Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
சில காயங்கள்
Posted By:peer On 2/15/2023 10:35:53 AM

சில காயங்கள் " மருந்தால் " சரியாகும்.
சில காயங்கள் " மறந்தால் " சரியாகும்.

மனிதனுக்கு " பிரச்சனை " அதனால்,
கடவுளுக்கு " அர்ச்சனை ".

" வறுமை " வந்தால் வாடக்கூடாது.
" வசதி " வந்தால் ஆடக்கூடாது.

வீரன் சாவதே இல்லை.
" கோழை " வாழ்வதே இல்லை.

மனிதனுக்கு ABCD " தெரியும் " ஆனால் "Q" ல போகத் "தெரியாது".
எறும்புகளுக்கு ABCD " தெரியாது " ஆனால் "Q" ல போகத் "தெரியும்"

உண்மை எப்போதும் " சுருக்கமாக " பேசப்படுகிறது.
பொய் எப்போதும் " விரிவாக " பேசப்படுகிறது.

" கருப்பு " மனிதனின் இரத்தமும் சிவப்புதான்.
" சிவப்பு " மனிதனின் நிழலும் கருப்புதான்

வியர்வை துளிகள் " உப்பாக " இருக்கலாம். ஆனால்,
அவை வாழ்க்கையை " இனிப்பாக " மாற்றும்.

கடனாக இருந்தாலும் சரி,
" அன்பாக " இருந்தாலும் சரி, திருப்பி செலுத்தினால்தான் மதிப்பு.

" செலவு " போக மீதியைச் சேமிக்காதே.
" சேமிப்பு " போக மீதியைச் செலவுசெய்.

உன்னை நீ செதுக்கிக் கொண்டே இரு " வெற்றி " பெற்றால் சிலை, " தோல்வி " அடைந்தால் சிற்பி.

உறவினர்களில் யார் முக்கியம் என்பதை " உயிரற்ற " பணமே முடிவு செய்கிறது.

பணம் கொடுத்துப்பார் உறவுகள் உன்னை " போற்றும் ".
கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டுப்பார் மண்ணை வாரி
" தூற்றும் ".

பேசிப்பேசியே நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதெல்லாம் " பொய் ".
அவர்கள் பேச்சில் நாம் ஏமாந்து விடுகிறோம் என்பதே " உண்மை ".

மனைவி கேட்பதை எல்லாம் வாங்கி கொடுத்துச் சமாளிப்பவன் " புத்திசாலி ".
வாங்கி கொடுக்கிறேன் என்று சொல்லியே சமாளிப்பவன் " திறமைசாலி

குறைகளை " தன்னிடம் " தேடுபவன் தெளிவடைகிறான்.
குறைகளை " பிறரிடம் " தேடுபவன் களங்கப்படுகிறான்.

அறுந்து போன செருப்புக்கு வீட்டில் ஒரு இடம் " உண்டு ".
இறந்து போன மனித உடலுக்கு வீட்டில் ஒரு இடமும் " இல்லை

விழுதல் என்பது " வேதனை ".
விழுந்த இடத்தில் மீண்டும் எழுதல் என்பது " ~சாதனை~ ".







Others
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..