அன்பின் சகோதர, சகோதரிகளே,
கொரானா பாதிப்பு ஏற்படாமல் வராமல் தடுக்க, நமது உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, நமது வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எளிமையாக மருந்துகளை தயாரிக்கலாம். கீழ் குறிப்பிட்டதில் எது உங்களுக்கு எளிதாக உள்ளதோ அதை பயன்படுத்தலாம்
1. இஞ்சி சிறிதளவு அதிகம் சேர்த்து காலை , மாலை தேனீர் அருந்தலாம்.
2. நல்லமிளகு 6, 1தேக்கரண்டி பொரிக்கடலை, 3/4 தேக்கரண்டி சீரகம் - இவற்றை வாயில்போட்டு நன்றாக மென்று உமிழ்நீருடன் நன்றாக கலந்து உட்கொள்ள வேண்டும். தினசரி இரு முறை சாப்பிடலாம்.
3.சாப்பாட்டிற்கு பின் மூன்று பேரீத்தப்பழம் வீதம் தினசரி சாப்பிடலாம்.
4. ஆரஞ்ச் ஜுஸ், லெமனுடன் இஞ்சி கலந்த ஜுஸ் தினசரி ஒரு டம்ளர் அருந்துவதை பழக்கமாக்கி கொள்ளுங்கள்.
5. கபசுர குடிநீர் வாரம் இருமுறை அருந்துங்கள்
6. தினமும் இரவில் பாலில் மிளகு, மஞ்சள் போட்டு குடிக்கலாம்
7.அதிமதுரம், மஞ்சள், சீரகம் அடங்கிய கஷாயம் வாரம் இருமுறை குடிக்கலாம்.
8. கருஞ்சீரகமும் தேனும் கலந்து அருந்தி வரலாம்
இது தவிர கருஞ்சீரகத்தையும், கல் உப்பையும் துணியில் கட்டி தேய்த்து நுகர்ந்து 10 முதல் 15 தடவை ஆழ்ந்த மூச்சு விடவும். இதனை தினமும் இரு முறை செய்யலாம்.
மேலும் உளு செய்யும் போது அதை முறைப்படி கை, கால், நாசி,தொண்டை, முகம், கண், காது, இந்த உறுப்புகளுக்கு நல்லமுறையில் தண்ணீரை செலுத்தி நன்றாக சுத்தம் செய்துக் கொள்வதோடு மிஸ்வாக் செய்து வாருங்கள்.
வென்னீரில் உப்பு போட்டு தினமும் இரு முறை வாய் கொப்பளித்து வருவதோடு , தினமும் ஆவி பிடிக்கவும். ஆவி பிடிக்கும்போது நிமிர்ந்து உட்கார்ந்து ஆவி பிடிக்க வேண்டும். நுரையீரல் வளையாமல் நேராக இருக்க வேண்டும்.
ஆர்சானிக் ஆல்பம் மருந்தினை முதலில் 3 நாட்களுக்கும் அதன் பிறகு மாதத்திற்கு ஒரு தடவை 3 நாட்களும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உடல் ஆரோக்கியத்திற்கு நடை பயிற்சி மிகவும் அவசியம். காலை சுபுஹு க்கு பின் தினசரி குறைந்தபட்சம் 20 நிமிடம் நடக்க வேண்டும். தற்போது லாக் டவுன் நிலைமையில் மொட்டை மாடியிலும் நடைப் பயிற்சி செய்யலாம்.
தினமும் இரவு நேரங்களில் 6 முதல் 8 மணி நேரம் உறங்குவதும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது.
உடல் உழைப்பிற்கு ஏற்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சியினை 30 நிமிடம் குறைந்த பட்சம் வாரத்திற்கு மூன்று நாட்களாவது கண்டிப்பாக செய்து வரவேண்டும்.
குடும்பம், தொழில், பொது காரியங்களில் நல்ல சிந்தனையை வளர்த்து கொள்ளுங்கள்.
கடைவீதிக்கோ, அலுவலகத்திற்கோ சென்றுவிட்டு வீட்டுக்கு வருபவர்கள் உள்ளே செல்லும் முன் அல்லது சென்ற பின் உடனடியாக கை கால் முகம் சோப்பு போட்டு கழுவி சுத்தம் செய்வதன் மூலம் நோய் தொற்றை தவிர்க்கலாம்.
தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் பொது நிகழ்வுகளில் ஒன்று கூடுவதையும் உறவினர்கள் வீட்டுக்கு செல்வதையும் தங்களது வீட்டுக்கு அழைப்பதையும் தவிர்த்துக் கொள்வது சிறந்தது.
அத்தியாவசியத் தேவைக்கு வெளியேறுபவர்கள் முகக்கவசம் அணிந்து செல்லவும். முகக்கவசம் நம்மை தொற்றிலிருந்து காப்பதோடு நம் தொற்று பிறருக்கு பரவாமலும் பாதுகாக்கிறது. துணியிலான மாஸ்க்கை விட சர்ஜிகல் மாஸ்க் அணிவதுதான் சிறந்தது என்றும், இது வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த உதவிடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சர்ஜிகல் மாஸ்க் மேல் துணி மாஸ்க் அணிந்து கொள்ளலாம். பயன்படுத்திய பிறகு உடனே சோப் போட்டு, சுடு தண்ணீரில் கழுவி கொள்ளவும். வீட்டில் நோயாளிகள் இருந்தால் அவர்களை கவனிப்பவர்கள் N95 மாஸ்க் அணிந்து கொள்வது சிறந்தது. சர்ஜிகல் மாஸ்க் பயன்படுத்தினால் கவனமாக டிஸ்போஸ் செய்து விட வேண்டும்.
தன்னார்வலர்களும் N95 மாஸ்க் அணிவது பாதுகாப்பானது.
ஏர் கண்டிசனர் பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஐஸ் கிரீம் மற்றும் பிரிஜ்ஜில் உள்ள குளிர்ந்த உணவுகளை சாப்பிடக் கூடாது.
மருத்துவரின் கூற்றுப்படி உடலில் கார்ட்டிஸால் (cortisol)என்ற ஹார்மோன் (சுரப்பி) மன அழுத்தம் காரணமாக அதிக அளவில் சுரக்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல்வேறு நோய்கள் உடலில் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே குர்ஆன் ஓதுதல், 5 நேர தொழுகைகளை முழுமையாக நிறைவேற்றுதல், திக்ர் செய்தல் மூலமாக இறைவனை அதிகம் நினைவு கூர்ந்து மன அமைதி பெற்று மன அழுத்தத்தை வெளியேற்றலாம்
அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க! திருக்குர்ஆன் 13:28
ஷஹீஹ் புகாரி 2067: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தம் வாழ்நாள் அதிகரிக்கப்படவேண்டும்' என்று விரும்பினால் அவர் தம் உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்!'
#அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக்(ரலி)
இன்ஷா அல்லாஹ் நமது வாழ்வு நலமாக அமையும் .
------------------------------------------------------------------------------------------------------- மாஸ்க் அணிதல், தனிநபர் இடைவெளி, சானிடைசர் அல்லது சோப்பில் கை கழுவுதல் - இம் மூன்றையும் எப்போதும் மறக்க வேண்டாம். |