1. அனைத்து காய்ச்சல்களும் கொரானா இல்லை என்பதை ஆழமாக நினைவில் கொள்ளுங்கள். இருந்தாலும் தற்போதைய சூழலில் காய்ச்சல் வந்தால் தாமதிக்காமல் முதலாவதாக மருத்துவரை சந்தித்து அவர் சொல்வதை பின்பற்றுங்கள். தாமதமாக சிகிச்சைக்கு செல்வது நல்லதல்ல என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்டிபயாடிக், ஆண்டி வைரல் என முதலிலே சிகிச்சையை ஆரம்பித்து விட்டால் எளிதாக இன்ஷா அல்லாஹ் குணப்படுத்தி விடலாம். எனவே எவ்வித பயமுமின்றி காய்ச்சல் வந்த முதல் நாளிலேயே சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள்.
2. கொரானா உயிருக்கு ஆபத்தான நோய் அல்ல. எளிதாக குணப்படுத்த கூடிய சாதாரண காய்ச்சல் தான். சரியான சிகிச்சையும் போதுமான விழிப்புணர்வும் தான் அதற்கு மிகவும் அவசியம்
3. வீட்டில் யாருக்கும் உடல் சூடு, உடல் வலி, இருப்பின் அவர்களுக்கு முழுமையாக ஓய்வளித்து, தினமும் உடல் சூட்டை கண்காணித்து வரவும்.
4. உடல் சூடு 100 டிகிரி க்கு மேல் சென்றால் பேரசெட்டமால் ( paracetamol) 500mg அல்லது 650mg ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கு ஒருமுறை காய்ச்சல் குறையும் வரை தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளவும். காய்ச்சல் இல்லை என்றால் மாத்திரை போட வேண்டியதில்லை
5. வயிற்று போக்கு ஏதும் இருப்பின் உடல் சோர்வு பலஹீனத்தை போக்க மருந்தகங்களில் எளிதாக கிடைக்கும் ORS பொடி (Oral Rehydration Salts Powder) தண்ணீரில் கலந்து குறிப்பிட்ட இடைவெளியில் முடிந்த அளவு குடிக்கலாம். அல்லது உப்பு மற்றும் சீனி கலந்த தண்ணீரை ஒவ்வொரு முறையும் கழிப்பிடத்திற்கு சென்று வந்த பின் குடிக்கவும்
6. அதிகமாக தண்ணீர் குடித்து உடம்பில் நீர் சத்து குறையாமல் கவனித்து கொள்ளவும். இதனால் உடலில் உள்ள நச்சுத்தன்மையும் வெளியேறும். உணவுகளில் எளிதில் ஜீரணமாக கூடிய உணவுகளாகவும் அதிலும் 65% கார்போஹைட்ரேட், 20% ப்ரோட்டின் மற்றும் 15% கொழுப்பு உள்ள உணவுகளையும் உட்கொள்வது சிறந்தது
7. வைட்டமின் C அதிகம் இருக்கும் கொய்யாப்பழம், லேசான புளிப்புள்ள நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற காய்கள் மற்றும் பழங்களும், வைட்டமின் A அதிகம் இருக்கும் பால் , முட்டை , கேரட், பீட்ரூட் போன்றவையும், வைட்டமின் D அதிகம் பெற சூரிய வெயிலில் குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரையுள்ள நேரத்தில் அதிகபட்சம் 15 நிமிடம் மட்டுமே இருந்து தேவையான வைட்டமின் களை உடலில் கிரகித்துக்கொள்ளலாம்
8. குறைந்த பட்டசம் 8 மணி நேர ஆழ்ந்த தூக்கம் மூலமாக கிடைக்கும் cytokines கொண்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் தொற்றிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம், கூடவே சிறிய அளவிலான உடற்பயிற்சியையும் மேற்கொள்வது நலம்
9. .வறட்டு இருமல் ஏதும் இருப்பின் ஆவி பிடித்தல் போதுமானது , இருமும் போது நெஞ்சில் வலி மற்றும் மூச்சு திணறல் ஏற்படின் மருத்துவரை அணுக வேண்டும்
10. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பவர்கள் மணிக்கட்டில் நாடி பரிசோதித்து கொள்வது நலம். அதில் ஒரு நிமிடத்திற்கு 125 க்கு மேல் நாடி துடிப்பு இருப்பின் உடனடியாக மருத்துவரை அணுகவும்
11. தொடர் காய்ச்சலில் அதிகமான சோர்வு, அதிக நேர தூக்க நிலை, உணர்வற்ற நிலை, காது மடல், மூக்கின் நுனி, கை கால் விரல் நுனிகளின் தோல்கள் நீல நிறத்தில் மாற கண்டால் காலம் தாழ்த்தாமல் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்
12. நோய் தொற்று உள்ளவர்கள் அல்லது காய்ச்சல் , ஜலதோஷம், இருமல், தும்மல் போன்ற உபாதைகள் உள்ளவர்கள் தங்கள் வீட்டில் இருக்கும் போது முக கவசம் அணிந்து கொண்டு நோய் தீரும் வரை தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது சிறந்தது
13. அலோபதி, சித்தா , ஆயுர் வேதா , யுனானி , பாட்டி வைத்தியம் என்று எந்த மருத்துவ முறை மருந்தாகினும் துறை சார் வல்லுனர்கள் பரிந்துரைத்த மருந்துகள் மற்றும் அளவுகளில் அவர்களின் தகுந்த ஆலோசனைகள் இல்லாமல் எடுத்து கொள்வது முற்றிலும் ஏற்புடையதல்ல
14. மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை தயக்கமின்றி எடுத்து கொள்வதன் மூலமாகத்தான் ஏற்பட்டிருக்கும் நோயை உறுதிசெய்வதும் நோயின் தீவிரம் அறிந்து சிகிச்சையளித்து உயிர் காக்கவும் முடியும்
15. நோயைப்பற்றிய விழிப்புணர்வும், சரியான சிகிச்சையும், தேவையான உணவு கட்டுப்பாடும் இருப்பின் எல்லா நோய்களுமே விரைவில் குணப்படுத்தக் கூடியதே.
நோய்களை அதற்கான நிவாரணம் இல்லாமல் இறைவன் அனுப்புவதில்லை என்ற வாக்கில் நம்பிக்கை வைத்து மனோதிடத்துடன் கையாண்டால் எல்லா நோய்களையுமே வென்றெடுக்க முடியும். |