நம் வாழ்க்கை தேடலில் நாம் தொலைக்கக் கூடாத மிகப் பெரிய புதையல் நமது மன அமைதி.
எந்த சூழ்நிலையிலும் வாழப் பழகிக் கொள்ளுங்கள்.
அப்போது தான் உங்கள் மனதிற்கு எதையும் தாங்கும் பக்குவம் வரும்.
உங்கள் மனதில் மாறாத உறுதி இருந்தால் நடக்கும் வாழ்க்கை வரமாகும்.
நம்புங்கள், வாழ்க்கையில் உங்களால் எதையும் சாதிக்க முடியும் என்று.
எந்த அவமானத்தையும் உங்கள் மனதில் வலியாய் எடுத்துக் கொள்ளாதீர்கள்.
வாழும் வழியாய் எடுத்துக் கொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கை சிறக்கும்.
உலகத்தை இயக்குவது முற்றிலும் இயந்திரங்கள் தான். நொடி காட்டும் முள் முதல் முடிவு தரும் சாம்பல் வரை.
உணர்வுகளால் உலகை ஆளுங்கள். உள்ளங்கள் உண்மையில் ஆனந்தமாகும்.
பிடிவாதம் விட்டுப் பிடி கொடுத்துப் பாருங்கள். வெற்றி நிச்சயம்.
நாம் செய்யும் செயலில் எத்தனை குறைகள் இருந்தாலும். முடிவில் வரும் நிறைவு போதுமானது.
குறைகளில் அல்ல. மனநிறைவில்தான் வாழ்க்கை அமைகிறது.
நீங்கள் உண்மையாய் இருக்கிறவரை, பொய்யானவர்கள் உங்களை நெருங்கவே பயப்படுவார்கள்.
முயற்சியில் வரும் தவறுகள் பிழையில்லை. தவறு வருமோ என்று முயலாமல் இருப்பதே மிகப் பெரிய பிழை.
உங்கள் வார்த்தை எப்படி இருக்குமோ, அந்த அளவிற்கு நீங்கள் மதிக்கப்படுவீர்.
சில நினைவுகளுக்கு ஒரு கெட்ட குணம் இருக்கிறது. நாம் எப்ப தனிமையில் இருக்கிறோமோ. அப்ப வந்து நம்மளைக் கொல்லும்.
வாய்ப்புகளை மீறிய நல்ல நடத்தையே, நல்ல மனிதனின் அடையாளம்.
ஒருவரின் மனப்பாரத்தை இறக்கி வைக்க உடல் பலம் தேவையில்லை. அன்பும் பரிவும் மட்டுமே போதும்.
சந்தர்ப்பமும். சூழ்நிலையும் நல்லவர்களைக் கெட்டவர்களாக்கிக் கெட்டவர்களை உத்தமர்களாக்கி நிற்க வைத்து விடும்.
ஆனால், உண்மை ஒருநாள் உலகறிய வெளிவந்தே தீரும். அப்போது யார் யார் எப்படி என்ற மாயை விலகும்.
|