Posted By:peer On 9/14/2021 10:46:59 AM |
|
ல/ ள / ழ மூன்றிற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் தான் தமிழை தவறாக பேசுகிறார்கள்.
எனது பாட்டி எங்களுக்கு கொடுத்த பயிற்சி:
"அவளை அவலளக்கச் சொன்னேன், அவளும் அவலளக்கவில்லை.
இவளை அவலளக்கச் சொன்னேன், இவளும் அவலளக்கவில்லை.
அவளும், இவளும் அவலளக்காவிட்டால், எவள் அவலளப்பாள்?"
வியாழக்கிழமை ஆழமான குழியில் வாழைப்பழம் அழுகிக் கொழுகொழுத்து விழுவதைக் கண்ட குழந்தைகள் அழத்தொடங்கினர்.
தோவளைக்கோட்டையிலே மூவாழாக்கு உழக்கு நெல்லுக்கு ஏழாயிரத்து, எழுநூற்று, எழுபத்தேழு வாழைப்பழம்!
சொல்லிப்பாருங்கள்!
|