலமருத்துவரிடம் கேட்டேன். எங்களுக்கு மருந்தெழுத மட்டும் தான் வேலை , அவன் பால் குடிச்சானா கோழிக்கறி கெடச்சுதா சாப்பிட்டானா என்று பார்க்கிற வேலை எங்களது இல்லை என்றார்.
கிருமி ---நோய்----மருந்து என்ற மாஜிக் புல்லட் மாதிரியில் மிகவும் சாதாரண இயந்திரத்தனமான குறுகிய சட்டக்த்திற்குள்ளே நோயை நோயை குணப்படுத்தும் சிகிச்சையை முன்வைக்கும் முறையில் வார்த்தெடுக்கப்பட்டவர்கள் அப்படி தான் பேசுவார்கள்.
நோயாளி வந்தால் அவன் வாயில் மாத்திரையை.கொட்டினால் வியாதி தீர்ந்துவிடும் , so simple .
ஆனால் ஒருவனுக்கு நோய் ஏற்படுமா ஏற்படாதா என்பதில் தொடங்கி , அவனுக்கு நோய் ஏற்படுவதற்கான இடர்பாடுகள் ( risk factors) அவன் பாதுக்கப்புக்கில்லாத protective factors, அவன் வாழும் சூழல் அவன் உண்ணும் உணவு , அவன் வாழ்க்கை தரம் அவன் தினந்தோறும் சந்திக்கும் அழுத்தங்கள் , அவனுக்கு வியாதி வந்தால் அதை தனிமனித சிக்கலாக பார்க்காமல் சமூகப்பிரச்சனையாக பார்க்கும் ஓர் அரசாங்கம், இலவச சிகிச்சை , அவனுக்கு வேலையிழப்பு ஏற்படாமல் பாதுக்காப்பது நோயினால் விடுப்பு என்றால் அதற்கு ஊதியம், இப்படி அவன் எந்த தளத்தில் , சமூகத்தில் எந்த ஏணியில் இருக்கிறானோ அதுவே ஒருவர்க்கு நோய் உண்டாவதையும் நோயிலிருந்து மீள்வதையும் தீர்மானிக்கிறது. அந்த proximate factors , distal factors எதையும் கணக்கிலெடுக்காமல் பேச வைப்பது இன்றைய மருத்துவக் கல்வி முறை.
மேலும் , நோய் உண்டாக்கும் கிருமிகளின் மரபணு மாற்றம் அது நம்முடைய மருந்துகளுக்கேற்ப, சூழலியல் மாற்றத்திற்கேற்ப , சமூக மாற்றத்திற்கேற்ப எப்படி வீரியமானதாக மாறுகிறது என்பதனை பொருத்திப்பார்க்கவேண்டும்.அப்படி செய்கிறார்களா என்றால் இல்லை .
இதற்கிடையே மருந்துகளின் உற்பத்தி அதை யார் தீர்மானிக்கிறது , அதன் விலை அந்த மருந்துகளின் காப்புரிமை அந்த மருந்துகளின் ஆராய்ச்சி முடிவுகளை மருந்து கம்பெனிகளின் பங்குதாரராக இருந்து கொண்டு அந்த மருந்தை சந்தைப்படுத்துகிறாரா என்பதை ஆய்வு செய்யவேண்டும்.
ஒரு.நாட்டின் சுகாதாரக் கொள்கை முடிவுகளை எந்த கார்பொரெட் நிறுவனம் தீரமானிக்கிறது , ஒரு.நாடு.எந்த நோய்க்கான தடுப்பு நடவடிக்கையை. முன்னெடுக்கவேண்டும் , எந்த நோய்களை முதன்மைப்படுத்தவேண்டும் இவைகளை.யார் கட்டுப்படுத்துவது என்று பல விஷயங்களை ஆய்வு செய்ய வேண்டும்..
இந்த நோக்கில் மருத்துவத்தையும் துறையையும் நோயையும் மக்களையும் பார்க்கவேண்டும். செய்கிறார்களா? ஒரு.காலத்தில் செய்தார்கள். செய்தவர்களில் பலர் இன்று நீர்த்துப் போய்விட்டனர்..
இயங்கியல் கண்ணோட்டதில் பார்ப்பதின் தேவையும் , ஒரு குறிப்பிட்ட.சூழலில் தான் நோய் உருவாவதும் மருந்துகள் உற்பத்தியாவதும் அந்த மருந்து கிடைக்காமல் போவதும் , அந்த மருந்தை அவசரகதியில் லாபநோக்கத்தில் உருவாக்கி அதை புழக்கத்தில்விடுவதும்,அது தான் அறிவியல் என்று பேசுவதும் , எல்லோரையும் நம்பவைப்பதும் நிகழ்கிறது.
என்னை பொறுத்தவரை ருடால்ப் விர்சோவ் கூறியது போன்று "மருத்துவர்கள் சாமானிய மக்களின் வழக்குரைஞர்கள்". "மருத்துவம் என்பது அரசியல்" இதை மாணவர்களிடம் கொண்டு செல்லவேண்டும்.
~ மருத்துவர் அரவிந்தன் |