Posted By:peer On 8/26/2023 7:36:11 AM |
|
ஒரு வேதனை தரும் நிகழ்வு நிகழும் முன் அது நடந்து விடுமோ என எண்ணிப் பயப்படாதே.. கற்பனை செய்யாதே,
எதிர்கால விஷயங்களில் உங்கள் எண்ணங்களையும் பயத்தையும் திசை திருப்புங்கள் அவை அல்லாஹ் வின் ஞானத்தில் உள்ளவை.
ஒரு அடியானின் மீது துன்பம் இறங்கும்போது, அதோடு அல்லாஹ்வின் கருணையும் இறங்கும் என்பதை அறிந்துகொள்.
துன்பம் ஏற்படுவதற்கு முன் அதை நீங்கள் கற்பனை செய்தீர்கள் என்றால், நீங்கள் அல்லாஹ்வின் கருணையில்லாமல் துன்பத்தைப் பெற்று உங்கள் ஆன்மாவை அழித்துவிடுவீர்கள்
உறங்காத என்றும் நிலைத்திருக்கும் இறைவன் உங்களோடு இருக்கிறான் என்பதை உறுதியாக நம்புவது உங்கள் கடமையாகும் நிம்மதியாக இருங்கள்
எனவே அவனிடமே பொறுப்பை ஒப்படையுங்கள் மேலும் அவன் மீது உங்கள் நம்பிக்கையை வையுங்கள்.
மகிழ்ச்சியாக இருங்கள், நல்லதே நடக்கும் என எதிர்பார்த்து இருங்கள் ----டாக்டர்.உமர் அப்துல்காfபி -----கணியூர் முஹம்மது இஸ்மாயீல் நாஜீ பாஜில் மன்பயி
|